அபிராமி அந்தாதி பாடல்களின் தாத்பர்யம்
அபிராமி அந்தாதி பாடல்களின் தாத்பர்யம்
#பின்னணிநிகழ்வு:
இந்த அபிராமி அந்தாதி உருவாவதற்கு அன்னை பட்டரிடம் ஆடிய திருவிளையாடலே காரணம்.
காரணம் தனது பக்தனின் பக்தியை உலகறிய செய்ய அன்னை ஆடிய திருவிளையாடலே இதற்கு காரணம்.
எந்த பக்தன் ஆழ்ந்த தியானத்தில் அன்னையின் முகம் பௌர்ணமி முழுநிலாவாக காட்சி அழித்ததோ.
அப்போது மன்னர் இன்று என்ன திதி என வினாவ,
தான் கண்ட அன்னையின் திருவுருவத்தை வைத்து இன்று #பௌர்ணமி திதி என்கிறார்.
மனம் ஆனது இறைவனிடம் லயிக்கும் போது நம்மை சுற்றி நடப்பது நாம் எதையும் அறியமாட்டோம்.
அந்த மாதிரி மனநிலையிருந்து பட்டர் பௌர்ணமி திதி என்று சொன்னத்தில் எந்த ஐயமும் இல்லை.
காரணம் அவர்களுக்கு சகலுமும் அம்பாளின் திருபாதமே தெரிந்தது.
அதன் வெளிபாடலில் அம்பாளின் திருபாதத்தை பாடி இருப்பார்
மாறாக எந்த ஒரு பாடலிலும் என்னை காப்பாற்று என பாடாமல் நான் உனது சரணகதி அடைந்தேன் என பாடியிருப்பார்.
இந்த 79வது பாடலில்
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு"
எனத் தொடங்கி என பாடி இருப்பார்.
அந்த பாடலின் #பொருளுரை வரும் வெள்ளியன்று விரிவாக காணலாம்.
#ஆன்மிகவிடுதலை:
இந்த பாடல்,
பட்டர் அபிராமி அன்னையின் கருணையை நம்பி,
உலகப் பற்றுகளையும்,
பாவங்களையும் துறந்து,
இறை வழியில் செல்ல உறுதி பூண்டு,
தீயவர்களிடமிருந்து விலகி,
ஆன்மிக விடுதலை பெற வேண்டும் என்ற தீவிர பக்தியை வெளிப் படுத்துகிறது.
இந்தப் பாடலின் மகிமை காரணமாகவே,
தை அமாவாசை நாளில் வானில் நிலா இல்லாதபோது,
அபிராமி பட்டர் மீது கருணை கொண்டு,
தன் காதணியைக் கழற்றி வானில் வீசி,
முழு நிலவைப்போல ஒளிரச் செய்து,
அமாவாசையை பௌர்ணமியாக மாற்றியதாக வரலாறு கூறுகிறது,
இது பாடலின் ஆற்றலையும், அன்னையின் லீலையையும் உணர்த்துகிறது.
#அபிராமதாயேதுணை

Comments
Post a Comment