பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).

 பெண் குழந்தைகளுக்கு அம்பாளின் திருநாமங்கள் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும்.


லலிதா சகஸ்ர நாம பெயர்கள்


 (பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).



ஸ்ரீமாதா - சிறப்பு மிக்க அன்னை


ஸ்ரீமகாராஜ்ஞீ - சிறப்பு மிக்க பேரரசி


சிம்ஹாசனஸே்வரி - சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்பவள்


பானு சகஸ்ராபா - சூரியனுக்கு இணையானவள்


லாவண்யா- பேரழகி


அருணா - சிவந்தவள்


பூஷிதா - ஆபரணம் சூடியவள்


சிவா - சிவமாக இருப்பவள்


காமாக்ஷீ - அழகான கண்கள் உடையவள்


காமதாயிநீ - விரும்பியதை வழங்குபவள்


ஹர்ஷிதா - மகிழ்ச்சி கொண்டவள்


நந்திதா - மகிழ்ச்சி கொண்டவள்


வர்ஷிணீ - பொழிபவள்(அருள்)


வைபவா- பெருமை மிக்கவள்


பங்கஜா - தாமரை முகம் கொண்டவள்


தாரிணீ - தாங்குபவள்


ஆத்மிகா - தானாகி நிற்பவள்


மந்த்ர ஆத்மிகா - மந்த்ரமே தானாகி நிற்பவள்


ரஸிகா - ரசனை மிக்கவள்


ஸங்கேத பாலிநீ - ரகசியம் காப்பவள்


குலஅங்கநா - குலமகள்


கெளலினீ - சிவனும் சக்தியும் சேர்ந்த வடிவினள்


லதா - கொடி போன்றவள்


ஸமருசி - ஒளியுள்ளவள்


ஸம்ஸ்திதா - மேலானவள்


மஹ ஆஸக்தி - திருவிழாவில் ஈடுபாடுள்ளவள்


குண்டலினி - குண்டலம் போன்ற வடிவமுள்ளவள்


பவானி - பவனது பத்தினி


பாவனா கம்யா - பாவனையால் அடையத்தக்கவள்


பத்ர ப்ரியா - மங்களத்தில் பிரியமுள்ளவள்


பத்ர மூர்த்தி - மங்கள வடிவானவள்


பக்தி பிரியா - பக்தியில் பிரியமுள்ளவள்


ஸெளபாக்யா - பாக்கியம் கொண்டவள்


பக்தி கம்யா - பக்தியால் அடையத்தக்கவள்


பக்தி வச்யா - பக்திக்குக் கட்டுப்பட்டவள்


சாம்பவீ - சம்புவின் மனைவி


சாரதா ஆரார்த்யா - சாரதாவால் வழிபடத்தக்கவள்


சர்வாணீ - சர்வன் என்னும் சிவனது பத்தினி


சர்மதாயினி - சுகம் தருபவள்


சாங்கரீ - சங்கரரின் மனைவி


ஸ்ரீகரீ - செல்வத்தைத் தருபவள்


சாத்வீ - பதிவிரதை


சாத உதரீ - இளைத்த வயிறு உள்ளவள்


சாந்தி மதீ - மன அடக்கமுள்ளவள்


நிராதாரா - ஆதாரமாக எதையும் கொள்ளாதவள்


நிரஞ்ஜனா - அழுக்கற்றவள்


ஸாத்வீ - பதிவிரதை


நிர்லேபா - அழுக்கற்றவள்


நிர்மலா - அழுக்கற்றவள்


நித்யா - நித்யமானவள்


நிராகாரா - ஆகிருதியற்றவள்


நிராகுலா - கலக்கம் அற்றவள்


நிர்குணா - குணங்கள் அற்றவள்


நிஷ்கலா - கூறுபடாதவள்


சாந்தா - சாந்த வடிவினள்


நிஷ்காமா - விருப்பமில்லாதவள்


நித்யமுக்தா - பந்தத்திலிருந்து விடுபட்டவள்


நிர்விகாரா - மாறுதல் இல்லாதவள்


நிஷ்பிரபஞ்சா - பிரபஞ்சத்தில் இருந்தும் வெளிப்பட்டவள்


நிராச்ரயா - சார்பு இல்லாதவள்


நித்யசுத்தா - எப்போதும் துாயவள்


நித்யபுத்தா - என்றும் அறிவாக இருப்பவள்


நிரவத்யா - குறை இல்லாதவள்


நிரந்தரா - இடைவெளியற்றவள்


நிர்காரணா - காரணம் இல்லாதவள்


நிஷ்கலங்கா - களங்கம் அற்றவள்


நிர்உபாதி - உபாதியற்றவள்


நிரீஸ்வரா - தன்னை அடக்கியாள்பவர் இல்லாதவள்


நீராகா - ஆசையற்றவள்


ராகமதனீ - ஆசையைக் கடைந்து வெளிப்படுத்துபவள்


நிர்மதா - மதம் இல்லாதவள்


மதநாசினீ - மதத்தை அழிப்பவள்


நிச்சிந்தா - சிந்தையற்றவள்


நிர்மோஹா - மதிமயக்கம் அற்றவள்


நிர்மமா - மமதை இல்லாதவள்


மமதா ஹந்த்ரீ - மமதையை போக்குபவள்


பாப நாசினீ - பாவத்தைப் போக்குபவள்


நிர்லோபா - பேராசை இல்லாதவள்


லோப நாசினீ - பேராசையைப் போக்குபவள்


நிஸ் சம்சயா - சந்தேகம் அற்றவள்


நிர் பவா - பிறப்பு அற்றவள்


பவ நாசினீ - பிறப்பு நீக்குபவள்


நிர்விகல்பா - விகல்பமற்றவள்


நிர்பேதா - பேதமற்றவள்


ம்ருத்யு மதனீ - மரணத்தைப் போக்குபவள்


நிஷ்கிரியா - செயலற்றவள்


நிஸ்துலா - இணையற்றவள்


நீலசிகுரா - நீண்ட கூந்தலுள்ளவள்


நிர் அபாயா - அபாயமற்றவள்


நிர் அத்யயா - வரம்பு மீறாதவள்


துர்லபா - எளிதில் அடைய முடியாதவள்


துர்க்கமா - எளிதில் நெருங்க முடியாதவள்


துர்க்கா - துர்க்காதேவியாக இருப்பவள்


சுகப்ரதா - சுகம் தருபவள்


துராசார சமனீ - தீயபண்புகளை அடக்குபவள்


தோஷ வர்ஜிதா - தோஷம் அற்றவள்


சர்வஜ்ஞா - எல்லாம் அறிந்தவள்


சாந்திர கருணா - கருணை மிக்கவள்


சர்வ சக்திமயீ - சக்தி மயமானவள்


சர்வ மங்களா - மங்கள வடிவினள்


சத்கதி பிரதா - நற்கதி வழங்குபவள்


சர்வஸே்வரீ - தலைமையானவள்


சர்வமயீ - எல்லாமாக இருப்பவள்


மந்திர ரூபிணீ - மந்திர வடிவானவள்


யந்திர ஆத்மிகா - யந்திர வடிவானவள்


தந்திர ரூபா - தந்திர வடிவானவள்


மனோன்மணீ - மனோன்மணி


மாகஸே்வரீ - மகஸே்வரரின் பத்தினி


மகாதேவி - பெரிய தேவி


மகாலக்ஷ்மி - மகாலட்சுமி


மிருடப் பிரியா - மிருடன் என்ற சிவனின் மனைவி


மகா ரூபா - பெரும் வடிவம் உள்ளவள்


மகா பூஜ்யா - பூஜிக்கத் தக்கவள்


மகா ஸத்வா - பெரும் பொருட்களை தோற்றுவித்தவள்


மகா மாயா - மிகவும் மயக்குபவள்


மகா சக்தி - பெரும் சக்தி படைத்தவள்


மகா ரதி - பிரியத்தின் வடிவானவள்


மகா போகா - நற்சுகம் கொண்டவள்


மகா ஐஸ்வர்யா - பெருஞ்செல்வம் உடையவள்


மகா வீர்யா - சிறந்த வீரியம் உள்ளவள்


மகா பலா - மிகுந்த பலம் உள்ளவள்


மகா புத்தி - பெருமை மிக்க புத்தி கொண்டவள்


மகா ஸித்தி - பெரும் சித்திகள் கொண்டவள்


மகா யோகஸே்வர ஈஸ்வரீ - யோகிகளின் தலைவி


மகா தந்திரா - பெருமை மிக்க தந்திரம் உள்ளவள்


மகா மந்திரா - பெருமை மிக்க மந்திரம் உள்ளவள்


மகா ஆசநா - பெருமை மிக்க ஆசனம் கொண்டவள்


பைரவ பூஜிதா - பைரவரால் பூஜிக்கப்பட்டவள்


காமேச மஹிஷீ - காமஸே்வரனின் பட்டத்து ராணி


திரிபுர சுந்தரீ - திரிபுரங்களின் அழகி


மநு வித்யா - மனுவால் பூஜிக்கப்பட்ட வித்யை


சாரு ரூபா - அழகிய உருவமுள்ளவள்


சாரு ஹாசா - அழகிய சிரிப்புள்ளவள்


சாரு சந்திர கலாதரா - சந்திர கலையை தரிப்பவள்


சக்ர ராஜ நிகேதனா - ஸ்ரீசக்கரத்தை இருப்பிடமாக கொண்டவள்


பார்வதீ - மலையரசனின் மகள்


பத்ம நயனா - தாமரைக் கண் கொண்டவள்


பத்மராக ஸமப்ரபா - பத்ம ராகத்திற்கு ஒப்பான ஒளியுள்ளவள்


சின்மயீ - சித்தமாக உள்ளவள்


ஆனந்தா - ஆனந்தமாக இருப்பவள்


விஸ்வ ரூபா - உலகமே வடிவமாகக் கொண்டவள்


பிரம்ம ரூபா - பிரம்மாவின் வடிவம் பெற்றவள்


கோவிந்த ரூபிணீ - கோவிந்தன் வடிவில் உள்ளவள்


சம்ஹாரிணீ - ஸம்ஹாரம் செய்பவள்


ருத்ர ரூபா - ருத்ரன் வடிவினள்


ஈஸ்வரீ - ஈஸ்வரன் வடிவம் கொண்டவள்


சதா சிவா - ஸதா சிவமாக இருப்பவள்


அனுக்ரஹதா - அருள்புரிபவள்


பைரவீ - பைரவரரின் சக்தி


பத்மாசனா - தாமரை ஆசனம் கொண்டவள்


பகவதீ - சக்தி அனைத்தும் பெற்றவள்


பத்மநாப சகோதரீ- பத்மநாபனின் சகோதரி


பலப்ரதா - வினைகளின் பலனைத் தருபவள்


பூர்ணா - நிறைந்தவள்


போகினீ - அனுபவிப்பவள்


அம்பிகா - தாய்


அனாதீ நிதனா - ஆதியந்தம் அற்றவள்


நாராயணீ - நாராயணி


ஹிரீமதி - நாணமுள்ளவள்


தியா - மனதிற்கு உவப்பானவள்


ராஜராஜ அர்ச்சிதா - மன்னர்களால் பூஜிக்கப்பட்டவள்


ரம்யா - அழகானவள்


ராஜீவ லோசநா - தாமரை போன்ற கண்ணுள்ளவள்


ரஞ்ஜனி - திருப்திப்படுத்துபவள்


ரமணீ - விளையாடுபவள்


ரஸ்யா - உணர்ந்து அனுபவிக்கத்தக்கவள்


மேகலா - ஒட்டியாணம் அணிந்தவள்


ரமா - லட்சுமி


இந்து வதனா - சந்திரன் போன்ற முகமுள்ளவள்


ரதி ரூபா - ரதியின் வடிவானவள்


ரதிபிரியா - ரதியிடம் பிரியமுள்ளவள்


ரக்ஷாகரீ - காப்பவள்


காம்யா - விரும்பப்படுபவள்


கலாரூபா - கலை வடிவினள்


கல்யாணீ - மங்கள வடிவானவள்


கலாவதீ - கலைகளை உடையவள்


கலாலாபா - கொஞ்சும் மொழியினள்


காந்தா - மிக அழகானவள்


காதம்பரீ பிரியா- தேனில் நாட்டம் உள்ளவள்


வரதா - வரம் அளிப்பவள்


வாம நயனா - அழகிய கண்கள் உள்ளவள்


விஸ்வ அதிகா - எல்லாவற்றிற்கும் மேம்பட்டவள்


வேத வேத்யா - வேதங்களால் அறியத்தக்கவள்


விந்தியாசலா நிவாசினி - விந்திய மலையில் வசிப்பவள்


விதாத்ரீ - உலகையே தாங்குபவள்


வேத ஜனனீ - வேதங்களின் தாய்


விஷ்ணு மாயா - மாய சக்தியாக இருப்பவள்


விலாசினீ - விசஷே சக்தியாக இருப்பவள்


விஜயா - வெற்றி பெறுபவள்


விமலா - அழுக்கற்றவள்


வந்தியா - வணங்கத்தக்கவள்


வாம கேசீ - அழகிய கூந்தல் உள்ளவள்


கல்ப லதிகா- கற்பக கொடியானவள்


தருணீ - இளமை கொண்டவள்


தனுமத்யா - மெல்லிடையாள்


சிதி - ஞான வடிவினள்


பர தேவதா - ஒளி மயமாக விளங்குபவள்


மத்யமா - நடுநிலை அடைந்தவள்


வைகரீ ரூபா - ஒலி வடிவினள்


காம பூஜிதா - மன்மதனால் வழிபடப் பெற்றவள்


ஜயா - வெற்றி தருபவள்


சத்ய பிரசாதினீ - உடனே அருள்பவள்


சாக்ஷிணீ - சாட்சியாக இருப்பவள்


ஸாக்ஷி வர்ஜிதா - சாட்சியற்றவள்


கிலிந்தா - ஈரம் உள்ளவள்


நிருபமா - உவமை அற்றவள்


பிரபாவதீ - ஒளி மிக்கவள்


பிரசித்தா - நன்கு அறியப்பட்டவள்


பரமஸே்வரீ - சிறந்த தலைவி


மூல பிரக்ருதி - ஆதி காரணமானவள்


அவ்யக்தா - தத்துவ வடிவினள்


வியாபினி - எங்கும் பரவுபவள்


சிவதுாதீ - சிவனைத் துாதனாகக் கொண்டவள்


சிவ ஆரார்த்யா - சிவனால் வழிபடப் பெற்றவள்


சிவ மூர்த்தி - மங்களமான உருவமுள்ளவள்


சிவங்கரீ - மங்களம் தருபவள்


சிவப்ரியா - சிவனுக்குப் பிரியமானவள்


அப்ரமேயா - அளவிட முடியாதவள்


சித்சக்தி - ஞானசக்தி வடிவினனள்


காயத்ரீ - காயத்ரியாக இருப்பவள்


சந்த்யா - மாலை நேரத்திற்கு உரியவள்


நித்ய யவனா - அழியாத இளமை கொண்டவள்


குசலா - திறமையுள்ளவள்


கோமளா - மென்மையானவள்


குல ஈஸ்வரீ - குலத்திற்கு தலைவி


குமார கணநாதாம்பா - முருகன், கணநாதனுக்கும் தாய்


மதி - புத்தியாக இருப்பவள்


திருதி - தைரிய வடிவினள்


சாந்தி - அமைதி கொண்டவள்


ஸ்வஸ்தி மதீ - க்ஷேமம் உடையவள்


காந்தி - மேனி ஒளியாக இருப்பவள்


நந்தினி - நந்தினியாக இருப்பவள்


விக்ன நாசினீ - இடையூறுகளை போக்குபவள்


தேஜோவதி - தேஜஸ் படைத்தவள்


திரிநயனா - முக்கண்கள் உள்ளவள்


மாலினீ - மாலையுள்ளவள்


சுமுகீ - அழகிய முகமுள்ளவள்


நளினி - தாமரை குவியலாக இருப்பவள்


சுப்ரூ - அழகிய புருவம் உள்ளவள்


சோபனா - அழகியவள், மங்களமானவள்


சுர நாயிகா - தேவர்களின் தலைவி


கால கண்டீ - கால கண்டரது மனைவி


காந்திமதி - ஒளியுடையவள்


ஷோபினி - உணர்ச்சிக் கொந்தளிப்பை உண்டாக்குபவள்


சூட்சும ரூபிணீ - நுண்ணிய வடிவமுள்ளவள்


வஜ்ரஸே்வரீ - வஜ்ரஸே்வரியாக இருப்பவள்


வாம தேவி - வாமதேவரது பத்தினி


சித்தஸே்வரி - சித்தர்களின் தலைவி


யசஸ்வினி - புகழ் உள்ளவள்


ஆரக்த வர்ணா - சிவப்பு, வெண்மை நிறமுள்ளவள்


திரிலோசனா - மூன்று கண்கள் உள்ளவள்


வதனத்வயா - இரு முகம் உள்ளவள்


ரக்த வர்ணா - செந்நிறமானவள்


பீத வர்ணா - மஞ்சள் கலந்த செந்நிற முள்ளவள்


மது ப்ரீதா - தேனில் விருப்பமுள்ளவள்


பஞ்ச வக்த்ரா - ஐந்து முகமுள்ளவள்


சுக்ல வர்ணா - வெண்ணிறமுள்ளவள்


ஷடானனா - ஆறுமுகங்களுள்ளவள்


சர்வ ஆயுததரா - ஆயுதங்களை தாங்கியிருப்பவள்


சர்வதோமுகீ - எங்கும் முகமுள்ளவள்


மேதா - மேதையாயிருப்பவள்


ஸ்ருதி - வேதங்களாயிருப்பவள்


அநுத்தமா - தன்னைக்காட்டிலும் மிக்கார் இல்லாதவள்


புண்ய கீர்த்தி - புண்ணியம், புகழ் உள்ளவள்


கீர்த்தனா - பாடலாக உள்ளவள்


அர்ச்சிதா - பூஜிக்கப்படுபவள்


விமர்ச ரூபிணீ - விமர்ச வடிவினள்


வித்யா - வித்தையாக இருப்பவள்


அக்ர சண்யா - முதலாவதாகக் கணக்கிடப்படுபவள்


காத்யாயனி - காத்யாய முனிவரின் மகள்


கால ஹந்திரீ - காலனை அழிப்பவள்


மோகினி - மயக்குபவள்


முக்யா - முக்கியமாக இருப்பவள்


மிருடானீ - மிருடன் என்னும் சிவனின் மனைவி


மித்திர ரூபிணீ - சூரிய வடிவினள்


நித்யத் ருப்தா - மன நிறைவு உள்ளவள்


பக்த நிதி - பக்தர்களின் செல்வக் குவியல்


நிகிலஸே்வரீ - எல்லாவற்றிற்கும் தலைவி


பராசக்தி - மேலான சக்தி


மஹனீயா - கொண்டாடத் தக்கவள்


தயா மூர்த்தி - கருணை வடிவானவள்


மகா வித்யா - பெருமை மிக்க மந்திர வடிவினள்


ஸ்ரீவித்யா - வித்யை என்னும் மந்திர வடிவினள்


காம ஸேவிதா - மன்மதனால் பூஜிக்கப்பட்டவள்


திரிகூடா - மூன்று தொகுதிகள் உள்ளவள்


காமகோடிகா - காமகோடியாக இருப்பவள்


சிரஸ் ஸ்திதா - தலையில் இருப்பவள்


சந்திர நிபா - சந்திரன் போன்றவள்


பாலஸ்த்தா - நெற்றியில் இருப்பவள்


இந்திர தனு பிரபா - வானவில்லுக்கொப்பான ஒளியுள்ளவள்


ஹிருதயஸ்த்தா - இதயத்தில் இருப்பவள்


ரவிப்ரக்யா - சூரியனைப் போன்றவள்


தீபிகா - தீபமாக திகழ்பவள்


தாக்ஷாயணீ - தட்சனின் மகள்


தைத்ய ஹந்திரீ - அசுரர்களை அழிப்பவள்


குணநிதி - குணங்களின் சேமிப்பிடம்


கோமாதா - காமதேனு வடிவானவள்


கலா ஆத்மிகா - கலைகளாக இருப்பவள்


கலா நாதா - கலைகளுக்குத் தலைவி


ஆதி சக்தி - முதற் காரணமானவள்


அமேயா - அளவிட முடியாதவள்


பரமா - பரம்பொருளைக் குறிப்பிடுபவள்


பாவன ஆக்ருதி - துாய்மை தருபவள்


திவ்ய விக்ரகா - அழகான உருவம் உள்ளவள்


திரிபுரா - மும்மூர்த்திக்கும் முந்தியவள்


திரிதச ஈஸ்வரீ - தேவர்களின் தலைவி


உமா - உமையவள்


கெளரீ - வெண்ணிறமுள்ளவள்


கந்தர்வ ஸேவிதா - கந்தவர்களால் பணிவிடை செய்யப் பெற்றவள்


விஸ்வ கர்ப்பா - உலகைக் கருவாகக் கொண்டவள்


வாகீஸ்வரீ - வாக்கிற்கு தலைவி


தியான கம்யா - தியானத்தால் அடையத்தக்கவள்


ஞான விக்ரஹா - ஞான உருவினள்


அத்ருச்யா - புலப்படாதவள்


விஜ்ஞாத்ரீ - எல்லாவற்றையும் பகுத்தறிபவள்


யோகினி - யோகத்தில் வல்லவள்


யோக்யா - யோகத்தால் அடையத்தக்கவள்


யோகானந்தா - யோகத்தால் மகிழ்பவள்


யுகம் தரா - யுகத்தைத் தாங்குபவள்


சர்வ ஆதாரா - எல்லாவற்றிற்கும் ஆதாரமானவள்


சுப்ரதிஷ்டா - நல்ல நிலையான இருப்பிடமானவள்


அஷ்ட மூர்த்தி - எட்டு வடிவம் கொண்டவள்


அஜா ஜேத்ரீ - அறியாமையை போக்குபவள்


ஏகாகினி - தனித்து இருப்பவள்


பூமரூபா - அனைத்துமாக இருப்பவள்


அன்னதா - உணவளிப்பவள்


வசுதா - செல்வம் தருபவள்


பிரகதி - பெரிய உருவம் கொண்டவள்


பிராம்ஹீ - பிரும்மாவின் சக்தி வடிவனள்


பிருகத் ஸேனா - பெரிய படை கொண்டவள்


சுபகரீ - மங்களம் தருபவள்


சோபனா சுலபாகதி - உயர்ந்த, எளிதில் அடையத் தக்கவள்


ராஜ ராஜஸே்வரீ - ராஜ ராஜருக்கும் தலைவி


ராஜ்யதாயினி - அரசுரிமை அளிப்பவள்


ராஜ்ய வல்லபா - ஆட்சி செய்வதில் வல்லவள்


ராஜத் கிருபா - பெருமையுடன் விளங்கும் கருணையானவள்


ராஜ்ய லக்ஷ்மீ - ராஜலட்சுமியாக இருப்பவள்


கோசநாதா - பொக்கிஷத்தின் தலைவி


சத்ய ஸந்தா - மீற முடியாத எல்லையுள்ளவள்


சாகர மேகலா - கடலை மேகலையாக உடுத்தவள்


தீக்ஷிதா - அறிவூட்டுபவள்


தைத்ய சமனீ - அசுரர்களை அடக்குபவள்


சர்வலோக வசம்கரீ - உலகத்தை வசப்படுத்துபவள்


சர்வ அர்த்ததாத்ரீ - எல்லாப் பொருள்களையும் தருபவள்


சாவித்ரீ - உலகைப் படைத்தவள்


சர்வகா - எல்லாவற்றிலும் உள்ளவள்


சர்வ மோகினி - எல்லோரையும் மயக்குபவள்


சரஸ்வதீ - ஸரஸ்வதியாயிருப்பவள்


சாஸ்திர மயீ - அறிவு நுாலாக இருப்பவள்


குஹா அம்பா - குகையில் விளங்குபவள்


குஹ்ய ரூபிணீ - ரகசிய வடிவம் கொண்டவள்


பக ஆராத்யா - சூரியனால் வழிபடத் தக்கவள்


மாயா - மாயையாக இருப்பவள்


லலிதாம்பிகா - அழகிய தாய்


தியுதிதரா - அமைதி மிக்கவள்


யஜ்ஞ ரூபா - வேள்வி வடிவினள்


ப்ரிய விரதா - விரதத்தில் விருப்பமுள்ளவள்


துராதர்ஷா - வசப்படுத்த முடியாதவள்


மஹதி - பெரியவள்


மேருநிலயா - மேருவில் வசிப்பவள்


விரஜா - மாசற்றவள்


விச்வத் முகீ - எங்கும் முகமுள்ளவள்


பிரத்யக் ரூபா - மனதால் காணத்தக்கவள்


பராகாசா - பெருவெளியாக இருப்பவள்


பிராணதா - பிராணசக்தியை அருள்பவள்


பிராண ரூபிணீ - பிராண சக்தியாயிருப்பவள்


திரிபுர ஈசீ - முப்புரங்களின் தலைவி


ஜயத் ஸேநா - வெல்லும் படை கொண்டவள்


கபர்தினி - சிவனின் மனைவி


கலாமாலா - கலைகளின் மாலையாக இருப்பவள்


காமரூபிணீ - காமஸே்வரர் வடிவினள்


கலாநிதி - கலைகளின் நிதி


காவ்ய கலா - காவியம் படைப்பவள்


ரஸ சேவதி - ஆனந்தத்தின் இருப்பிடம்


தியுதிதரா - அமைதி மிக்கவள்


யஜ்ஞ ரூபா - வேள்வி வடிவினள்


ப்ரிய விரதா - விரதத்தில் விருப்பமுள்ளவள்


துராதர்ஷா - வசப்படுத்த முடியாதவள்


மஹதி - பெரியவள்


மேருநிலயா - மேருவில் வசிப்பவள்


விரஜா - மாசற்றவள்.

Comments

Post a Comment

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச