Posts

Showing posts from January, 2026

ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டு பகுதி4

Image
 #முதலில்ஆன்மாவைப்பற்றிசிறிதுவிளங்கிக்கொண்டுபகுதி4 . பின்னர் மனிதனின் ஆறாம் அறிவு பற்றி ஆராயலாம். ஆன்மா இந்த உயிருடலில் எப்போது இணைந்து கொள்கிறது,  உயிருடலில் ஆன்மா வாழும்போது அதன் செயற்பாடு என்ன,  எப்போது இந்த ஆன்மாவானது உயிருடலில் இருந்து பிரிந்து செல்கிறது,  ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்விகள் எல்லோரிடமும் உண்டு. மனித உடலினுள் ஆன்மா எப்போது புகுந்து கொள்கிறது என்று பார்ப்போமானால்  ஒரு தாயின் கர்ப்பப்பையில் இருந்து ஒரு முழு வளர்ச்சியடைந்த சிசு வெளியேறி முதற் சுவாசம் நடைபெறும்போது அதன் உடலினுள் ஆன்மாவானது குடிபுகுந்து கொள்கிறது.  அப்போது குழந்தை அழுதவாறு தனது இவ்வுலக சம்சாரத்தினை ஆரம்பிக்கின்றது.  அதுவே அக்குழந்தையின் பிறப்பாக நேரம் குறிக்கப்படுகிறது. ஒரு விதையின் கோதை உடைத்து வெளிவரும் தாவர முளை  அல்லது ஒரு முட்டையின் கோதை உடைத்து வெளிவரும் மீன்  அல்லது  பறவையின் குஞ்சுகளுக்கும் இவ்வுதாரணம் பொருந்தும். ஐம் புலன்கள் கொண்டு அறியும் திறன் ஆன்மாவினால் கையாளப்படுகிறது.  இப்போது ஒரு உயிருக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் பு...

உடல் உயிர் ஆன்மா பகுதி -3

Image
 உடல் உயிர் ஆன்மா பகுதி -3 இப்போது உடல் என்றால் என்ன?. உயிர் என்றால் என்ன?. இந்த உடலுக்கும் உயிருக்கும் இடையில் உள்ள சம்பந்தம்  (தொடர்பு) என்ன என்று ஓரளவு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அடுத்தாக இந்த #ஆன்மா என்றால் என்ன அது எப்போது இந்த உயிருடலுடன் இணைந்து கொள்கிறது என்பதுபற்றி ஆராயலாம். #ஆன்மா எப்படி பிறப்பெடுக்கிறது என்று ஆராயும்போது.  சிவம் என்ற நிலையான சக்தி இவ்வுலக சஞ்சாரம் அதாவது இவ்வுலக தொழில்பாட்டை நிலைநாட்டுவதற்காக  #சக்தி என்னும் அசையும்  சக்தியுடன் இணையும்போது ஆன்மா உருவாகிறது.  இதுவே இந்து மதத்தில் சிவன் பார்வதியில் இருந்து ஆன்மா தோன்றுவதாகவும்,  இவ்வாறு வேறு வேறு மதங்களில் வேறு வேறு பெயர்களில் சித்தரிக்கப் பட்டிருந்தாலும்  எல்லா மதங்களும் #ஆன்மா ஒரு மூலத்தில் இருந்து உருவாகிறது என்பதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு உயிரினத்துக்கு (உடலுக்கு) பரிணாம வளர்ச்சி  இருப்பது போல  ஒரு ஆன்மாவுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு.  சிவனில் இருந்து உருவாகும் ஆன்மாவானது பல படிமுறைகளை பல உடல்களைக் கடந்தே இந்த  மனித உடலை அடைகிறது எனக...

உடல் உயிர் ஆன்மா- பகுதி 2.

Image
 உடல் உயிர் ஆன்மா- பகுதி 2. இவ்விடத்தில் உயிருடலின் தன்மையினை சிறிது ஆராந்து கொண்டு #ஆன்மாவைப் பற்றி ஆராயலாம். ஒரு மனித உயிருடல் பற்றிப் பார்க்கும்போது ஒரு தாயின் கருப்பையில் வளரும் ஒரு கருவானது #ஆன்மா இல்லாத ஒரு உயிருடலாகும்.  அக்கருவானது கை கால்களை அசைக்கும்.  தாயில் இருந்து தொப்புள் கொடிமூலமாக கிடைக்கும் உணவை உள்வாங்கும்.  அதன் உள் அங்கங்களின் செயற் பாட்டினால் சமிபாடடையும். அதன் இதய துடிப்பு காரணமாக இரத்த ஓட்டம் நடைபெறும்.  ஆன்மா இல்லாத போதும் ஒரு உயிருடலில் இச்செயல்முறைகள் நடைபெறும். இன்னொரு உதாரணமாக  ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விதையினை ஒரு தாயின் கருவில் வளரும் கருவுக்கு ஒப்பிட முடியும். ஒரு விதையினை ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ஒரு மரத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு உயிருள்ள தடி அல்லது ஒரு கம்பு  ஒரு மரத்தின் அங்கமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு உடலில் உணவு செரிமானம், செரிக்கப்பட்ட உணவு இரத்தத்தோடு கலக்கப்படல், இரத்தம் சுத்தமாக்கப்படல், சுத்தமாக்கப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் இதயம் மூலமாக அனுப்பப்படல்,...

உடல் உயிர் ஆன்மா பகுதி 1

Image
 உடல் உயிர் ஆன்மா என்றால் என்ன நண்பரின் அருமையான பதிவு. நாம் ஆன்மீக நாட்டம் கொண்டு ஆன்மீகத்தினுள் பிரவேசிக்கும்போது அதாவது யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போது அறிந்து கொள்ளும் சொற்களான  உடல், உயிர், ஆன்மா, குண்டலினி என்பனபற்றி எனது எண்ணத்தில் கருத்தில் தோன்றிய விடயங்களை இங்கு ஆராய்ந்து பார்க்கலாம் என்று எண்ணியுள்ளேன்.  எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளது கேள்வி பதில்களையும் மேலும் பல தேடல்களில் இருந்தும் நான் அறிந்துகொண்ட,உணர்ந்து கொண்ட, புரிந்துகொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். முதலில் உடல் என்றால் என்ன என்பதனை பார்க்கலாம்.  உடல் என்பது பல சிறிய கலங்களால் ஆன ஓர் அமைப்பு. அதாவது பல அணுக்களால் ஆனது உலோகம்.  அதாவது ஒரு உலோகத்தின் மிகச்சிறிய துகள் அணு என்று அழைக்கப்படும்.  இன்னும் விரிவாக்கப் பார்க்கப் போனால் ஒரு உலோகத்தை மேலும் மேலும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொண்டு போகும்போது இறுதியில் மிஞ்சிவது அணு எனக் கொள்ளலாம். எனவே உலோகங்கள் அணுக்களால் (அணு) ஆனவை போல உடல்கள் கலங்களால் (கலம்) உயிரணுக்களால் ஆனவை. அணுவை எப்படி எமது வெறும் கண்ண...

#ரதசப்தமி (Ratha Saptami)

Image
 #ரதசப்தமி (Ratha Saptami)  இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளிலிருந்து 7வது நாள் இரதசப்தமி. ஏழு குதிரைகள்  (ஏழு வண்ணங்களைக் குறிக்கின்றன)  பூட்டிய தனது ரதத்தை வடக்கு திசையில் திருப்பி பயணிப்பதாக கருதப்படுகிறது.  மேலும், இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப் படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய #தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு  ரத சப்தமியன்று வடக்கு நோக்கி #உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும்.  இது பருவங்களின் அடிப்படையில்,  வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது.  இந்திய விவசாயிகளூக்கு இந்த நாள் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக உள்ளது.  இந்து சமய குடும்பங்களிலும், சூரியக் கடவுள் உள்ள கோவில்களிலும் ரத சப்தமி  மிக விமரிசையாக கொண்டாடப் படுகிறது. #வரலாறு சூரிய வழிபாடு இந்து மதத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது  மற்றும்  அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் மீது இந்துக்களால் ஒவ்வொரு நாளு...

வஸந்த பஞ்சமி

Image
 

நவகிரகங்கள்

Image
 நவகிரகங்கள் : நண்பரின் பதிவு உறவுகளின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அதிசய ரகசியங்கள்! இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவர் சிவபெருமான். உலக உயிர்களை உருவாக்க பிரம்மாவையும், அவற்றைக் காக்க திருமால் மகாவிஷ்ணுவையும் சிவபெருமான் படைத்தார். படைத்தல், காத்தல், அழித்தல் — இந்த மூன்று தொழில்களும் தெய்வீகமானவை. ஆனால், இந்த மூவராலும் படைக்கப்பட்ட உயிர்கள் உடனே முக்தி (பிறவா நிலை) அடைந்துவிடவில்லை. ஏன்? 👉 ஒவ்வொரு உயிரும், தன் கர்ம வினைகளை முழுமையாக அனுபவித்த பிறகே முக்தியை அடைய முடியும் என்பதே சனாதன தர்மத்தின் அடிப்படை விதி. கர்ம கணக்குகளை நடத்தும் தெய்வ அதிகாரிகள் ஒரு உயிர் தன் பாவ–புண்ணிய கணக்குகளை சரியாக அனுபவித்து, நியாயமாக வாழ்க்கையை கடந்து செல்ல சிவபெருமானால் உருவாக்கப்பட்டவர்களே — 👉 நவகிரகங்கள் (இங்கு “நவநாயகர்கள்” எனவும் அழைக்கப்படுகிறார்கள்) நவகிரகங்கள் அனைவரும் 👉 சிவபெருமானுக்கே கட்டுப்பட்டவர்கள் 👉 அதிதேவதையின் கட்டளைக்கு மட்டுமே செயல்படுபவர்கள் அவர்கள் அனைவரும் ஒரே காலத்தில் உருவானவர்கள் அல்ல. 🔹 சிலர் முனிவர்களின் புதல்வர்களாகப் பிறந்தனர் 🔹 சிலர் கடும் தவம் புரிந்தனர் 🔹 சிலர் சாபம...

சியாமளா தேவி

Image
 நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம். சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம். இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது நாட்கள் சியாமளா நவராத்திரி எனப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சியாமளா தேவி நவராத்திரி விரதம் தொடங்குகிறது. சியாமளா நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ராஜசியாமளா தேவியின் மந்திரங்களை குருமுகமாக உபதேசம் செய்து கொண்டு வழிபாடு செய்யலாம். காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகம் என்னும் புத்தகத்தில் சியாமளா தேவி மாணிக்க கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் ஆர்வமுள்ளவளாக, எட்டுக் கைகளுடன், மரகதப் பச்சை நிறமுள்ளவளாக, மார்பில் குங்குமச் சாந்து தரித்தவளாக நெற்றியில் சந்திர கலையை அணிந்து கொண்டவளாக, கைகளில் கரும்பு வில், மலர் அம்பு, பாசம், அங்குசம் ஆகிய ...

எதற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம். தொடர்ந்து உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறும் அன்பர்கள், பிணிகளில் இருந்து விடுபட்டு தேக ஆரோக்கியம் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யலாம்? அதற்கான தெய்வ ஸ்துதி என்ன? அம்பாளை மனமுருக வேண்டி வழிபடலாம். தாயினும் மேலாக நம் மீது கருணை பொழியும் ஜகன்மாதா அம்பிகை. அவளின் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டாலே இன்னல்கள் யாவும் நீங்கும். குறிப்பாக லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். இதன் மகிமையை அகத்தியருக்கு ஹயக்ரீவர் விளக்கியுள்ளார். இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன், நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும். பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், தீராத நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். ஜுரம் முதலியவற்றால் பீடிக்கப்பட்டவர்களின் தலையைத் தொட்டுக் கொண்டு பாராயணம் செய்தால், அந்தப் பிணிகள் நீங்கும். அதேபோல், விபூதியைத் தொட்டுக்கொண்டு பாராயணம் செய்து, அந்த விபூதியை இட்டுக் கொள்ள நோய்கள் நீங்கும். NANDRI: SAKTHI VIKATAN - ஷண்முக சிவாசார்யர்#

Image
எதற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ரநாம பாராயணம். தொடர்ந்து உடல்நலக் குறைபாடுகளால் அவதியுறும் அன்பர்கள்,  பிணிகளில் இருந்து விடுபட்டு தேக ஆரோக்கியம் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்யலாம்?  அதற்கான தெய்வ ஸ்துதி என்ன? அம்பாளை மனமுருக வேண்டி வழிபடலாம்.  தாயினும் மேலாக நம் மீது கருணை பொழியும் ஜகன்மாதா அம்பிகை. அவளின் திருநாமங்களைச் சொல்லி வழிபட்டாலே இன்னல்கள் யாவும் நீங்கும். குறிப்பாக லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம். இதன் மகிமையை அகத்தியருக்கு ஹயக்ரீவர் விளக்கியுள்ளார்.  இந்த ஆயிரம் நாமங்கள் ரகசியமானவையாகவும் தேவிக்கு மிகவும் பிரியமானவையாகவும் இருப்பதுடன்,  நோய்களைப் போக்குவதாகவும், நீண்ட ஆயுளைத் தருவதாகவும், மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருள்வதாகவும் திகழ்கின்றன. அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஏதேனும் ஒரு நாமாவைப் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் துதிப்பவர்களுக்குப் பாவங்கள் நீங்கும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய புண்ணியம் வாய்க்கும்.  பௌர்ணமியன்று சந்திரனில் அம்பிகை இருப்பதாகப் பாவித்து, இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால்,  தீராத நோய்கள் ந...

தை அமாவாசை மற்றும் அபிராமி அந்தாதி

Image
 இன்று தை அமாவாசை மற்றும் அபிராமி பட்டருக்கு அம்பிகை அருளியதாள் அபிராமி அந்தாதி உருவன நாள் இவற்றை தானம் செய்யுங்கள். ஜென்ம பாவம் தீரும். முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்! முன்னோர்களின் ஆசிகள் கிடைக்க இந்த பொருட்களை தை அமாவாசையில் தானமாக கொடுங்கள்.  இந்து மத சாஸ்திரங்களின்படி வருடம் முழுவதும் வரும் அமாவாசை சிறப்பானது என்றாலும் தை அமாவாசை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக கருதப்படுவதால்,  அந்நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட வேண்டும்.  அதன்படி இந்தாண்டுதை அமாவாசை உங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம். அமாவாசை நாளில் பக்தர்கள் புனித நதிகள் மற்றும் ஏரிகளில் மூழ்குவார்கள்.  அதன் பிறகு வழிபாடு, தவம், தானம் முதலியவை செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்நாளில் தர்ப்பணம், திதி வழங்குவது மூலம் முன்னோர்கள் முக்தி அடைகின்றன.  அமாவாசை நாளில் தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. அமாவாசை தினத்தன்று தானம் செய்வதால் ஒவ்வொருவருக்கு நிச்சயம் வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதில் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பை...

வாராஹி அம்மன்

Image
 சில விஷயங்கள் நம் மனதை வருடும். அதில் ஒன்று நேற்றைய முன் தினம் பிள்ளையார் கோவில் குருக்கள், என்ன நினைதாரோ தெரியவில்லை.  மாமா நாளை அனுஷத்திற்கு அபிஷேகத்திற்கு திரவியங்கள் வாங்கிக் கொடுங்கள் என கூறினார். அவர் கூறியது போல் மறுநாள் மாலை திரவியங்கள் மற்றும் பாலை எடுத்துக்கொண்டு கோவிலை நோக்கி விரைந்த போது. கோவில் மாமா உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் என கூறினார். மேலும் நேற்று கைங்கர்ய கார்யத்தில்  ஈடுபட முடியவில்லை. எனவே மஹாபெரியவாளை தரிசினம் செய்து எனது பணிக்கு கிளம்பிவிட்டேன். சரி கைங்கர்யம் செய்ய முடியவில்லை மஹாபெரியவாளை தரிசனம் செய்யலாம் என எண்ணி மாலை கோவிலை நோக்கி பயணித்த போது,என்ன ஆச்சரியம் மஹாபெரியவாவுலுடன் வாராஹி தரிசனம். கோயில் குருக்கள் நானே எதிர்பார்க்க வில்லை நீங்கள் வந்த போன பிறகு அம்பாள் வாராஹி கோவிலில் எழுந்தளினாள். தங்கள் வாங்கி கொடுத்த அனைத்து திரவியங்களும் வாராஹி அம்பாளுக்கு தனக்கு அபிஷேகத்திற்கு ஏற்றுக்கொண்டாள் என கூறினார். மேலும் அம்பாளை தரிசனம் முடித்த சில நொடிகளில் அம்பிளை கோவிலுக்கு கொண்டு வந்த உடமஸ்தர்,திரும்பவும் எடுத்து செல்ல ஆயுத்தம் ஆனார...

கனுப்பொங்கல் (Kanu Pongal)

Image
கனுப்பொங்கல் (Kanu Pongal) என்பது பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் ஒரு சிறப்புத் திருநாள் ஆகும். பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும், அவர்கள் சிறப்பாக வாழ வேண்டி, வண்ணமயமான சாதங்களை காகங்களுக்கு உணவளித்து வழிபடும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இது கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. கனுப்பொங்கல் முக்கிய அம்சங்கள்: வழிபாடு: பெண்கள், மாட்டுப் பொங்கல் அன்று காகத்திற்குப் படைப்பதற்காகப் வைக்கப்பட்ட, அரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம் சேர்த்துச் செய்த கலர் சாதங்களை,  அதிகாலையில் காகங்களுக்கு உணவளித்து கனுப் பிடி பிடிப்பார்கள். பொருத்தம்:  இது பெரும்பாலும் சகோதரர்களின் நீண்ட ஆயுள் மற்றும் செழிப்புக்காக, பிறந்த வீட்டைச் சேர்ந்த பெண்களால் (திருமணமானவர்கள்)செய்யப்படுகிறது. நம்பிக்கை:  காகங்கள் முன்னோர் வடிவம் எனக் கருதி, இந்த வழிபாடு மூலம் குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை. படைப்பு:  சாதங்கள் மட்டுமல்லாது, கரும்பு, மஞ்சள், வாழைப்பழம் போன்றவையும...

சப்த கன்னியர்

Image
சப்த கன்னியர் (சப்த மாதாக்கள்) என்பவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்கள்; இவர்கள் தீமைகளை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் தோன்றியவர்கள்; ஒவ்வொரு தெய்வமும் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களின் அம்சமாகப் படைக்கப்பட்டவர்கள், குறிப்பாக, சுப-நிசும்ப அரக்கர்களை அழிக்க அம்பிகைக்கு உதவியாகப் பிறந்தவர்கள்; இவர்களின் வரலாறு குஷாணர்கள் காலம் முதல் சிறப்புப் பெற்றுள்ளது, மேலும் இவர்கள் குலதெய்வ வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சப்த கன்னியர் யார்? பிராம்மி: பிரம்மாவின் அம்சமாகப் படைக்கப்பட்டவர். மகேஸ்வரி: சிவனின் அம்சமாகப் படைக்கப்பட்டவர் (யோகேசுவரியின் மூலம்). கௌமாரி: முருகனின் அம்சமாகப் படைக்கப்பட்டவர். வைஷ்ணவி: விஷ்ணுவின் அம்சமாகப் படைக்கப்பட்டவர். வராஹி: விஷ்ணுவின் வராக அவதாரத்தின் அம்சமாகப் படைக்கப்பட்டவர். இந்திராணி: இந்திரனின் அம்சமாகப் படைக்கப்பட்டவர். சாமுண்டி/சாமுண்டீஸ்வரி: யமனின் அம்சமாகப் படைக்கப்பட்டவர் (சில புராணங்களின்படி).  வரலாறு மற்றும் தோற்றம் அந்தகாசுரனை அழித்தல்: சிவன் அந்தகாசுரனுடன் போரிட்டபோது, அவன் உடலில் இருந்...

உடல் மற்றும் ஆத்மா பதிவுகள் ஏன்

Image
 உடல் மற்றும் ஆத்மா பதிவுகள் ஏன் . அவை ஆன்மீகத்தின் அடிபடை காரணிகள். ஒருவர் தான் ஆன்மீக வழியில் பயணிக்கிறேன் என கூறினால் அவரது மனமானது செம்மையாக இருத்தல் வேண்டும். செம்மை என்பது யாருக்கும் தீமை இழைக்காது இருத்தல். எல்லோரிடமும் அன்பாக நடத்தல் மற்றும்  முடிந்தால் நம்மால் முடிந்த உபகாரம் செய்தல்  அல்லது  உபவத்திரம் செய்யாது இருத்தல். இவை அனைத்தும் செய்யாமல்  என்பது ஆன்மீகத்தில் இருத்தல் என பொருள்படும். இவையே நம்மைப் பற்றிய அளவுகோல். இதை உணர்ந்து அவ்வழியில் நடப்பதே நாம் ஆன்மீக நாம் இருப்பதே ஆகும்.

ஆன்மீகத் தத்துவங்கள்

Image
 ஆன்மீகத் தத்துவங்களின்படி , மனிதனுக்கு மனிதன் ஆன்மாவின் அடிப்படைத் தன்மை வேறுபடுவதில்லை; ஆன்மா என்பது தூய்மையான ஆற்றல், அது அனைவருக்கும் ஒன்றே. ஆனால், கர்ம வினைகள் மற்றும் மனதின் செயல்பாடுகளால் ஆன்மா வெளிப்படும் விதம் நபருக்கு நபர் வேறுபட்டுத் தோன்றுகிறது. ஆன்மீகத் தத்துவங்களின்படி, மனிதனுக்கு மனிதன் ஆன்மாவின் அடிப்படைத் தன்மை வேறுபடுவதில்லை;  ஆன்மா என்பது தூய்மையான ஆற்றல்,  அது அனைவருக்கும் ஒன்றே. ஆனால்,  கர்ம வினைகள் மற்றும் மனதின் செயல்பாடுகளால் ஆன்மா வெளிப்படும் விதம் நபருக்கு நபர் வேறுபட்டுத் தோன்றுகிறது.. அடிப்படைத் தன்மை (ஒன்றே): ஆன்மா என்பது அழியாதது, தூய்மையானது,  ஒவ்வொரு உயிரிலும் இருக்கும் உயிர் ஆற்றல். வெளிப்பாடு (வேறானது):  ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட எண்ணங்கள், உணர்வுகள், அறிவு மற்றும் குணங்கள் காரணமாக ஆன்மாவின் அறிவுத்திறன் வெவ்வேறாகச் செயல்படுகிறது. வேறுபடுவதற்கான காரணம்:  கர்ம வினைகள் மற்றும் மனம், உடல் ஆகியவற்றின் தாக்கத்தால் ஆன்மாவின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டு வேறுபட்டுத் தோன்றுகிறது.  சுருக்கமாக, ஆன்மா ஒன்றே,  ஆனால் உடலு...

ஆத்மா சுத்தி என்றால் என்ன?.

Image
 ஆத்மா சுத்தி என்றால் என்ன?. இறை வழிபாடு...... ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்  சிலர் சென்று,.... "நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும்" என அவரை அழைத்தார்கள். ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?'' என்று அவர்களை பார்த்துக் கேட்டார். அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்" என்றனர். ''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை. நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் , இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார். அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர். திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார். புனித நதியில் முழுகி வந்த பாகற்காய். இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார். ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்ட...

ஆன்மாவின் தன்மைகள்

Image
ஆன்மாவின் தன்மைகள் ஆன்மா (ஆத்மா) என்பது உடலிலிருந்து  வேறுபட்ட,  அழிவற்ற,  நித்தியமான,  உணர்வுள்ள ஒரு தெய்வீகப் பொருள். இது  பிறப்பு,  இறப்பு,  மாற்றம் இல்லாதது;  வெட்டவோ,  எரிக்கவோ,  ஈரப்படுத்தவோ,  உலர்த்தவோ முடியாதது.  சச்சிதானந்தம் (உண்மை, அறிவு, பேரின்பம்) என்று அழைக்கப்படும் ஆன்மா,  தூய வடிவம் மற்றும் எல்லையற்ற குணங்களைக் கொண்டது.  #ஆன்மாவின்முக்கியதன்மைகள்: #அழியாததன்மை (Eternal/Immortal): உடல் அழியும்,  ஆனால் ஆன்மா அழிவதில்லை;  அது நித்தியமானது. #மாற்றமில்லாதது (Immutable):  காலம், சூழல் காரணமாக ஆன்மாவின் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. #தூய்மையானது (Pure):  ஆன்மா இயற்கையிலேயே தூய்மையானது, ஆனால் கர்ம வினைகளால் மறைக்கப்படுகிறது. #அறிவுமற்றும்உணர்வு  (Consciousness):  ஆன்மா அறிவின் வடிவம், இதுவே உடலுக்கு உணர்வை அளிக்கிறது. #பேரின்பம் (Bliss):  ஆன்மா நிலையான மகிழ்ச்சியின் இருப்பிடமாகும். #எங்கும்நிறைந்திருப்பது  (All-pervading):  ஆன்மா ஒரு இடத்தில் மட்டும் கட்டு...

அபிராமி அந்தாதி பாடல்களின் தாத்பர்யம்

Image
அபிராமி அந்தாதி பாடல்களின் தாத்பர்யம் #பின்னணிநிகழ்வு: இந்த அபிராமி அந்தாதி உருவாவதற்கு அன்னை பட்டரிடம் ஆடிய திருவிளையாடலே காரணம். காரணம் தனது பக்தனின் பக்தியை உலகறிய செய்ய அன்னை ஆடிய  திருவிளையாடலே இதற்கு காரணம். எந்த பக்தன் ஆழ்ந்த தியானத்தில் அன்னையின் முகம் பௌர்ணமி முழுநிலாவாக காட்சி அழித்ததோ. அப்போது மன்னர் இன்று என்ன திதி என வினாவ, தான் கண்ட அன்னையின் திருவுருவத்தை வைத்து இன்று #பௌர்ணமி திதி என்கிறார். மனம் ஆனது இறைவனிடம் லயிக்கும் போது நம்மை சுற்றி நடப்பது நாம்  எதையும் அறியமாட்டோம். அந்த மாதிரி மனநிலையிருந்து பட்டர் பௌர்ணமி திதி என்று சொன்னத்தில் எந்த ஐயமும் இல்லை. காரணம் அவர்களுக்கு சகலுமும் அம்பாளின் திருபாதமே தெரிந்தது. அதன் வெளிபாடலில் அம்பாளின் திருபாதத்தை பாடி இருப்பார் மாறாக  எந்த ஒரு பாடலிலும் என்னை காப்பாற்று என பாடாமல் நான் உனது சரணகதி அடைந்தேன் என பாடியிருப்பார். இந்த 79வது பாடலில்  விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"  எனத் தொடங்கி என பாடி இருப்பார். அந்த பாடலின் #பொருளுரை வரும் வெள்ளியன்று விரிவாக காணலாம். #ஆன்மிகவிடுதலை:  இந்த பாடல்,...

ஆன்மா என்றால் என்ன

Image
 ஆன்மா என்றால் என்ன ஆன்மா என்பது ஒரு உயிரினத்தின் அழியாத, பொருளற்ற சாராம்சம் அல்லது ஆன்மிகப் பகுதி ஆகும்,  இது உடல் அழிந்த பிறகும் நிலைத்திருக்கும் என்றும்,  மனிதனுக்கு தனித்துவத்தையும், உணர்வையும், சிந்தனையையும், நன்னெறி உணர்வையும் அளிக்கிறது என்றும் மதங்கள் மற்றும் தத்துவங்கள் நம்புகின்றன;  இந்து சமயத்தில்,  இது உண்மையான சுயத்தையும், பரமாத்மாவின் பகுதியையும் குறிக்கிறது.  ஆன்மாவின் முக்கிய பண்புகள்: அழியாத தன்மை:  உடலை விட்டுப் பிரிந்த பிறகும் ஆன்மா நிலைத்திருக்கும் என்று நம்பப்படுகிறது. உண்மையான சுயம்:  இது ஒருவரின் உள்ளார்ந்த, மாறாத சாராம்சம்; உடல் மற்றும் மனம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. ஆன்மிக தீப்பொறி:  பரமாத்மாவின் ஒரு பகுதி, ஞானம் மற்றும் பேரின்பம் நிறைந்தது. செயல்பாடு:  சிந்தனை, உணர்வுகள், நல்வினை தீவினைப் பலன்கள் போன்றவற்றிற்கு ஆன்மாவே காரணம் என்று கருதப்படுகிறது. ஒளி வடிவம்:  ஆன்மா அறிவு மற்றும் ஒளி வடிவில் உள்ளது, அதற்கு வடிவம் தேவையில்லை.  பல்வேறு நம்பிக்கைகள்: இந்து மதம்:  ஆன்மா (ஆத்மா) என்பது பிரம்மத்தின்...

ஆன்மீகம் மற்றுமொரு விளக்கம்

Image
நேற்று ஆன்மீகம் என்பது என்ன என்ற பதிவை கண்டோம். அம்மையும் அப்பனும் இணைந்த இணைவே இந்த உலகு என கண்டோம். அது எவ்வாறு உடல் அப்பன் ஆனால் உயிர் அல்லது ஆன்மா அம்மை ஆவாள். உடல் இல்லாமல் உயிருக்கு மதிப்பில்லை அதே போல் உயிர் இல்லாமல் உடலுக்கு மதிப்பில்லை. அப்பனின் வலது பாகம் ஆண் பாகம் . அவரது இடது பகுதி பெண்பாகம். அம்பாள் வேறு நாராயணன் வேறல்ல அதற்கு சான்றுகள் அம்மை அப்பன் இணைவே அர்த்தநாதீஸ்வரர் தத்துவம். அந்த இடப்பாகத்தை நாராயணுக்கு தந்து சங்கர நாராயணண் ஆனார். அந்த இடபாகமே அம்மை பாகம் அந்த அர்த்தநாதீஸ்வரர் தத்துவத்தில். சிவன் சக்தியாகிய நாராயணனால் ஹரஹரசுதன் உருவானார். நாராயணன் நாராயணி நாம சாம்யம் தான் கேரளா சோட்டாணிகரை பகவதி. அங்கு அம்பாளுக்கு மூன்று அலங்காரங்கள். சரஸ்வதி/லெக்ஷ்மி/தேவி அலங்காரங்கள். மஹான்கள் உடலை விடுத்து அதாவது அழிக்கின்ற உடலை விடுத்த ஆன்மாவை இறுக்கப் பற்றினர். அதனால் ஆன்மாவை மேம்படுத்துதலே ஆன்மீகம். இந்த ஆன்மா,ஆலயத்தில் ஆன்மா லயித்தால். அங்கு மன அமைதிப் பிறக்கும் அதனால் தான் அதற்கு ஆ+லயம். ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அல்லது  கோயில் கோ என்ற பசு. கோ என்றால் ஆன்மா.  ஆன்ம...

ஆன்மீகம்

Image
ஆன்மீகம் என்றால் என்ன என்பதை வரையறுப்பது எளிதான காரியமல்ல, ஏனெனில் பழங்காலத்திலிருந்தே மக்கள் அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து உணர்ந்துள்ளனர்.  அதனால்தான் ஆன்மீகத்தின் அர்த்தம் காலப்போக்கில் பரிணமித்துள்ளது.  இருப்பினும்,  ஆன்மீகம் என்பது அறிவியல் என்பதால் அதன் வரையறை அறிவியல் பூர்வமானதாக  இருக்க வேண்டும் பாதை ஆன்மீக அறிவியல் ஆன்மீகம் என்றால் என்ன? ஆன்மீகம் என்றால் என்ன என்பதை வரையறுப்பது எளிதான காரியமல்ல, ஆன்மாவை அறிந்து அதை நோக்கி நடப்பதுதான் ஆன்மீகம். சாப்பிடுவது,  குடிப்பது,  வேலைக்குச் செல்வது,  பணம் சம்பாதிப்பது  போன்றவை அனைத்தும் உலகியல் செயல்கள்.  ஊழல் மற்றும்  கொள்ளையில் ஈடுபடுவது,  கொள்ளையடிப்பது,  மக்களைத் துன்புறுத்துவது  மற்றும்  மக்களைத் துன்புறுத்துவது  ஆகியவை மதச் செயல்கள் அல்ல; பூஜை செய்வது,  மந்திரம் செய்வது ,  வழிபடுவது,  உண்ணாவிரதம் இருப்பது  மற்றும்  உணவு மற்றும் பணத்தை தானம் செய்வது  அனைத்தும் மதச் செயல்கள். இருப்பினும்,  அவை ஆன்மீகம் அல்ல!  எனவே,...

திருவாதிரை

Image
மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் உள்ள ஆரூர் கோயில் கொண்டருளிய நடராஜப் பெருமானையும் தியாகராஜர் பெருமானையும் தரிசக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர். மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராசருக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அவற்றுள் சிதம்பரத்தில் திருவாரூரில் நடப்பது மிகவும் சிறப்புடையது.  திருவாதிரை தினத்தில் தியாகராஜ சுவாமி வட பாத தரிசனம் காட்டப்படும்.  திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி உலா வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.  இந்த ஆருத்ரா தரிசனம் செய்வதற்காகவே பக்தர்கள் செல்வர். ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல்.  இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்தும் கூட அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம்.  திருவாரூர் பஞ்சபூத தலங்களில்  பூமி தலமாகவும், சிதம்பரம் பஞ்சபூதத் ...