#சகலும்உணர்ந்தவள்அம்பாள்#
#சகலும்உணர்ந்தவள்அம்பாள்#
பொதுவாக எந்த காரியத்தை யார் மூலம் நடத்திக்கொள்ளலாம் என்பதை தீர்மானிப்பது அம்பாள்.
அவ்வாறே வாக்தேவிகளை அழைத்து தனது சிறப்புகளை வரிசைப்படுத்தச் சொல்லி உருவானதே லலிதா சஹஸ்ரநாமம்.
தன்னை பெருமையாக சொல்லுவதற்காக அல்ல.
அதை உலகறிய செய்வதே அன்னையின் நோக்கம்.
உருவான சஹஸ்ர நாமம் ,அது அவ்வாறாக இருந்தால் உபயோகமும் இல்லை.
அதனால் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவரை அழைத்து.
தனது பரமபக்தையான லோபமுத்ரையின் கணவனான கூருமுனி அகத்தியருக்கு உபதேசிக்கச் சொன்னவள் அம்பாள்.
இங்கு லோபமுத்ரையாள் அகத்தியருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.
அவ்வாறு உருவான சஹஸ்ர நாமத்திற்கு,சமஸ்கிருத பாஷ்யத்தை சங்கர பகவத்பாதாள் மூலம் நிறைவேற்றினால் அம்பாள்.
இருக்கிற சமஸ்கிருத பாஷ்யமான சௌந்தர்யலஹரிக்கு தமிழ் பாஷ்யத்தை,
அதாவது அபிராமி அந்தாதியை அபிராமி பட்டர் மூலம் திருவிளையாடலை நடத்தி உலக்கிற்கு தந்தவள் அம்பாள்.
எந்தெந்த காலகட்டங்களில் யார் மூலம் எதை நடத்திக் கொள்ளலாம் என்பதை நன்கு தெரியும் அம்பாளுக்கு.
தற்போது என் மூலமாக தன்னைப் பற்றிய நிறைய விஷங்களை பதிய வைக்கிறாள் என்பதே உண்மை.
இதற்கு சான்றாக காஞ்சி முனி மஹாபெரியவாவின் தெய்வத்தின் குரலில் #அன்னைதெய்வம்# என்ற பதிவுகள் மிக சான்றாக இருக்கும்.
அதை வரும்நாட்களிவ் பதிவாக காணலாம்.
காரணம் ஒன்றுகொன்று தொடர்பில்லாமல் எதுவும் நடப்பதில்லை. அதை நம்மால் உணர முடியவில்லை என்பதற்காக அது இல்லை என அர்த்தமில்லை.
தெரிந்துக்கொள்வது அறிவு ,அதை உணர்ந்துக்கொள்வது ஞானம்.
அந்த ஞானத்தை பெற இறைவன் அருள் வேண்டும் .
அந்த அருள் எப்போது பெறுவோம் தனி பதிவாக காணலாம்.

Comments
Post a Comment