கவிஞர்கண்ணதாஸன்கண்ட மஹாபெரியவா
#கவிஞர்கண்ணதாஸன்கண்ட
#பெரியவா#.
படித்ததில் பிடித்தது.
நண்பரின் பதிவு.
தன் வாழ்க்கையில்,
ஒரு குறைப்பட்ட காலத்துக்கு,
ஹிந்து தர்மத்தையும்,
புராணங்களையும்,
ஶ்ரீ ஆதி ஶங்கராச்சார்யாளையும்,
நம் பெரியவாளையும்,
கண்டபடி விமர்ஸனம் செய்து
வந்த கவிஞர் கண்ணதாஸன்,
பெரியவாளால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டு,
ஸத்யத்தை உணர்ந்த பின்,
எழுதிய ஒரு முன்னுரை……
” இளம் பிராயத்தினரிடையே கட்டுப்பாட்டையும்,
ஒழுக்கத்தையும் வளர்த்து,
மரணகாலம் வரை அவர்களை உயர்ந்தவர்களாக வாழச் செய்ய,
நம்முடைய மூதாதையர்கள்
எடுத்துக் கொண்ட முயற்சி,
கொஞ்ச நஞ்சமல்ல.
அக்காலத்தில் குருபக்தியினாலும்,
குருகுல வாஸத்தினாலும்,
அறம் நிறைந்த அந்தணர்களாக,
மானிட ஜாதியின் எல்லாப் பிரிவினரும் திகழ்ந்தார்கள்.
பஞ்சமா பாதகங்கள் மிகவும் குறைவாகவே இருந்தன.
சூழ்நிலை,
நிர்பந்தங்களால்,
ஒருவன் தவறு செய்தாலும்,
அந்தத் தவறுக்காக,
வருந்தும் ஸ்வபாவமுடையவனாக இருந்தான்.
குருவையே கல்லாலடிக்கும் குணக்கேடோ,
இளம் பருவத்திலேயே
சோம்பேறித்தனமோ,
அவனிடம் இல்லை.
நிரந்தரமான மேன்மைக்கு ஒரு அஸ்திவாரத்தை,
குருபக்தியும்,
குருகுலவாஸமும் அவனுக்கு அமைத்துத் தந்தன.
அந்தநாளைய ஸமுதாயம்,
ஒரு இளைஞனை ஐந்து வயதிலேயே நன்றாக வளைத்து வைத்தது.
அதனால்,
ஐம்பதிலும் அவன் வளைந்தான்.
ஆடுமாடுகளைக் கூட,
இளம் பிராயத்திலேயே
பழக்கத் தொடங்கினால்,
அற்புதமாக பழக்கிவிட முடியும்.
இந்த குருகுலவாஸம் பற்றி,
“அர்த்தமுள்ள இந்துமதம்” 9ஆம் பாகம்,
ஞானத்தைத் தேடி’ என்ற நூலில் நான் ஓரளவு குறிப்பிட்டிருக்கிறேன்.
ஆனால், காஞ்சி பெரியவர்கள் அளவுக்கு,
அதை நான் விவரித்து
விட முடியாது!
நானும் மூன்று ஆண்டுகளுக்கு மேல்,
குருகுலவாஸம் செய்து முன்னேறியவன்தான் என்றாலும்,
அதைவிடக் கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர்.
திட்டவட்டமாக அவர் தெரிவிக்கும் சில கருத்துகள்,
இன்றைய இளைஞனுக்கு உதவ வேண்டும்.
பள்ளிப்படிப்போ,
கல்லூரிப் படிப்போ,
வெறும் யந்திர சுழற்சியாகாது.
வீடு கட்டும்போது தோண்டப்படுகிற வாணம் போலவும்,
கட்டப்படுகிற அடிப்படை போலவும் அது அமைய வேண்டும்.
லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும்,
ஒரு பெரிய ஸம்ஸாரியைவிடத்,
தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார் காஞ்சிப் பெரியவர்.
ஸம்ஸாரியின் அனுபவ ஆற்றலைவிட,
ஞானியின் சிந்தனை ஆற்றல் எவ்வளவு ஶக்தி வாய்ந்தது என்பதற்கு அவரது உரைகள்
உதாரணங்கள்.
இன்றைய இளைஞனோ, பெரியவர்களோ அறியாத,
பல்வேறு விஷயங்களை,
அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
காஞ்சி பெரியவர் அவர்களின் வாக்கு,
லட்சோப லட்சம் மக்களிடையே பரவ வேண்டும்.
அன்பன்
கண்ணதாஸன்
பெரியவாளைப் பற்றி, கவிஞர் கண்ணதாஸனின் மற்றொரு அழகான காவியம்…. நாளை மறுநாள் பதிவாக.

Comments
Post a Comment