அபிராமிஅந்தாதிபாடல்# - 34
#அபிராமிஅந்தாதிபாடல்# - 34 சிறந்த நிலங்கள் கிடைக்கும் வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் தந்தே பரிவோடு தான்போய் இருக்கும், சதுர்முகமும் பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும், பாகமும் பொன் செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே பொருள்: அன்னை அபிராமி எதிலெல்லாம் இருக்கிறாள் என்று பட்டர் இப்பாடலில் கூறுகிறார். அவள் லோகமாதா சகலுத்திலும் வியாபித்து இருப்பவள். சிருஷ்டிக்கு அவள் காரண பிந்து. அதனாலேயே பாரதி காக்கைச் சிறகினிலே நந்தலாலா- நின்றன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா; (கண்ணணை - காளியை) 2. பார்க்கு மரங்கலெல்லாம் நந்தலாலா - நின்றன் பச்சைநிறந் தோன்றுதையே (அன்னை மீனாக்ஷி). நந்தலாலா 1. சதுர்முகனின் (பிரம்மா) படைப்புத்தொழில் - #ஸ்ருஷ்டிகர்த்ரீபிரம்மரூபா#என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. 2. தேன் சிந்தும் மலர்கள் நிறைந்த மாலை, துளசி, அணிகலன்கள் அணிந்தவரான திருமாலின் மனத்தில் - அவர் செய்யும் காப்புதொழில் - #கோப்த்ரீகோவிந்தரூபிணி# என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. 3. பாகமும்...