ஏன் இந்த உமையொருபாகன்?.
உமையொருபாகன் ஏன் இந்த உமையொருபாகன்?. நேற்றைய முந்தைய நாள் அபிராமி அந்தாதி பதிவு. மூன்று கோலங்கள். வவ்விய பாகத்து இறைவனும் நீயும் மகிழ்ந்திருக்கும், செவ்வியும் உங்கள் திருமண கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து என்னை ஆட்கொண்ட பொற்பாதமும் ஆகிவந்து. வவ்விய பாகம் - எஞ்சிய பாகம் - எது எஞ்சிய பாகம் அம்பாள் ஆட்கொண்டத்தின் மற்றொரு பாகம். அதாவது வாமபாகத்தின் மற்றொரு பாகம் வலது பக்கம் - சிவன், உமையம்மை இருவரும் மகிழ்ந்திருக்கும் கோலம் - அர்த்தநாரீஸ்வர கோலம். அம்மையப்பர் கோலம் என்றும் சொல்வர். கொடிய காலன் என் மேல் பாசக்கயிற்றை விடும்போது, நம் சிந்தனையுள் இருக்கவேண்டியவை: 1. அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் (திருச்செங்கோடு என்னும் ஸ்தலத்தில் இக்கோலம் ப்ரசித்தி) 2. சிவன் - பார்வதி கல்யாண கோலம் திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போன்ற ஸ்தலங்களில் இக்கோலம் ப்ரசித்தி) 3. நம் அறியாமையினை அகற்றும் அம்பாளின் பொற்பாதம் இம்மூன்றும் தன் முன்னே நிற்க வேண்டும் என்று பட்டர் வேண்டுகிறார். மேலே கூறப்பட்டுள்ள அர்த்தநாரீச்வர கோலம், திருமண கோலம் ஆகியவை ஆகிய இரு கோலங்கள் அம...