ஶ்ரீமாதா
இது நாள் வரை அம்பாளின் பலவிதமான சொரூபகஙள், ரூப வர்ணணை மற்றும் அம்பாள் எப்படி பட்டவள் என்ற பதிவைக் கண்டோம்.
எல்லாவற்றிற்கும் மூலம் அவள்.
அது எவ்வாறு
படைத்தலுக்கு பிரம்மன் அதுக்கு துணை பிரம்மி
காத்தலுக்கு விஷ்ணு அதற்கு துணை வைஷ்ணவி
அழித்தலுக்கு அது அழித்தல் இல்லை
அதாவது ஒன்றிலிருந்து மற்றொன்றை உருவாக்குதல்.
அதை ருத்ரன் செய்கிறான் அதற்கு துணை ரௌத்ரி.
அடுத்தது மறைத்தல்
எதை மறைத்தல், எது தேவையோ அதை கொடுத்து மற்றவற்றை மறைத்தல்.
அதற்கு ஈஸ்வரன் அதற்கு துணை ஈஸ்வரி
கடைசியாக அனுகிரஹம் அதற்கு சதாசிவன் அதற்கு துணை சதாசிவாகுடும்பினி.
இவ்வாறு ஐந்துத்தொழிலுக்கு அவள் துணைப்புரிக்கிறாள்.
அவளே ப்ரயள காலத்தில் சதாசிவன் ஆடும் நடனத்திற்கு சாட்சியாக இருக்கிறாள்.
அதனால் அவள் மஹாப்ரளய சாக்ஷிணி.
இதை தவிர தன்னைப்பற்றிய ரூபசொருபங்களை படைப்பதற்கு வாக்தேவிகள் மூலம் லலிதா சஹஸ்ர நாமத்தை படைத்தாள்.
நமது கணவனின் சொரூபமான சங்கரனை அதாவது சங்கர பகவத்பாதாளை படைத்து அவள் மூலம்
சமஸ்கிருத க்ரந்தமான
சௌந்தயலஹரி
சிவானந்தலஹரி
போன்ற பல க்ரந்தகளை படைக்க வைத்தல்.
தனது பக்தனான அபிராமி பட்டர் மூலம்
அவரின் பக்தியை மற்றவர்களுக்கு உணர வைப்பதற்கு திருவிளையாடல் நடத்தி அபிராமி அந்தாதி எனும் நூலை உலகறிய செய்தல்.
இதைதவிர பல தலங்கள் உருவாதற்கு தனது கணவன் சிவனுடன் திருவிளையாடல் நடத்தி பல திருதலங்களை உருவாக்கினால்
இதன் பதிவை நாளை காணலாம்.
இவ்வாறு பலவிதவாற்றிற்கு காரணமாக இருப்பதால்
அவளே காரண கர்த்தாவாகிறாள்.
தனது கணவனுக்கு சக்தியாக இருந்து பலவற்றை உருவாக்கிறாள்.
ஆதனால் அவள் லோகமாதா
அவளே #ஶ்ரீமாதா#.
#ஓம்ஆதிபராசக்தியேநமஹ#
லோகஜனனி/ஜகத் ஜனனி.

Comments
Post a Comment