Posts

Showing posts from December, 2025

ஆன்மீகம் என்பது என்ன?.

Image
 ஆன்மீகம் என்பது என்ன?. ஆன்மீகம் என்பது ஆன்மாவை மேம்படுத்தல். ஆன்மாவை மேம்படுத்தல் என்பது இறைவனை நோக்கிய பயணமா?. ஆன்மீகம் எதைப்பற்றி பேசுகிறது. ஆன்மீகம் என்பது ஆன்மவைப் பற்றியது. அதன் தன்மையைப் பற்றியது. அதன் தன்மை படி நாம் வாழுகிறோமா என்பதைப் பற்றியது என டாக்டர் உ.வே. வெங்கடேசன் அழகாக தனது உபன்யாசத்தில் விளக்குகிறார். இது மூன்றும் உள்ளடக்கியதே ஆன்மீகம் என்கிறார். இதை சங்கரபகவத் பாதாள் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தின் மூலம் விளக்கலாம். பகவத்பாதாள் தனது சிஷ்யக்களுடன்  கங்கை கரையில் ஸ்தானத்தை முடித்து வரும்வழியில் அவர்களுக்கு குறுக்கே ஒரு புலயையன் நாய்களுடன் வருகிறான். அந்த புலையனை பார்த்த ஶ்ரீசங்கர பகவத் பாதாள் அவரை விலகச் சொல்கிறார். அதற்கு அந்த புலையன் இந்த அழியும் தேகத்தை நகரச் சொல்லுகிறாயா  அல்லது  இந்த அழியாத ஆன்மாவை நகரச் சொல்கிறாயா என கேள்வி எழுப்புவார். மேலும் நீ எழுப்பிய கேள்வி உனது அத்வைத தத்துவத்திற்கு நேர் எதிரானது எனவும் சுட்டிக்காட்டுவார். நாம் ஞானத்தை யாரிடமிருந்தும் பெறலாம்,  தான் இன்னும் பக்குவபடவில்லை என உணர்ந்த பகவத் பாதாள் அவரது காலில் சாஷ்டங்கம...

பரமபதம் மற்றும் அதன் தாத்பர்யம்

Image
இந்துக்கள் செய்துவைத்த ஏற்பாட்டில் எல்லாமே ஞானமானவை, எல்லாமே ஆழ்ந்த தத்துவ பயிற்சிகளின் மூலம், அவர்களின் கோவில் முதல் விளையாட்டுவரை ஒவ்வொன்றும் வாழ்க்கையின் பெரும் தத்துவம் அதுவும் விஷேஷ நாட்களில் அவர்கள் சொல்லிகொடுத்த விளையாட்டுக்கள், அவர்கள் பயிற்றுவித்த விளையாட்டுக்கள் அவ்வளவு அற்புதமானவை, வாழ்வியல் பாடங்களை பக்தியோடு போதிப்பவர்கள். அப்படி அவை சொக்கட்டானை சொன்னது , சதுரங்கத்தை சொன்னது, மிக முக்கியமாக பரமபதம் எனும் பாம்பும் ஏணியும் கலந்த விளையாட்டை சொன்னது அந்த விளையாட்டு வெறும் பொழுது போக்கு அல்ல, அது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் வலியுறுத்தும் பாடம் ஏணி என்பது ஒருவனுக்கு வாய்க்கும் குடும்பம் , கல்வி, செல்வம், அவன் உழைப்பு, வாய்ப்பு என்பதை சொல்வது பாம்பு என்பது அவன் மனதில் வரகூடாததும், வாழ்வில் சேர்க்க கூடாத தீயவர்கள் மற்றும் தீய பழக்கங்களை சொல்வது ஏணி என்பது அவனின் நல்ல பக்கத்தை சொல்வது அது ஒருவனை ஏற்றிவிடும் தீயவர் தொடர்பும்,தீய குணமும் ஒருவனை கீழே தள்ளிவிடும் அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதையும் சொல்வது அதே நேரம் வெற்றியில் ஆடாதே மறுநேரம் வீழ்வாய், தோல்வியில் துவளாதே மறுபடியும்...

நாராயணனே நமக்கே பறை தருவான்”

Image
திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் பறையை பார்ப்போம். இப்பொழுது, ஆண்டாள் கூறும்  பறை – பட்டியலைப் பார்ப்போம். 1. பறை தருவான் – (பாசுரம் – 1) “நாராயணனே நமக்கே பறை தருவான்” . அன்று அர்ஜுனனுக்குப்  பறை என்னும் உரை தந்தான். அர்ஜுனனைப் போல நாமும் அவனை  அடைவோம். நமக்கும் அந்த உரை தந்து, உறுதி அளிப்பான். 2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம் -8) “பாவை, எழுந்திராய் பாடிப் பறை கொண்டு……. தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேல்..” அவன் கொடுத்த உரை என்னும் பறையை நம்பி, அவனிடம் சென்று நாம் வணங்கி -‘  இது நீ கொடுத்த உறுதி தானே, எங்களையும், ஏற்றுக் கொள் என்று சொன்னால், ‘ஆஹா’ என்று ஆஹா-காரம் செய்து ஆராய்ந்து சொல்கிறேன் என்பான். ‘ அவன் சக்கரவர்த்தித் திருமகனான இராமனைப்போல் அல்ல. ஒருவனிடம்  தவறு  இருந்தாலும், அவன்  தன்னைப் பணிந்தால் இராமன் தன்னடி சேர்த்துக் கொண்டு விடுவான். இராவணனே, ‘ அபயம்’ என்று அவன் அடி பணிந்தால் அவனைத் தண்டிக்காமல் விட்டு விடுவான் என்று சீதை சொல்கிறாள். அவளுக்குத் தீங்கு செய்த காகாசுரனை அப்படித் தான் அவன் மன்னித்தான். அனால்,...

திருப்பாவை மற்றும் பறைகள்

Image
திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும். புறநானூறில் ஆங்காங்கே பேசப்படும் இந்த 12 பறைகளில், ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும்,  பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன், கடவுளைக் குறித்து,  விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால், ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய  பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம். இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம். மொத்தம் 10 இடங்களில்  ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள். ஆண்டாள் கூறும் பறை 1. பறை தருவான்  (பாசுரம் – 1) 2. பாடிப்பறை கொண்டு  (பாசுரம்- 8 ) 3. போற்றப் பறை தரும்  – (பாசுரம்- 10) 4. அறை பறை –  (பாசுரம் -16) 5. பறை தருகியாகில் – (பாசுரம் -25) 6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26) 7. உன்றன்னை பாடிப்  பறைகொண்டு – (பாசுரம் -27) 8. நீ தாராய் பறை – (பாசுரம் -28) 9. இற்றைப்  பறை கொள்வான் –  (பாசுரம் -29) 10.அங்கப் பறை கொண்ட ஆற்றை  – (பாசுரம் -30) �அவற்றுள்,  26  -ஆம் பாசுரத்தில் வரும்  சாலப் பெரும் பறை,  மேற் கண்ட 12 பறைகளுள்  சல்லிப் பறையை ஒத்திருக்...

திருப்பாவை

Image
திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும் படித்தில் பிடித்தது ஒருசொல்,‘பறை’வேதமனைத்துக்கும் வித்து’ என்று ஆன்றோரால் போற்றப்படும் திருப்பாவையில் அடிக்கடி சொல்லப்படும்  ஒரு சொல், ‘பறை’ என்பதாகும். இது கையால் தட்டப்படும் ஒரு தோல் கருவி. பாணர்கள் முதல், சிறுவர்கள் வரை பலராலும் கொட்டப்படும் இந்தப் பறை, பாவைநோன்பின் போதும் சிறுமியரால் கொட்டப்படுவது.  பாவைக் களம் புக வேண்டி, மற்ற சிறுமியரை அழைக்கும் ஆண்டாள் பறை கொட்டினது மட்டுமல்லாமல், நாராயணன் பறை தருவான், அவன்  பறை தர வேண்டும்  என்றும் கூறுகிறாள். அவளிடம்தான் ஏற்கெனவே  பறை இருக்கிறதே, அது என்ன வேறு ஒரு பறை – அதுவும் நாராயணன் தரும் பறை என்று நாம் ஆராயப் புகுந்தால், சில அரிய ஆன்மீகக் கருத்துகள் புலனாகின்றன. அதன் மூலம், வேதமனைத்துக்கும்  எவ்வாறு திருப்பாவை விதையாகிறது என்றும் புரிகிறது. இவற்றை விவரிப்பதற்கு முன்னால், ஆண்டாள் கொட்டிய பறை எது என்று கண்டு பிடிக்க முடியுமா என்று பார்ப்போம். ஆண்டாள் கொட்டிய பறை ஐந்திணைகளுக்கும் உரிய பறைகள் தொண்டகப்பறை (குறிஞ்சி), துடிப்பறை (பாலை) , ஏறுகோட்பறை (முல்லை), மணப்பறை மற்றும் கிணைப...

நேர்மறை எண்ணங்கள்

Image
 எதிர்மறை எண்ணங்களை  களைவது எப்படி? எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டு விடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும் தான். எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்து விடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப்போன்றது. நேர்மறை எண்ணங்களுக்கும் அதே போன்ற சக்தி உண்டு. எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும் போது அதைப் போக்க உதவும் 10 விஷயங்கள். 1. தியானம்... தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறை நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2. புன்னகை.. கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்...

கோபத்தை வெல்லும் முறைகள்

Image
 கோபத்தை வெல்லும் இரண்டு சக்தி வாய்ந்த வழிகள்:  #பகுத்தறிவும்,  #பக்திப்பிடிப்பும்! அகத்தியர் போன்ற ஞானிகள் கோபத்தை விடுங்கள் என்று சொல்கிறார்கள்.  ஆனால்,  நமக்குக் கோபம் வருவது இயல்புதானே?  கோபம் வந்தாலும்,  அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்க இந்த  இரண்டு உத்திகளைப் பயன்படுத்துவோம்: 1. பகுத்தறிவுப் பயிற்சி  (The Power of Analysis) கோபம் உங்கள் மனதில் எழும்போது, உடனடியாகச் செயல்படாமல் ஒரு கணம் நிறுத்தி யோசியுங்கள்: இந்தக் கோபத்திற்கான உண்மைக் காரணம் என்ன?  உண்மையில்,  கோபம் சூழ்நிலையால் அல்ல,  நமது எதிர்பார்ப்புகளால் வருகிறது. இந்தக் கோபத்தால் எனக்கு என்ன விளைவுகள் ஏற்படும்) (மன அமைதி குறையும்,  உறவுகள் பாதிக்கப்படலாம்.)  காரணத்தையும் விளைவையும் எடைபோடும்போது,  கோபத்தின் வீரியம் தானாகவே குறைந்துவிடும். 2. இறைவனிடம் முழுமையான சரணாகதி  (The Act of Surrender) சில நேரங்களில், அநீதியைப் பார்க்கும்போது நியாயமான கோபம் வரும்.  அந்தக் கோபத்தின் சுமை உங்களை அழுத்தாமல் இருக்க,  நீங்கள் அதை பிரபஞ்சத்திடம்...

கோபம்

Image
 கோபம் என்பது மனிதர்கள் இடையே ஏற்படும் ஒரு கடுமையான உணர்ச்சி; #நல்வழிபடுத்துதல் இது எரிச்சலில் தொடங்கி தீவிர வெறி வரை இருக்கலாம்,  இரத்த அழுத்தம் அதிகரித்தல், இதயத் துடிப்பு உயருதல் போன்ற உடல் மாற்றங்களை ஏற்படுத்தும், மேலும் இது முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் ஒரு சாபம், ஆனால் சில நேரங்களில் கோபம் இருக்கும் இடத்தில் குணமும் இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இதைக் கட்டுப்படுத்த தியானம், யோகா, குளிர்ந்த நீரில் குளிப்பது போன்றவை உதவும்,  ஏனெனில் இது வன்முறைக்கும் தீமைக்கும் வழிவகுக்கும்.  கோபத்தின் தன்மைகள் உணர்ச்சி:  இது ஒரு வலிமையான  மனித உணர்ச்சி;  சினம்,  சீற்றம்,  எரிச்சல்  போன்ற வடிவங்களில் வெளிப்படும். உடல் ரீதியான விளைவுகள்: கோபம் வரும்போது இரத்தம் அழுத்தம் அதிகரிக்கும்,  இதயத் துடிப்பு வேகமடையும் அட்ரினலின் சுரக்கும். தடை:  ஒருவரின் வளர்ச்சிக்கு கோபமும், அகங்காரமும் முக்கியத் தடைகளாகக் கருதப்படுகின்றன.  கோபத்தைக் கையாள்வது எப்படி சாதகமான அணுகுமுறை:  கோபம் வரும்போது, "கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இரு...

அம்பாள் கடாக்ஷம்

Image
 அம்பாள் கடாக்ஷம் அம்பாள் என்பது  அன்னைத் தெய்வத்தின் கருணைப் பார்வை, அருள்நோக்கு,  அல்லது  அருட்கடாட்சம் ஆகும்,  இது பக்தர்களுக்கு மங்களத்தையும்,  நல்வாழ்வையும், துன்பங்களிலிருந்து விடுதலையையும் தரும்;  இது பிரபஞ்சத்தின் தாயான அம்பிகையின் சக்திவாய்ந்த பார்வையைக் குறிக்கும்,  இது காஞ்சி காமாட்சி போன்ற அம்பிகை ஸ்தலங்களில் பிரார்த்தனை செய்யும்போது கிடைக்கும் சிறப்புப் பலன்களையும், பெரியோர்களின் உபதேசங்களின்படி அம்பாளை வழிபடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது.  அம்பாள் கடாக்ஷத்தின் பொருள்: #கடாக்ஷம் (Kataaksham): சமஸ்கிருதச் சொல்.  #கடா (Kada) என்றால் 'பார்வை'  அல்லது  'கண்',  #அக்ஷ (Aksha) என்றால் 'பார்வை'  அல்லது  #கணம்' எனப் பொருள்படும்.  எனவே,  கடாக்ஷம் என்பது ஒரு சிறப்புப் பார்வை,  கருணைப் பார்வை,  அல்லது  அருட்பார்வையைக் குறிக்கும். அம்பாள்:  அன்னைத் தெய்வம்,  பிரபஞ்சத்தின் தாய்,  சக்தி தாயுமானவள்.  அம்பாள் கடாக்ஷத்தின் #முக்கியத்துவம்: #பிரபஞ்சத்தின் தாய்:...

குடை தான் சனாதனதர்மம்

Image
அனைவருக்கும் மார்கழி மாத இனிய ஆன்மீக காலை வணக்கங்கள். இதுகாறும் நிறை விஷயங்களைப் பற்றிய பதிவை பதிந்து வருகிறேன். இந்த பதிவுகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் தான் வரும். அந்த குடை தான் சனாதனதர்மம் என்று பரந்த விரிந்த குடை. குடையில் எவ்வாறு நடுவே வரும் கம்பியை இணைக்கும் ஆரங்களாக அதில் உள்ள கம்பிகள் எவ்வாறு உள்ளதோ. அதே மாதிரியாக தான் பல தரப்பட்ட விஷயங்களை பகிர்ந்தாலும் அவை ,சனாதனதர்மம் என்ற ஒரு குடையில் கம்பியை பலபடுத்தும் விதமாகவே அவை இருக்கும். மற்றவைகள் அதன் காரணிகளாக இருந்து சனாதனதர்மத்தை காக்கிறது. அவை சனாதன தர்மத்தின் அடிப்படைக் காரணிகள் (Principles)  **அறம்,  **பொருள்,  **இன்பம்,  மற்றும்  வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களோடு,  **அஹிம்சை,  **சத்தியம்,  **தூய்மை,  **கருணை,  **பணிவு,  **சுயக்கட்டுப்பாடு,  **பொறுமை,  **தியாகம்,  **தவம்,  மற்றும்  ஆன்மிக அறிவு போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது, இதை நான் ஒன்றும் புதிதாக பதியவில்லை. நான் தேடும் போது படித்த, கேட்ட மற்றும்  அனுபவித்த விஷயங்களை  பதிவாக பதிந்...

எது உறவு?கவிஞரின் விளக்கம்.

Image
 எது உறவு?கவிஞரின் விளக்கம். பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல்  பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை.. பிறப்பின் உறவுகள் பெற்ற தந்தையை பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான். கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கின்றான். தாயை தவிக்கவிட்டு தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான். கூடப் பிறந்தவனே கோர்ட்டு படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான். சமூக மரபுகள் இவற்றை ஒழுக்கக்கேடாக கருதவில்லை. அலுவலகத்தில்,  வேலை பார்க்கும் நேரத்தில்இருந்து விலகியதும் வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம்.  ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டு தங்குவது போல் சில உறவுகள் சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.  ஆயிரம் வாசல் இதயம் யாரோ வருகிறார்கள் யாரோ போகிறார்கள்.. வாழ்ந்தால் சிரிக்கிறார்கள் வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தபின் ஒப்புக்காக அழுகிறார்கள். இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி ஓர் ஆத்மா தாக்கப்படும்போது, இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்கும் ..  அந்த உறவே புனிதமான உறவு. பிறப்பில் சொந்தம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அது மனிதன் ஆயினும் சரி,...

சித் அம்பலம் (சிற்றம்பலம்)

Image
சித் அம்பலம் (சிற்றம்பலம்) என்பது அறிவு நிறைந்த வெளி  அல்லது  உணர்வுவெளி என்பதைக் குறிக்கும். இது பொதுவாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையையும், மனித உடலில் உள்ள ஞானத்தையும், இறைவனின் நடனத்தைக் காணும் உணர்வு நிலையையும் குறிக்கிறது.  'சித்' என்பது அறிவு/உணர்வு,  'அம்பலம்' என்பது வெளி/ஆகாயம்/அரங்கம்.  சிதம்பரம் நடராஜர் கோயில்  ஐந்து சபைகளில்  (பொன்னம்பலம்,  வெள்ளியம்பலம்,  இரத்தின அம்பலம்,  தாமிர அம்பலம்,  சித்திர அம்பலம்)  முதல் அம்பலமாகும். சித் அம்பலம் (சிற்றம்பலம்) என்பது அறிவு நிறைந்த வெளி அல்லது உணர்வுவெளி என்பதைக் குறிக்கும்.  இது பொதுவாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் கருவறையையும்,  மனித உடலில் உள்ள ஞானத்தையும், இறைவனின் நடனத்தைக் காணும் உணர்வு நிலையையும் குறிக்கிறது.  'சித்' என்பது அறிவு/உணர்வு,  'அம்பலம்' என்பது வெளி/ஆகாயம்/அரங்கம்.  பொருள் விளக்கம்: சித் + அம்பலம்: அறிவு + வெளி/ஆகாயம்/அரங்கம். உணர்வு வெளி: இறைவனின் ஞான நடனம் நிகழும் இடம் (உடலுக்குள்). திருச்சிற்றம்பலம்: சிதம்பரம் கோயிலின் கருவறை,...

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…

Image
 சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… #சதாசிவம் சத் மற்றும் சித் இணைந்தால் அதுவே #சச்சிதானந்தம். சத்+சித்+ஆனந்தம். சித் என்பது தான் பரம்பொருள் அதோடு #சத் தாகிய #அம்பாள் இணைந்தால் அது #ஆனந்த பெருக்கெடுக்கும். அதுவே தான் #மூலாதாரத்தில் #குண்டலியாக உறங்கும் #அம்பாள் மேலெழும் போது, ஆறு சக்கரங்களை  கடந்து சஹஸ்ஹாரத்தில் #சதாசிவனுடன் இணையும் பொழுது ஆனந்த பெருக்கடுக்கும் என்கிறது ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம். இதை தான் உலகத்தில் மையப்புள்ளியாகிய சிதம்பரம் = சித் அம்பலம் மறுவி சிதம்பரம். அங்கு தான் நடராஜன் நடம் ஆடுகிறான். சித் என்பது நமது உடம்பாகிய சித்தத்தில் அவன் ஆடுகிறான். உறைகின்ற நின் திருக்கோயில்:  நீ உறையும் உன்னுடைய கோயில் எது? நின் கேள்வர் ஒரு பக்கமோ:  உன் கணவராகிய சிவபெருமான் இருக்கும் இடமா?  (பார்வதி தேவியான அபிராமி, சிவனுக்கு இடப்பாகம் அமர்ந்திருப்பதால்) இதை தான் திருவருட்செல்வர் திரைப்படத்தில். #சித்தமெல்லாம் எனக்கு #சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே… சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா… உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…  சித்தமெல்லாம் எனக்க...

யாதுமாகி நின்றாய்-காளி!

Image
 முண்டாசு கவிஞன் ஒரு அம்பாள் உபாசகன் என்பதை அனைவரும் அறிந்ததே. சென்னையில் வாழ்ந்த காலத்தில் பத்திரிகை அலுவலகம் செல்லும் முன் தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாளை தரிசனம் செய்வதை வழக்கமான வைத்து இருந்தான் என்பதை அனைவரும்அறிந்ததே. அதனால் தான் என்னவோ காளியை இவ்வாறு காண்கிறனோ. "யாதுமாகி நின்றாய்-காளி!  எங்கும் நீ நிறைந்தாய்; தீது நன்மையெல்லாம்-காளி!- தெய்வ லீலை யன்றோ; பூத மைந்தும் ஆனாய்-காளி!- பொறிக ளைந்தும் ஆனாய்; போத மாகி நின்றாய்-காளி!- பொறியை விஞ்சி நின்றாய்.  இன்ப மாகி விட்டாய்-காளி!- என்னு ளேபுகுந்தாய்; பின்பு நின்னை யல்லால்-காளி!- பிறிது நானும் உண்டோ; அன்ப ளித்து விட்டாய்-காளி!- ஆண்மை தந்து விட்டாய்; துன்பம் நீக்கி விட்டாய்-காளி! -தொல்லை போக்கி விட்டாய்". (முண்டசுக் கவி சி  சுப்பிரமண்யா பாரதி) சுருக்கம்: பாரதியார்,  காளித் தாயே  உலகில் உள்ள அனைத்திலும் வியாபித்திருக்கிறாள் என்றும், நன்மை தீமைகளுக்கு காரணமானவள் அவள் என்றும், ஐம்புலன்களாகவும், அறிவாகவும்,  பேரின்பமாகவும் அவள் நிறைந்து நிற்கிறாள் என்றும் போற்றிப் பாடுகிறார்.  இது இறைவனின் எல்ல...

(என்ன ஆறுதல், என்ன கருணை )

Image
 மஹான்கள் நல்வழிநடத்தவே "சூரியனைக் கும்பிடு, சகல புண்ணியமும்  கிடைக்கும்" விவசாயக் கூலி வேலை செய்யும்  பெண்மணிக்கு (என்ன ஆறுதல், என்ன கருணை ) கிராமத்தில் முகாம். விவசாயக் கூலி வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள். பெரியவாள் எதிரில் கையைக் கூப்பிக் கொண்டு நின்றாள். நெஞ்சு படபடவென்று அடித்துக்  கொண்டிருந்தது. "என்ன வேலை பண்றே?" "வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்கள், மாமியா, எங்கிட்ட இருக்கு. காலையில் சோறாக்கி வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப் புறம்தான் வீட்டுக்கு வருவேன். நான் எப்படி சாமியைக் கும்பிடறது?  கோயிலுக்குப் போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே   நேரமில்லே, சாமி....." பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன. "சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்.!. "காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு.சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்குப் பார்த்து ஒரு கும்பிடு போடு. " நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும்-சகல புண்ணியமு...

கங்கை ஏன் பூமியில் இறங்க வேண்டியிருந்தது

Image
கங்கை ஏன் பூமியில் இறங்க வேண்டியிருந்தது ? சொர்கத்தில் ஓடும் தெய்வீக கங்கை நதி பூமியில் வந்ததில்லை. அவளது ஒளி, அவளது அமைதி, அவளது வலிமை - அனைத்தும் கடவுள்களுக்காகவே ஒதுக்கப்பட்டவை சாகர் அரசரின் 60,000 மகன்கள் பூமியில் அகால மரணமடைந்தனர்,  அவர்கள் ஆன்மா இரட்சிப்புக்காக ஏங்கின. அவர்களுடைய இரட்சிப்புக்கு ஒரே ஒரு வழி இருந்தது. கங்கையின் புனித நீரோடை ஸ்பரிசம். ஆனால் கங்கையை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. பூமியில் அவளது பெரிய நீரோடையால் அனைத்தையும் பாய முடியும். அதனால்தான் கடவுளையும் தலைவணங்கும் தவம் தேவைப்பட்டது...அவர் அரசர் பகீரதன் பல ஆண்டுகளாக ஒரே ஒரு குறிக்கோளுடன் பகிரத் ஊடுருவியுள்ளார். உங்கள் மூதாதையர்களின் ஆன்மாவை விடுவிக்கிறோம். அவர்களின் தவச் சுடர்கள் மூன்று பேரையும் உலுக்கியது சொர்க்கம்-பூமி-நரக கடவுள்கள் கூட ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது இப்படிப்பட்ட விசுவாசம் மிகக் குறைவு என்பதை. இறுதியாக கங்கை சொன்னார்— "நான் வருவேன்...  ஆனால் யார் என் பாய்வதை நிறுத்தப் போகிறார்கள்? ” அப்போது மகாதேவ் தோன்றினார். கங்கையின் வேக நீரோட்டத்தை சிவாஜி தனது ஜட்டாக்களில...

கருப்பு நிறம் காளி

Image
 கருப்பு நிறம் காளியைக் குறிக்கிறது என்றால்?. அவள் எவ்வாறு சாத்வீகமான தாயாகிறாள். காளி குணம் என்பது அவளுடைய கோரமான மற்றும் சாந்தமான இரண்டு தன்மைகளையும் குறிக்கிறது. அவள் ஆக்ரோஷமான, அழிக்கும் சக்தி கொண்டவளாகவும்,  அதே சமயம் அருள் புரியும் தாயாகவும் கருதப்படுகிறாள். அது எவ்வாறு தமது குழந்தையான பக்தர்கள் துன்படும் போது அந்த லோக ஜனனியான தாயான அமாபாள் துன்பத்தை கொடுப்பவர்களை அழிப்பதற்கு உக்ரமான காளி ஆகிறாள். இதை தான் சங்கரபகவத்பாதாள் உக்ரமான தெய்வமான அப்பாளை சாந்தபடுத்துவதற்காக  திருவானக்கா  காஞ்சிபுரம் திருவொற்றியூர் போன்ற தலங்களில் ஶ்ரீ சக்ரத்தை நிறுவி அம்பாளை சாந்தமாகிறார் என்று புராணங்கள் கூறுகிறது. அவள் தாயானவள் அவள் நல்ல சேயுமானாள். அசுரனை அழித்த பிறகு அவளுடைய உக்கிரம் குறையாத போது,  ஒரு குழந்தை வடிவில் இருந்த பசியால் அழுத சிவனின் மாயையால், தாயன்புடன் அணைத்து பாலூட்டி, அவள் சாந்தமானாள்.  அழிக்கும் குணம்:  தீமைகளை அழிக்கும் சக்தி, அசுரர்களைக் கொல்வது போன்றவை காளியின் உக்கிரமான குணத்தைக் குறிக்கின்றன. அவளுடைய கோரமான தோற்றம், இருள் மற்றும் குழப்பத்தைக் க...

#செங்கண்மால்திருத்தங்கச்சியே")

Image
 நேற்றைய பதிவின் நோக்கம் #செங்கண்மால்திருத்தங்கச்சியே")  அனைத்தும் பரம் பொருளே என்று கண்டோம். அது எவ்வாறு என்பதை காண்போம். அது அப்பனாக இருக்கலாம் அல்லது ஹரியாக இருக்கலாம். எல்லாம் ஒன்றில் அடக்கம். அது தாயாகிய லோகஜனனி. அதை உணர்த்தவே திருவண்ணாமலையில் அர்த்தநாரீஸ்வராக இடப்பாகத்தை அம்பாளுக்கு அளித்தார். அதே இடப்பாகத்தை சங்கரன் கோவிலில் நாரயணனுக்கு அளித்தார். காரணம் அம்பாள் வேறு, நாராயணண் வேறு இல்லை. இரண்டு ஒன்றே என்பதை தான் பட்டர் திருமாள் திருதங்கச்சியே என்றார். #திருமால்திருத்தங்கச்சியே" என்பது அபிராமி அந்தாதி பாடலில் வரும்  ஒரு வரி ("செங்கண் மால் திருத்தங்கச்சியே"),  இது உலகைக் காக்கும் திருமாலின் சகோதரியான பார்வதி தேவியைக் குறிக்கிறது, இமவான் மகளான அம்பிகையை "திருமாலின் தங்கையே" என்று அபிராமி பட்டர் போற்றிப் பாடியுள்ளார். பொருள்: சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே. விளக்கம்:  உலகைக் காக்கும் கடமையில் எப்போதும் விழித்திருப்பதால் திருமாலின் கண்கள் சிவந்திருக்கும், அந்த மகாவிஷ்ணுவின் சகோதரியான பார்வதி தேவியே என்று அபிராமி பட்டர், அபிராமி அன்னையை அழைக்கிறார...

சங்கரன்கோவில்கோமதியம்மனுக்கு

Image
 #சங்கரன்கோவில்கோமதியம்மனுக்கு திருவண்ணாமலை உண்ணாமலை அம்மனுக்கு உள்ள ஓற்றுமை. ஒன்று ஹரியும் ஹரனும் என்பதை உணர்த்த #சங்கரநாராயணன் கோமதியம்மன் ஆடி தபசு(தவம்) மற்றொன்று  அம்மனும் அப்பனும் ஒன்றே என்பதை உணர்த்த #அர்த்தநாரீஸ்வரர்# உண்ணாமலையம்மன் கார்த்திகை தவம். ஆடி தபசு என்பது ஆடி மாதத்தில், சங்கரன்கோவிலில் உள்ள கோமதியம்மன்,  சங்கர நாராயணருக்காக தவம் செய்த நிகழ்வைக் குறிக்கும் ஒரு திருவிழா ஆகும்.  இந்தக் கடுமையான தவத்தின் முடிவில்,  சங்கரநாராயணர் அம்மனுக்குக் காட்சி தந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.  இந்த விழாவின் முக்கிய நோக்கம், சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்பதை உணர்த்தும் சங்கரநாராயணராக காட்சியளித்த நிகழ்வைக் கொண்டாடுவதாகும். #அதுபோல்திருவண்ணாமலையில் ஈசனின் இடப்பாகம் பெற்ற உண்ணாமுலை அம்பாள். பார்வதி தேவி சிவபெருமான் தேகத்தில் பாதியைப் பெற்று அர்த்தநாரியாக வரம் வேண்டினார். சிவபெருமானின் வழிகாட்டுதலின் படி காஞ்சிபுரம் வந்து அங்கு மணலால் ஒரு லிங்கம் அமைத்து தவம் இருந்தாள். பின்னர், அக்னி ஸ்தம்பமாக சிவபெருமான் காட்சி கொடுத்த திருவண்ணாமலையில் கெளதம ரிஷியின் ஆச்ரமத்த...

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தாத்பர்யம்?.

Image
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தாத்பர்யம்?. திருவண்ணாமலை கார்த்திகை தீபம் என்பது சிவன் பார்வதியால் உருவானது என நம்பப்படுகிறது. பிருகு முனிவர்:- பிருகு முனிவர் பார்வதி தேவியை வணங்காமல் சிவபெருமானை மட்டுமே வணங்கியதால், பார்வதி தேவி கோபமடைந்து அவருக்கு சாபமளித்தார்.  இதன் விளைவாக, பிருகு முனிவர் எலும்புகள் மட்டுமே கொண்ட உடலைப் பெற்றார்.  சிவபெருமான் இரக்கமுற்று, நடனமாடும்போது பிருகு முனிவருக்கு உதவியாக மூன்றாவது காலாக ஒரு ஊன்றுகோலை வழங்கினார்.  அர்த்தநாரீஸ்வரர் என்பது ஆண் பெண் இருவரின் கலந்த வடிவம், அதாவது பாதி சிவனும் பாதி பார்வதியும் சேர்ந்த உருவம் ஆகும். தனது வாமபாகத்தை பெறுவதற்காக திருவண்ணாமலையில் தவமிருந்தால். காரணம் ,இருவரும் தனிதனியாக இருப்பததால் பிருகு முனிவர் வண்டாக மாறி அம்மைக்கும் அப்பனுக்கு இடையில் உள்ள பகுதி வழியாக அப்பனையும் மட்டும் வலம் வருவதால். அந்த இடைவெளி இருக்க கூடாது என எண்ணி, தனக்கு சிவனின் சரிபாதி இடம் வேண்டும் என்று திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் பௌர்ணமி கிருத்திகை நக்ஷ்ரத்து அன்று சிவனிடமிருந்து அவரது வாமபாகத்தைப் பெற்றார். ஆதனால் திருகார்த்திகையன்...

திருகார்த்திகை தீபம்

Image
கார்த்திகை மாதத்தில் வரும் முழு நிலவு மற்றும் கார்த்திகை நட்சத்திரம் ஆகிய இரண்டும் சேரும் நாளில் இந்தத் திருவிழா கொண்டா டப்படுகிறது. இத்திருவிழாவில், திருவண்ணாமலை மீது ஏற்றப்படும் மகா தீபம், சிவன்-பார்வதி தத்துவம் மற்றும் அனைத்து உயிர்களின் ஒன்றிணைவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.  சிவன்-பார்வதி தத்துவம்: சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் ஜோதி ஸ்வரூபத்தை  இந்த தீபம் குறிப்பதாக நம்பப்படுகிறது.  ஏகன் அநேகனாகி, அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தின் அடிப்படையில், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். அதிகாலை பரணி தீபம்: அதிகாலையில் பரணி நட்சத்திரத்தின் போது,  தீபங்கள் ஏற்றப்படும். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, மலை உச்சியில் அண்ணாமலையார் அருகில் வைத்துவிடுவார்கள். மகா தீபம்:  மாலையில் ஏற்றப்படும் மகா தீபம், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் மலை உச்சியில் ஏற்றப்படும்.  இது சிவன் - பார்வதி தத்துவத்தை குறிக்கிறது. பல்வேறு தீபங்கள்: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  பரணி தீபம்,  அண்ணாமலையார் தீபம்,  விஷ்ணு தீபம்,  நாட்டுக் கார்த்திகை தீபம்,  தோ...