எதை மாயை?. என்கிறார் ஆச்சாரியர்
தெய்வத்தின் குரல்: எதை மாயை?. என்கிறார் ஆச்சாரியர் . மேலும் மாயை என்பது என்ன என்பதுப் பற்றி மஹாபெரியவா அருள்வாக்கு. மாய சக்தி தான் அம்பாள், ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத் தானே அநுபவித்துக் கொண்டிருக்கிற பிரம்மத்தையே #சிவன்##சிவம்#என்று சொல்கிறோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கிற அந்த சாந்தமயமான பிரம்மத்திலிருந்து தான், இத்தனை காரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள், குணங்கள் எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயா சக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவ ராசிகளாகவும் தோன்றியிருக்கிறது. ஒன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகிற அந்த மாயாசக்தி தான் #அம்பாள்# என்று சொல்லுகிறோம். இந்தச் சக்தியால்தான், நாம் எல்லாம் தோன்றியிருக்கிறோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை. இந்த ஞானத்தைக் கொடுப்பவள். ஆனால்,நாம் நமது அறியாமையால் அதை வேறாக நினைக்கிறோம். இதற்குக் காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின் #மாயை#தான். அதுவே திரோதானம். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை....