அபிராமிஅந்தாதிபாடல் -12#
#அபிராமிஅந்தாதிபாடல் -12#
மனம் த்யானத்தில் நிலை பெறும்
கண்ணியது உன் புகழ்,
கற்பது உன் நாமம்,
கசிந்து பத்தி பண்ணியது
உன் இரு பாதாம்புயத்தில்,
பகலிரவா
நண்ணியது உன்னை நயந்தோர்,
அவையத்து நான்
முன்செய்த புண்ணியம் ஏது
என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே
அன்னையே, அபிராமியே,
புவி - உலகம் ஏழினையும் படைத்தவளே,
#அவளேலோகமாதாஎன்பதைகூறுகிறார்#.
நான் எப்போதும் நினைத்திருப்பது உன் புகழே.
#நான்உன்னைமறவாமல்உன்னையைஎன்சிந்தையில்வைத்துள்ளேன்#.
நான் கற்பது உன் நாமத்தினையே.
#கற்பதுஎன்பதுபாராயணம்செய்வதுஅல்ல# ,அதை திரும்ப திரும்ப சொல்லி ஓவ்வொரு முறையும்பதிய அர்த்தத்தை உணருதல்#
பக்தி செய்வது உன் இரு திருப்பாதங்களையே.
உனது பாதத்தில் சரணாகதி அடைவது
இரவும், பகலும் சேர்ந்திருப்பது உன் அடியார்களுடனேயே.
சத்சங்கமாக இருந்து நாமபாராயணம் செய்வது.
இவ்வாறு நான் இருப்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனோ? -
இவ்வாறு நான் செய்வதற்கு நான் முன்ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்து இருந்தேனோ.
என தனக்கு தானே கேள்வியை எழுப்பிய பட்டர் மற்றும் மனம் உருகி பாடுயதே அபிராமி அந்தாதி என்ற தமிழ் கிரந்தம்.
இதிலும் சத்சங்கத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது.
சத்சங்கமாக ஒரு காரியத்தை செய்போது அதன் பலனே பல மடங்காக இருக்கும்.
#ஓம்அபிராமிதாயே#

Comments
Post a Comment