திருப்பாவை மற்றும் பறைகள்
திருப்பாவையில்
அடிக்கடி சொல்லப்படும்.
புறநானூறில் ஆங்காங்கே பேசப்படும்
இந்த 12 பறைகளில்,
ஆகுளிப் பறையும், சிறுபறையும் மென்மையாகவும்,
பாடலுக்கு இசைந்தும் கொட்டப்படுவதுடன்,
கடவுளைக் குறித்து,
விடிவதற்கு முன்னமேயே கொட்டப் படுவதால்,
ஆண்டாளும் அவள் தோழிகளும், கொட்டிய பறை சிறு பறை அல்லது ஆகுளிப் பறை எனக் கொள்ளலாம்.
இனி, பறை என்று ஆண்டாள் கூறும் செய்திகளைப் பார்ப்போம்.
மொத்தம் 10 இடங்களில்
ஆண்டாள் பறை என்று குறிப்பிடுகிறாள்.
ஆண்டாள் கூறும் பறை
1. பறை தருவான் (பாசுரம் – 1)
2. பாடிப்பறை கொண்டு (பாசுரம்- 8 )
3. போற்றப் பறை தரும் – (பாசுரம்- 10)
4. அறை பறை – (பாசுரம் -16)
5. பறை தருகியாகில் – (பாசுரம் -25)
6. சாலப்பெரும் பறை – (பாசுரம் -26)
7. உன்றன்னை பாடிப் பறைகொண்டு – (பாசுரம் -27)
8. நீ தாராய் பறை – (பாசுரம் -28)
9. இற்றைப் பறை கொள்வான் – (பாசுரம் -29)
10.அங்கப் பறை கொண்ட ஆற்றை – (பாசுரம் -30)
�அவற்றுள்,
26 -ஆம் பாசுரத்தில் வரும்
சாலப் பெரும் பறை,
மேற் கண்ட 12 பறைகளுள்
சல்லிப் பறையை ஒத்திருக்கிறது.
சல்லிப் பறை என்பது,
விழாக்களில் கொட்டப்படுவது. சுற்றுப்புறத்து ஓசைகளையும் மீறி ஓங்கி ஒலிக்க வேண்டிய பறை.
‘மாலே மணி வண்ணா’ எனத் தொடங்கும் பாசுரத்தில்,
‘சாலப் பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே’
என்று ஆண்டாள் கூறும் வர்ணனை இறைவன் வரும் வீதி ஊர்வலம் போல உள்ளது.
ஞாலத்தை எல்லாம் நடுங்கச் செய்யும் வகையில் பாஞ்சசன்னியம் என்னும் சங்கூதும் ஒலியோடு,
பிற ஒலி முழக்கங்களும், பல்லாண்டு இசைத்த வண்ணம் செல்வதும், கோல விளக்கும்,
கொடியும், விதானமும் செல்லும் பாங்கினையும் உரைத்திருப்பது,
மார்கழி மாதத்து வைகுண்ட ஏகாதசி,
அன்று திருமால் வீதி வலம் வரும் கருட சேவை போன்று இருக்கிறது. வீதி ஊர்வலத்தில் கொட்டப்படும் சல்லிப் பறையை ஆண்டாள்
சாலப் பெரும் பறை என்று கூறியிருக்கலாம்.
திருப்பாவையில் வைகுண்ட ஏகாதசி
முப்பது திருப்பாவை பாசுரங்களும், நாள்
ஒன்றுக்கு ஒரு திருப்பாவை என்ற கணக்கில் முக்கியத்துவம் கொடுத்து பாடப் படுகிறது.
அப்படிப் பார்க்கும் போது, முதல் பாசுரத்தில்
#ஆண்டாள் திருவடிகளே சரணம்*

Comments
Post a Comment