Posts

Showing posts from December, 2024

லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.

Image
 பகுதி 78. லலிதா சஹஸ்ர நாமத்திற்கு  ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல். #லலிதாசஹஸ்ரநாமம்# #சௌந்தயலஹரி#. நாப்யாலவாலரௌமாலி லதாபலகுசத்வயீ லக்ஷ்யரோம லதாதாரதா ஸாமுந்நேய .மத்யமா ஸ்தநபார தலந்மந்த்ய பட்டபந்த வலித்ரயா தநுமத்யா முலை மொட்டுக்கள் முளைத்த பாத்தி (ஸர்வலோக வச்யம்) "ஸ்திரோ கங்காவர்தஹ ஸ்தானமுகுலரோமாவலீலாதா- கலாவாலம் குண்டம் குஸுமாஷரதேஜோஹுதபூஜஹ! ரதேலீலாகாரம் கிமபி தவ நாபிர்கிரிசுதே பிலத்வாரம் சித்தர்கிரிஷனாயனாநாம் விஜயதே!" மலையரசரன் பெண்ணே! உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சூழலா?. இல்லை நகில்ளாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்து) பாத்தியா?. அல்லது மன்மதனுடைய ஓளியான அக்னியின் ஹோம குண்டமா?. இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?. அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்று சொல்முடியாத  அழகுடையதாக விளங்குகிறது. நாபியானது சுழல் மாதிரி வட்ட வடிவோடு ஆழம் தெரியயதாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உமையாகிச் சொல்லி.  அந்த நீர்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக ...

அர்த்தநாதீஸ்வரர்#தத்துவமும் எனது ஆன்மீக அனுபவமும்.

Image
 #அர்த்தநாதீஸ்வரர்# தத்துவமும் எனது ஆன்மீக அனுபவமும்.  இங்கு அர்த்தநாதீஸ்வரர் அம்பாள் தனது கணவருடன் ஶ்ரீசக்ரம் பிந்து ஸ்தானத்தில் காமேஸ்வரன் காமேஸ்வரியாக இணைந்து இருக்கும் தத்துவம். சபரிமலைக்கு மாலையிட்டு விரதம் ஆரம்பித்திலிருந்து நிறைய ஆன்மீக அனுபவங்கள். இருமுடி கட்டு முன்பு விநாயகர் மற்றும் சாஸ்தாவுக்கு அபிஷேக ஆராதனை. இருமுடி நாளன்று விநாயகருக்கு சதுர்தேங்காய் இட்டுச் செல்லும் போது லேசான மழை தூரல் அதுவே நல்ல சகுனம் என உணர முடிந்தது. Kk Nagar ஐய்யப்பன் கோவிலில் நுழையும் போது ஐயனுக்கு கற்பூர ஆரார்த்தி மற்றும் இருமுடி முடித்து கோவிலை விட்டு கிளம்பு முன்பு ஐயனுக்கு பால் மற்றும் நெய் அபிஷேகம். பம்பா நதியில் புனித நீராடல் மற்றும் பித்ருக்களுக்கு தர்பணம் முடித்து சிறியபாதை நடைப்பயணம் ஆரம்பம். வெகு நேரம் சந்நிதி மண்ணில் இருக்கும் பாக்கியம். மாலை பதினெட்டு படி தரிசனமும் மற்றும் 18 படி ஏறும் பாக்கியம். அன்று ஐயனுக்கு மாலை தங்க ஆபரண அலங்காரம். அதாவது ஜனவரி 14கில் நடப்பதை அங்கு தரிசனம் பண்ணும் பாக்கியம். அதனால் கிட்டத்தட்ட 10மணிநேரம் சந்நிதி மண்ணில் தங்கி இருக்க முடிந்தது. பிறகு பழனி மற...

ஆன்மீகம்

Image
 தெய்வத்தின் குரல் (முதல் பாகம்) ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப் பற்றி அநேக மகான்கள், கவிகள், ஸ்தோத்திரங்கள் செய்திருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மூன்று மிகவும் சிரேஷ்டமானவை.  முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி'.  ஸ்ரீ சங்கரர் பகவத் பாதர்கள் கைலாசத்துக்குப் போனபோது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றி செய்திருந்த சௌந்தர்யலஹரி சுவடிக்கட்டை நம் ஆச்சாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்தார். அதில் மொத்தம் நூறு சுலோகங்கள் இருந்தன.  ஆசாரியாள் கைலாசத்திலிருந்து திரும்பி வரும்போது, வாசலில் காவலிருந்த நந்திகேசுவரர், மகா பெரிய சொத்து கைலாசத்திலிருந்து போகிறதே என்று நினைத்து, ஆசாரியாள் கொண்டு வந்த சுவடியிலிருந்து தம் கைக்குக் கிடைத்ததை அப்படியே உருவிக் கொண்டுவிட்டார். முதல் 41ஸ்லோகங்கள்.  மட்டுமே ஆச்சாரியாள் கையில் நின்றன. பாக்கி 59 சுலோகங்கள் நந்திகேசுவரர் கைக்குப் போய்விட்டன.  அப்புறம் ஆச்சாரியாள் தாமே அந்த 59 சுலோகங்களையும் கடல் மடை திறந்த மாதிரிப் பாடிப் பூர்த்தி செய்துவிட்டார். இவ்விதத்தில்தான் இப்போது நூறு சுலோகங்களோடு உள்ள ‘ஸெளந்தரிய ல...