Posts

Showing posts from February, 2026

அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும்

Image
 #அடியார்களுக்காகஅவ்வப்போதுஇறைவனும்   அவர் திருவருளும் அம்மை அப்பராய்க் காட்சித் தந்து மறைவர். உண்மை,  அறிவு,  இன்பமாய் இருக்கின்ற சிவப்பரம்பொருளின்  திருவருளே சிவசக்தியாகவும்,  பராசக்தியாகவும், ஆதிபராசக்தியாகவும்  உலகைப் படைத்து உயிர்களைச் செயல்படுத்த வருகின்றது.  இப்படிச் சிவப்பரம்பொருளிலிருந்து வேறுபடாத திருவருளே பல்வேறு சக்தி வடிவங்களில் வருகின்றது. இதனை உணர்த்துவதே நவராத்திரிப் பண்டிகை.  சிவப்பரம்பொருளின் ஆற்றல் அல்லது சக்தி அருள்திருவுருவாய் நவசக்திகளாய் வருகின்றது. இவற்றை மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவையிருவ தமிழ் விரகர் திருஞானசம்பந்தப் பெருமான், “சினமலி கரியுரி செய்த சிவன், உறைதரு திருமிழலையை, மிகு தனமனர் சிரபுர நகர் இறை, தமிழ்விரகனது உரை ஒருபதும் மனமகிழ்வோடு பயில்பவர், எழில்   மலர்மகள், கலைமகள், சயமகள் இனமலி புகழ்மகள் இசைதர இருநிலன் இடைஇனிது அமர்வரே” – திருமுறை : 1 என்றும் குறிப்பிடுகின்றார்.  இதில் அவர் திருவீழிமிழலை எனும் தலத்திலுள்ள சிவப்பரம்பொருளைப் போற்றிப்பாடிய எம்பாடல்களைப் பாடினால்  சரசுவதி, இலட்சுமி,...

இறைவன் திருவருள்

Image
இதனாலேயே மணிவாசகப் பெருமான் இறைவன் திருவருளை, “பால் நினந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்று இறைவன் திருவருளை தாயினுக்கு ஒப்பிடுவார்.  “அருளது அரன் தனக்குச் சக்தியாகும்” என்று  சாத்திர நூல்கள் குறிப்பிடும். இறைவன் அன்பு என்றால்  அவன் ஆற்றல் அருள்.  இறைவன் சுடர் என்றால்  அவன் அருள் அச்சுடரின்  வெம்மை ஆகும்.  எனவே இறைவனின் திருவருள் அல்லது #அம்பாள் என்பது இறைவனின் ஒரு கூறே  தவிர வேறு ஒருபொருள் அல்ல. நாம் நினைப்பதுபோல இறைவனும் இறைவியும் வேறு அல்ல!  அவை ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரியாதவை.  எனவேதான்  சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை என்ற வழக்கு  உண்டாயிற்று. சிவத்திற்கும் சக்திக்கும் இல்லறத்தில் வருவதுபோல், கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் வருவதுபோல் சண்டைகள் வருவதில்லை.  சிவப்பரம்பொருளின் எண்ணப்படி அதன் திருவருள் செயல்களை நிகழ்த்தும். அதனாலேயே,  “எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்”  என்று சாத்திர நூலான சிவஞானசித்தியார் குறிப்பிடும். அம்பாள் எனப்படுபவள் தத்துவமாகவும்,  பாமர மக்கள் ...

எது பரம்பொருள்

Image
 எது பரம்பொருள் . #விநாயகனைச் சிவப்பரம் பொருளின் மூத்த மகன் என்றும்  #முருகனை அப்பரம் பொருளின் இளைய மகன் என்றும் கூறுவதுபோல்  #அம்பாளை அல்லது #சக்தியை அப் பரம்பொருளின் மனைவி என்று சிலர் உண்மை அறியாமல் கூறுவர். அம்மை அல்லது அம்பாள் என்கின்ற வடிவம் சிவப்பரம் பொருளின்  மனைவியோ  அல்லது விநாயகன் முருகன்  என்ற கடவுளர்களுக்கு அன்னையோ அல்ல.  எங்கும் எதிலும் நீக்கமற  நிறைந்திருக்கும்  சிவம் என்கின்ற பரம்பொருள்  ஓசை வடிவம் தாங்கி வந்த போது #விநாயகர் என்றும்  அறிவு வடிவம் தாங்கி வந்தபோது #முருகன் என்றும் அழைக்கப் படுவதாய் அறிவோம். அதைப்போன்றுதான் தன்  சிறப்பு நிலையில் உண்மை,  அறிவு,  இன்ப வடிவாய்  இருக்கின்ற பரம்பொருள் பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள்புரிவதற்காக எடுத்த இன்னொரு  வடிவம் #அம்பாள் வடிவம். தமிழர்களைப் போன்று பெண்களுக்கு உயரிய இடத்தைக் கொடுத்த பெருமை வேறு யாருக்கும் கிடையாது.  தமிழர்கள்,  கங்கை,  யமுனை,  காவிரி,  சரசுவதி என்று ஆறுகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்களைக் கொடுத்தார்கள். ...

அம்பாள்

Image
 #அம்பாள் #அம்பாள் (#சக்தி/#பராசக்தி) என்பது #சிவம் எனப்படும் பரம்பொருளின் ஆற்றல் வடிவம்,  பிரபஞ்சத்தை இயக்கும் #மாயாசக்தி. அவளே #மஹாமாயி இவர் சிவனோடு பிரிக்க முடியாதவாறு கலந்திருப்பவர், தாயாகவும்  பார்வதியாகவும்  வழிபடப்படுபவர்.  ஆடி,  புரட்டாசி (நவராத்திரி),  மார்கழி மாதங்கள்  அம்பாள் வழிபாட்டிற்கு உகந்தவை;  செவ்வாய்,  வெள்ளி,  பவுர்ணமி  நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் மருதாணி அணிந்து வழிபாடு செய்வது சிறப்பானது.  அம்பாள் வழிபாட்டின்  முக்கிய அம்சங்கள்: #பராசக்தி:  பிரம்ம சக்தியும், சிவமும் இணைந்த அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபமே அம்பாள். #வழிபாட்டு முறைகள்:  லலிதா சஹஸ்ரநாமம்,  அபிராமி அந்தாதி,  அம்மன் பாடல்கள் பாடுதல்  மற்றும்  தூப, தீப ஆராதனைகள் செய்தல். #விசேஷ காலங்கள்:  ஆடி மாதம்,  நவராத்திரி,  ஆடிப்பூரம்,  மற்றும்  பவுர்ணமி தினங்கள். #சிறப்பு:  திருநாகேஸ்வரம் போன்ற கோவில்களில் பவுர்ணமி நிலா ஒளி அம்பாள் மீது படும் அதிசய நிகழ்வுகள் நிகழும். திருகடையூர் போன்ற முக...

பக்லாமுகி

Image
 பிதாம்வர்தரன் தேவி பக்லாமுகி பரம்பிகம் . பகளாமுகி (Bagalamukhi) தேவி இந்து மதத்தின் பத்து மகாவித்யாக்களில் (தசமஹா வித்யா) எட்டாவது தேவியாக வழிபடப்படுகிறார்.  எதிரிகளை முடக்கி, வாக்குத் திறனை மேம்படுத்தி, தீய எண்ணங்களை அழிப்பவர் எனப் போற்றப்படுகிறார்.  மஞ்சள் நிற (பீதாம்பரி) உடையில், அமிர்தக் கடலின் நடுவில்,  தங்கச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கம்பீரமான வடிவம் கொண்டவர். வித்யா மஹாவித்யா ரூபம் நமாமி பரமேஶ்வரிம்॥1॥  யஸ்யா: அஜ்ஞாவஶதேவ் ரமதி ஸகல ஜகத் ।  ப்ரஹ்ம விஷ்ணுவின் ருத்ரனின் சக்தி வாய்ந்த சக்தி தாதிஹிதம்॥2॥  ஶ்ரீவித்யா பரம வித்யா அல்லது ஸாக்ஷாத் ப்ரஹ்ம ரூபிணி.  மீண்டும் பரவித்யா ஸ்வரூப ச நமோ மாதா: மீண்டும்॥3॥  தசாவதார வடிவில் உள்ள விஷ்ணு தன்னால் ஈர்க்கப்படுகிறார்.  தநர்வத் தாரயேத் விஸ்வம் பீதாம்பரன் வசி॥4॥  உலக அன்னைக்கு வணக்கம், எல்லாம் அறிந்தவருக்கு வணக்கம்.  நமஸ்தே பரமேஷானி த்ராஹி மா ஶரணாகதம்॥5॥ பொருள் - மஞ்சள் ஆடை அணிந்தவரே!   பகல் முகத்தின் வடிவில் அமைந்துள்ள உலகத் தாயே!   ஓ மகாவித்யா ஸ்வரூப பரமேஸ்...

உண்மையான பக்தி

Image
 உண்மையான பக்தி என்பது எதிர்பார்ப்புகள், ஆடம்பர சடங்குகள் மற்றும் பொருள் சார்ந்த ஆசைகள் கடந்து, இறைவன் மீது கொள்ளும் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு மற்றும் முழுமையான சரணாகதி ஆகும். உண்மையான பக்தி என்பது எதிர்பார்ப்புகள், ஆடம்பர சடங்குகள் மற்றும் பொருள் சார்ந்த ஆசைகள் கடந்து, இறைவன் மீது கொள்ளும் தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு மற்றும் முழுமையான சரணாகதி ஆகும்.. இது அன்பை அடிப்படையாகக் கொண்டு,  அனைத்து உயிர்களிலும் இறைவனைக் கண்டு,  பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் வெளிப்படுகிறது. உண்மையான பக்தி என்பது எதிர்பார்ப்புகள்,  ஆடம்பர சடங்குகள் மற்றும் பொருள் சார்ந்த ஆசைகள் கடந்து,  இறைவன் மீது கொள்ளும் தூய்மையான,  நிபந்தனையற்ற அன்பு மற்றும் முழுமையான சரணாகதி ஆகும்.  இது அன்பை அடிப்படையாகக் கொண்டு, அனைத்து உயிர்களிலும் இறைவனைக் கண்டு, பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் வெளிப்படுகிறது.. #உண்மையான பக்தியின் முக்கிய அம்சங்கள்: #நிபந்தனையற்ற அன்பு:  பக்தி என்பது லோப நோக்கத்திற்காக (வரம் கேட்க) இறைவனை வழிபடுவதல்ல, அன்பிற்காகவே வழிபடுவது. #சரணாகதி:  கஷ்டங்கள் வந்தால...

அம்பாளின்திருவடிதாமரை

Image
 #அம்பாளின்திருவடிதாமரை இதுகாரும் அபிராமி பட்டரின் #அபிராமிஅந்தாதி89பாடல்கள் நாம் கண்டு களித்தோம். அதில் அபிராமி பட்டர் எங்கே எதைப் பற்றி பேசினாலும் அவர் கடைசியில் அம்பாளின் திருப்பாதத்தை இருக்கப் பற்றி இருப்பார். மஹான்கள் நன்கு உணர்ந்தவர்கள் , அவர்களுக்கு அழிக்கின்ற தேகம் முக்கியமில்லை. அதில் உறைக்கின்ற ஆன்மா தான் முக்யம். அதனால் பட்டரின் மனம் முழுவதும் அம்பாளின் திருபாதம் மட்டும் தெரியும் தவிர வேறு எதுவும் அவருக்கு பொருட்டல்ல. இதை தான் சங்கர பகவதாபாதாள் தனது  #90வதுசௌந்தயலஹரிஸ்லோகத்தில்  அறுகாலி  வண்டுப் போல் நான் முழுவதும் உனது திருபாதத்தில் ஒடுங்கவேண்டும் என்று கூறி இருப்பார். நிராதாராம் தத்வா  புவனபதிக்ருத் பிரத்யயமகி கதம் வா மன்யேதா த்ருபதமபி தத்பாதயுகளம் இதம் புத்ரீகாரம் ப்ரதிசதி  ஸுதார்த்ராத்ருபதயோ பவத்யத்யாஸக்தம் பஜதி  மதுபத்வம் வசகதா அம்பிகையின் பாதங்கள், பக்தர்களின் நியாயமான ஆசைகளை  (சத்பாதம்)  #பொருள் நிறைவேற்றுவதில் தேன் போன்ற கருணையுடன் திகழ்கின்றன.  அந்த பாதங்கள்,  அகங்காரம் இல்லாதவர்களுக்கு ஆதரவாகவும்,  அவர்களின...

பரபிம்மத்தின் சக்தியானது ,அம்பாள்

Image
 #நேற்றுஇந்தஉலகேஅம்மையும்அப்பனும்  என பதிவிட்டு இருந்தேன். அதற்கு காரணம் சாக்த தத்துவத்தின் படி  பரபிம்மம் அசையாது யோக நிஷ்டையில் ப்ரளய காலத்திற்கு பிறகு இருக்கும். பரபிம்மத்தின் சக்தியானது , அது பரபிரம்மத்திலிருந்து வெளிப்பட்டது. எதற்காக பரபிரமம் யோக நிஷ்டையிலிருந்தால், சிருஷ்டியை யார் செய்வது. அதனால் பரபிரம்மத்தை சலனப்படுத்தி ச்ருஷ்டியை ஏற்படுதுவது அம்பாள் என்கிறது சாக்தம். எனவே அம்மையும் அப்பனும் இருவரும் இணைந்தது தான் இந்த உலகம் என்கிறார்கள் ஞானிகள். எனவே ஒன்றிலிருந்து மற்றொன்று வெளிப்பாட்டை விளக்கவே. #அர்த்தநாதீஸ்வரர் தத்துவம் . அதுவே #சிவசக்தி ஐக்கியம். இதை தான் சங்கர பகவத் பாதாள் சௌந்தயலஹரி முதல் பாடலில் விளக்கியுள்ளார். சிவ: சக்த்யா யுக்தோ  யதி பவதி சக்த:  ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ ந கலு குசல:  ஸ்பந்திதுமபி அதஸ்த்வாம் ஆராத்யாம்  ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும்  ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய:  ப்ரபவதி. சிவசக்தி யுக்தோ  (சிவ: சக்த்யா யுக்தோ) என்பது ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி முதல் ஸ்லோகத்தின் தொடக்கம்.  சக்தி (அருள்/ஆற்றல்) உடன் ...

அம்மையும் அப்பனும்

Image
 போன  வார சனிக்கிழமை #சனிவாரபிரதோஷம். அப்பன் சிவப்பெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள். அதற்கு மறுநாள் #மஹாசிவராத்திரி ஊரே கோலக்கோலப்பட்டது. அவற்றில் ஒன்று அம்மையும் அப்பனும் திருமணக் கோலத்தில் இணைந்த நாள். மற்றொன்று தேவர்கள் பாற்கடலை கடைந்த போது உருவான ஆலகால விஷத்தை சிவப்பெருமான் உண்ட நாள். நேற்று வடமாவட்டங்களில் கொண்டாடும் #மயானக்கொள்ளை திருவிழா. அடுத்து அடுத்து மூன்று நாட்கள் அம்மைக்கும் மற்றும் அப்பனுக்கும் மிகவும் விசேஷமான நாள். இதன் ஐதீகம். சிவப்பெருமான் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதால். மயானத்தில் இருந்து சிவராத்திரி மறுநாள் வரும் அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி மூலமாக சாப விமோசனம் பெற்றார் என்பது ஐதீகம். இவை அனைத்திலும் அம்பாள் அப்பனுடன் கூட இருந்து,அப்பனுக்கு உதவி இருப்பார். இவை அனைத்தும் நமக்கு  உணர்த்துவது கணவன் மனைவிடம் உள்ள அந்நோன்யத்தை விளக்கும் விதமாக அமைந்து இருக்கும். காரணம் ஆதிசங்கரர் அம்பாளை குறிப்பிடும் போது,உனது தடாங்க மஹிமை மற்றும் உனது பெருமை அப்பனின் விஷமானது அமிர்த மாற்றி அவரை காப்பாறியது என்று பாடுவார். அதனால் அமிர்த உண்ட அனைவரும் ஒன்றுமில்லாமல் ஆனாலும...

சிவனின் பிரம்மஹத்தி தோஷமும் மற்றும் ளயானக் கொள்ளையும்

Image
சிவன் தன் அம்சமான பைரவர் மூலம் பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், பிரம்மஹத்தி தோஷம் சிவபெருமானைப் பிடித்தது. இந்தத் தோஷம் நீங்க, அவர் மயானத்தில் வாழ்ந்து அங்காளபரமேஸ்வரியை வணங்கியதாகவும், மேல்மலையனூரில் சிவராத்திரியன்று தோஷம் நீங்கியதாகவும் ஐதீகம். தீர்த்த யாத்திரை மற்றும் சிறப்பு பூஜைகள் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தின் கடும் பாதிப்புகள் நீங்கும். சிவன் தன் அம்சமான பைரவர் மூலம் பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், பிரம்மஹத்தி தோஷம் சிவபெருமானைப் பிடித்தது. இந்தத் தோஷம் நீங்க,  அவர் மயானத்தில் வாழ்ந்து அங்காளபரமேஸ்வரியை வணங்கியதாகவும், மேல்மலையனூரில் சிவராத்திரியன்று தோஷம் நீங்கியதாகவும் ஐதீகம்.  தீர்த்த யாத்திரை மற்றும் சிறப்பு பூஜைகள் மூலம் பிரம்மஹத்தி தோஷத்தின் கடும் பாதிப்புகள் நீங்கும்.  முக்கிய தகவல்கள்: காரணம்:  பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது தலையை சிவபெருமான் வெட்டியபோது, அந்தப் பாவம் அவரைப் பற்றிக்கொண்டது. பரிகாரத் தலங்கள்: விழுப்புரம் மேல்மலையனூர்,  திருவிடைமருதூர்  (முகப்பு வாசல் வழியாகச் சென்று, பின்வாசல் வழியாக வெளியேறுதல்)  மற்றும்  ர...

சிவபெருமானின் அட்ட வீரச்செயல்கள்

Image
 சிவபெருமானின் அட்ட வீரச்செயல்கள் மற்றும் அட்டவீரட்டத் தலங்கள்! 🙏🔱 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🌸 சிவபெருமான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட எட்டு இடங்களில் பெரும் வீரச்செயல்களைப் புரிந்துள்ளார். அந்தப் புண்ணியத் தலங்களை 'அட்டவீரட்டத் தலங்கள்' என்று அழைக்கிறோம். அந்தத் தலங்கள் மற்றும் அங்க நிகழ்ந்த வரலாறு இதோ: 1. #திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தை கொய்தது 🪷 படைப்புக் கடவுளான பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் கொய்து, அவரது ஆணவத்தை அடக்கிய தலம். 📍 இடம்: தஞ்சாவூர் அருகே. 2. #திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது 🛡️ துளி இரத்தம் கீழே விழுந்தாலும் பல அசுரர்கள் தோன்றும் வரம் பெற்ற அந்தகாசுரனை, சிவபெருமான் தனது சூலத்தால் குத்தி அழித்த தலம். 📍 இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம். 3. #திருவதிகை - முப்புரம் எரித்தது (திரிபுர தகனம்) 🔥 தாமரக்கண்ணன், வித்யுன்மாலி, தாரகாட்சன் ஆகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளை தனது சிறு புன்னகையாலேயே எரித்து சாம்பலாக்கிய தலம். 📍 இடம்: பண்ருட்டி, கடலூர். 4. #திருப்பறியலூர் - தக்கன் யாகத்தை அழித்தது 🐐 தட்சனின் ஆண...

மகாசிவராத்திரி

Image
 #மகாசிவராத்திரி   மகாசிவராத்திரி என்பது சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாளாகும்,  இது ஆண்டுதோறும் மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி இரவில் (பிப்ரவரி அல்லது மார்ச்) கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் பார்வதி தேவியைத் திருமணம் செய்த நாள்,  லிங்க வடிவில் தோன்றிய நாள்,  மற்றும்  பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்தி உலகைக் காத்த நாள் (நீலகண்டன்) எனப் பல புராணக் காரணங்கள் இதற்கு உண்டு.  மகா சிவராத்திரி உருவானதன் முக்கிய வரலாறுகள்: லிங்கோத்பவர்  (அடிமுடி காணா ஜோதி): பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது,  சிவபெருமான் அடிமுடி காண முடியாத பெரும் சோதிப் பிழம்பாக (லிங்கமாக) தோன்றிய நாள் இதுவாகும். நீலகண்டன்:  தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெற பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஆலகால விஷத்தை, உலகம் அழியாமல் இருக்க சிவபெருமான் அருந்தி, தன் கண்டத்தில் (கழுத்தில்) தாங்கி "நீலகண்டன்" ஆனார். சிவன் - பார்வதி திருமணம்:  சிவன் மற்றும் பார்வதி தேவியின் திருமண இரவு. இது சிவ சக்தி இணைப்பைக் குறிக்கிறது. சிவ தாண்டவம்:...

பதினாறு சடங்குகள்

Image
முன்பு யாம் பதிவிட்டது போல் உடல் உயிர் ஆன்மா.   இந்த மனித பிறவி எடுத்ததின் நோக்கம் என்ன என்பதையும் மற்றும் செய்யவேண்டிய பதினாறு சடங்குகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். ஹிந்து மதம் எவ்வளவு நல்ல விஷயங்களை போதனை செய்து உள்ளது. இவை அனைத்தும் நம் மும்பாட்டன் நன்கு கற்றுக்கொடுத்தது தவிர மற்றவர்கள் நமக்கு கற்பிக்கவில்லை. அதனால் தான் நாம் உலக்கிற்கு விஸ்வ குருவாக விளங்கினோம் என்பதை நாம் அறிய வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பதிவை யாம் பதிவிட்டு வருகிறோம் இந்து சமயத்தினர் பிறப்பு முதல் இறப்பு வரை செய்ய வேண்டிய  16 சடங்குகள் குறித்து கல்ப சூத்திரங்கள்  மற்றும்  தர்ம சாத்திரங்களில் குறித்துள்ளது.  இந்த சடங்குகளில் பல புரோகிதரைக் கொண்டு செய்ய வேண்டும். சடங்குகளின் விவரம் பின்வருமாறு #கர்ப்பதானம் -  முதலிரவு அல்லது சாந்தி முகூர்த்தம் #பும்சவனம் -  கர்ப்பவதிக்கு 3 அல்லது 4ம் மாதத்தில் செய்ய வேண்டியது. #சீமந்தம் கர்ப்பவதிக்கு 5 அல்லது 7ம் மாதத்தில் செய்ய வேண்டியது. #ஜாதகர்மா -  பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி நீக்கும் சடங்கு #பெயர்சூட்டுதல் -...

ஹிந்து மதம் போதிப்பது என்ன

Image
இ ந்து மதம் (Hinduism) என்பது உலகின் மிகப் பழமையான மற்றும் மூன்றாவது பெரிய மதமாகும். இது ஒரு தனிநபரால் தோற்றுவிக்கப்படாமல், பல்வேறு நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் தத்துவங்களின் தொகுப்பாக உருவானது.. இந்து மதம் (Hinduism) என்பது உலகின் மிகப் பழமையான மற்றும் மூன்றாவது பெரிய மதமாகும்.  இது ஒரு தனிநபரால் தோற்றுவிக்கப்படாமல்,  பல்வேறு நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் தத்துவங்களின் தொகுப்பாக உருவானது.. இந்து மதம் (சநாதன தர்மம்) உலகின் மிகப் பழமையான மற்றும் மூன்றாவது பெரிய மதமாகும்.  இது ஒரு வாழ்க்கை முறை, தத்துவம் மற்றும் பலதரப்பட்ட நம்பிக்கைகளின் தொகுப்பு.  சிந்து சமவெளி நாகரிகத்தில் வேரூன்றிய, வேதங்களை அடிப்படையாகக் கொண்ட  இம்மதம், பிரம்மம் (உச்ச கடவுள்), கர்ம வினை, மறுபிறப்பு மற்றும் முக்தி ஆகியவற்றை நம்புகிறது. இதற்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனர் கிடையாது.  இந்து மதத்தின் முக்கிய அம்சங்கள்: பிரிவுகள்:  இந்து மதம் முக்கியமாக நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சைவம், வைஷ்ணவம், சாக்தம், மற்றும் ஸ்மார்த்திசம். கடவுள் கோட்பாடு:  பிரம்மம் என்பது அனைத்தில...

உடல்உயிர்ஆன்மா நிறைவு பகுதி

Image
 #உடல்உயிர்ஆன்மா #இதுவரைஎட்டுபகுதிகளாக கண்டதை இன்று ஒரு பகுதியாக காணலாம். #அவைதங்களின்பார்வைக்கு நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான  உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பன பற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்.  எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளது  கேள்வி பதில்களையும் மேலும்  பல தேடல்களில் இருந்தும் நான் அறிந்துகொண்ட, உணர்ந்து கொண்ட, புரிந்துகொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். முதலில் உடல் என்றால் என்ன என்பதனை பார்க்கலாம்.  உடல் என்பது பல சிறிய கலங்களால் ஆன ஓர் அமைப்பு. அதாவது பல அணுக்களால் ஆனது உலோகம்.  அதாவது ஒரு உலோகத்தின் மிகச்சிறிய துகள் அணு என்று அழைக்கப்படும்.  இன்னும் விரிவாக்கப் பார்க்கப் போனால் ஒரு உலோகத்தை மேலும் மேலும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு போகும்போது இறுதியில் மிஞ்சிவது அணு எனக் கொள்ளலாம். எனவே உலோகங்கள் அணுக்களால் (அணு) ஆனவை போல உடல்கள் கலங்களால் (க...

உடல் உயிர் ஆன்மா என்பது என்ன பகுதி-8.

Image
 உடல் உயிர் ஆன்மா என்பது என்ன பகுதி-8. உதாரணமாக  ஒரு மரம் நூறு ஆண்டுகள் வாழும் ஆனால் அதிலுள்ள கலங்கள் புதிய கலங்களை உருவாக்கிய பின்னர் முதிர்ந்து இறந்து விடுகின்றன, ஒரு கலத்தின் வாழ்க்கைக் காலம் ஒரு வாரமாகக்கூட இருக்கலாம். உதாரணமாக  மனிதரில் குருதிக் கலங்கள் புதிய குருதியை (இரத்தத்தை) உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு கட்டத்தில் அவை இறந்து போகும்.  அதுபோல தோலில் உள்ள சில கலன்கள் இறந்து தலை முடியாகவும், நகமாகவும் வளர்கின்றன. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும்  ஒரு உயிரில் இருந்துதான் இன்னொரு உயிர் பரிணமிக்க முடியும்.  அதாவது உடல் உயிரோடு இருக்க உயிர் தேவை. எனவே எமது உயிர் எமது மூதாதையரின் இருந்து வந்ததாகும். எனவே எமது குணாதிசயங்களும் எமது பரம்பரையை ஒத்ததாக இருக்கும்.  இதன் அடிப்படையிலேயே #DNATest” மூலமாக ஒருவருடைய பரம்பரை கண்டுபிடிக்கப் படுகிறது இந்த முறையை விளங்கிக்கொள்ள இன்னொரு உதாரணமாக நெருப்பை எடுத்துக் கொள்ளலாம்.  அதாவது ஒரு இடத்தில் எரியும் நெருப்பில் இருந்து அதனைக் கொளுத்தி எடுத்து இன்னொரு இடத்தில் அல்லது பல இடத்தில் எரிய வைக்கலாம்...

#ஆறாம் அறிவு என்பது பகுதி-7

Image
 #ஆறாம் அறிவு என்பது பகுதி-7 . அதாவது அந்த அறிவிற்கான ஆற்றல் குண்டலினி சக்தியின் மூலமாகக் கிடைக்கிறது.  இந்த “குண்டலினி” என்ற சக்திரூபமான குண்டலினி சக்தி மனிதர்களால் மட்டுமே அறிந்து உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அந்த “குண்டலினி” மூலமாக பெறப்படும் ஆறாவது அறிவு என்பது என்ன என்று நாம் ஆராயும்போது, ஆறாவது அறிவு என்பது இறைவனை உணரும் அறிவு என்பதே ஆகும்.  அதாவது இறைவனை உணர உதவும் கருவியே குண்டலினி ஆகும். குண்டலினி என்பது இறைவனை உணரும் கருவி மட்டுமல்ல யோகத்தின் மூலமாக இறைவனை உணர்ந்து, அறிந்து,  நாம் முற்பிறவிகளில் செய்த பாவமெல்லாம் களைந்து, பிறவிப்பிணி போக்கி அந்த ஜோதியுடன்  (ஆதியுடன், மூலத்துடன், சிவனுடன்) கலக்கவும் (ஐக்கியமாகவும் முத்தியடையவும்) மனிதருக்கு அமைந்த ஆறாவது அறிவாகும். அதாவது மனிதனின் ஆறாவது அறிவுக்குக் காரணமான “குண்டலினி” சக்தியினால் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ளும் ஞானத்தை ஒருவன் பெற்றுக்கொள்ள முடியும். இறைவனை அறிந்துகொள்ளும் மனிதர்களே ஆறறிவு பெற்ற மனிதர்கள் ஆவார்கள் என்பது சித்தர்களின் உபதேசமாகும். தாம் கொண்டுள்ள ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அற...

உடல்உயிர்ஆன்மாபகுதி6

Image
 #உடல்உயிர்ஆன்மாபகுதி6 . புல்லில் இருந்து மனிதன் வரையுள்ள அத்தனை உயிரினத்திலும்  ஆன்மா வாழ்கிறது.  அதாவது ஒரு உடல் உயிருடன் இருக்கும் வரை ஆன்மாவானது அவ்வுடலில் வாசம் செய்கிறது.  ஒரு உயிருடல் செயற்படும் தன்மை அற்றுப் போகும் போது, ஆன்மாவானது தனது அறிவுத்திறனைப் பயன்படுத்தி அவ்வுயிருடலைத் தக்க வைத்துக் கொள்ளப் (பாதுகாக்கப்) போராடும். முடியாத போது அவ்வுடலில் வாசம் செய்யும் ஆன்மா வெளியேறுகிறது என்பதே உண்மையான கோட்பாடாகும்.  இதுவே #மரணம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஒரு உதாரணமாக  ஒரு மான் காட்டில் தூங்குகின்றது என்று எடுத்துக் கொள்வோம். தூக்கத்தின்போது அதன் ஐம்புலன்களும் செயலற்ற (அறிவற்ற) நிலையில் இருக்கும். அப்போது அவ்வுடலில் வாசம் செய்யும் ஆன்மாவானது உடலுடன் தொடர்பற்ற நிலையில் இருக்கும்.  அப்போது ஒரு புலி வந்தால் அப்படியே அம்மானைக் கொன்று உண்ணும்.  இந்நிகழ்வு அவ்வுடலில் இருந்த ஆன்மாவின் அறிவுக்கு எட்டாமல் நடை பெறுவதால்  ஆன்மாவினால் அவ்வுடலைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது.  ஆனால் அம்மான் சுயநினைவில் இருந்தால் அங்கு வாசம்செய்யும் ஆன்மாவ...

உடல்உயிர்ஆன்மா - பகுதி5.

Image
 #உடல்உயிர்ஆன்மா - பகுதி5. உதாரணமாக கடலில் வாழும் உயிரினங்களின் உடல்,  நீரில் வாழ்வதற்கு ஏற்பவே அமைந்திருக்கின்றது. உயிர் அந்த உடலினை இயக்குகின்றது.  நீரில் இருக்கும் வரை அதன் உடலினை உயிரானது அழியாது பாதுகாக்கின்றது.  அவ்வுடலினுள் வாழும் ஆன்மாவானது அவ்வுடல் வாழ்வதற்குரிய திறனைக் கொடுக்கிறது. அதாவது கண்கள் மூலமாக இரையைக் கண்டறிந்து, அதனைத் தேடிச் சென்று எடுத்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது.  எதிரியிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் ஆற்றலை ஆன்மா கொடுக்கிறது. ஆனால் அதே உயிரினம் எப்பொழுது நீரில் இருந்து வெளியேறி தரைக்கு வருகின்றதோ, அப்பொழுது அந்த உயிரினால் அந்த உடலை இயக்க முடியாதிருக்கும்.  காரணம் தரையில் இருந்து இயங்க அந்த உடலுக்கு ஆற்றல் இல்லை. இந்நிலையில் ஆன்மாவானது,  அந்த உடலின் உறுப்புகளை தன்னால் இயன்ற அளவு பயன்படுத்தி மீண்டும் நீரினுள் செல்ல முயற்சிக்கும்.  ஆனால் மீண்டும் நீரினுள் செல்ல முடியாது போகும்போது அவ்வுடலின் உறுப்புக்கள் ஓவ்வொன்றாக இறந்து (உயிரற்றுப்போய்) செயலற்றுப்போக அவ்வுடலிலிருந்து ஆன்மா வெளியேறும்.  இதுவே மரணம் என அழைக்கப்...