பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா
#பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா இதற்கு முந்தைய நாமமான, #நகதீதிதிஸஞ்சன்னநமஜ்ஜனதமோகுணா…’’ என்று நகங்களைப்பற்றி பார்த்தோம். இந்த வர்ணனையில் இந்த பாதத்தை நமஸ்கரிப்பவன் உடைய தமோகுணம் என்கிற இருட்டை,அறியாமையை ஒளிமயமான அம்பிகையின் கால் நகங்கள் எப்படி நீக்குகிறது என்று பார்த்தோம். இந்த நாமமான, #பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா…’’ என்கிற இந்த நாமமானது, மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது. இதற்கு முன்பு அம்பிகையினுடைய கணுக்கால், பாதத்தினுடைய மேற்பரப்பு, நகங்களை தனியாகப் பார்த்தோம். இப்படியே ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்துக் கொண்டே வந்தோம். இப்போது, மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது. இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு, #பதத்வய’’ என்கிற வார்த்தை அடுத்து வருகிற #ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டுவிடுவோம். #பதத்வயபராக்ருதஸரோருஹா…’’ என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம். இதில் வருகிற #ஸரோருஹம் எனில் #தாமரை என்று பொருள். #பராக்ருஹஸரோருஹா என்று சொன்னால், #தாமரையைவிட...