துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

 பகுதி 85.


துஷ்ட சக்திகள் விலக


Deliverance from the hold of evil spirits



லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஒப்புநோக்கதக்க சௌந்தயலஹரி ஸ்லோகம் மற்றும் அபிராமி அந்தாதி பாடல்.


#லலிதாசஹஸ்ரநாமம்#


ஸிஞ்ஜாநமணி மஞ்ஜீரமண்டிதா ஶ்ரீபாதாம்புஜா 


அழகிய ஒளிரும்  இரத்தினங்களால் ஆன சிலம்புகளை அணிந்த கால்களை உடையவள்.


ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா


தாமரைப் போன்ற மென்மையான கால்களை உடையவள்.


தாமரைக்கும் அம்பிகையின் திருவடிக்கும் என்ன ஒப்புமை எனில், தாமரை மென்மையானது. அம்பிகையின் திருவடியும் மென்மையானது. 


தாமரை வாசம் மிகுந்தது. அம்பிகையின் திருவடியும் வாசம் மிகுந்தது. 


தாமரை குளத்தில் பூக்கக் கூடியது. அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற குளத்தில் பூக்கக் கூடியது.


ஸ்வாதீநவல்லபா


ஸ்வதீனா வல்லபா = 


அவர் தனது அன்பான சிவனை சாராதவர், 


அதாவது (அவரது சுதந்திர விருப்பத்தில் இருப்பவர்) *


ஸ்வாதீனா =


 சுய-நிலை /சுயாதீனமான / இலவச விருப்பமுள்ள


வல்லபா = 


காதலன் அல்லது 


கணவர் - பிரியமானவர்


 அங்க என்றால் உடல். சில அறிஞர்கள் அங்காவை மடி என்று குறிப்பிட்டு 


"சிவனின் மடியில் அமர்ந்திருக்கும் லலிதாம்பிகா" என்று வணங்குகிறார்கள். 


அங்காவை உடலாகக் கருதினால், சிவன் அர்த்த-நரி என்பதாலும்,


அம்பிகா அவனில் ஒரு பகுதியை அர்த்தங்கினி என்றும் கூறுவதால் அவள் "சிவ காமேஸ்வர-அங்கஸ்தா" எனவே, 'அவள் சிவனின் ஒரு பகுதி'.


#சௌந்தயலஹரி#


"நமோவாகம் ப்ரூமோ நயனரமணீயாய பதயோஹோ

தவஸ்மை த்வந்த்வாய ஸ்பூதருச்சிரசாலக்தகவதே!

அஸூயத்யத்யந்தம் யதாபிஹனனாய ஸ்ப்ருஹயதே

பஷூநமீஷாநஹ ப்ரமதாவனகங்கேளிதரவே!"


தாயே


எந்த பாதங்களால் உதைக்கபடுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைபடுகிறதோ,அதை கண்டு அப்பாதங்களில் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும்,கண்களுக்கு இனிமையும்,செம்மையான குழம்பால் அலங்கரிக்கபட்டத்துமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரத்தை கூறுகிறேன்.


#அபிராமி அந்தாதி#


ஆனந்தமாய் என் அறிவாய் நிற்பவள் நீ (பாடல் 11)

ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்

தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்

கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே


ஆனந்தமாய் - எனக்கு இயற்கையாய் அமைந்த இன்பமாய்


என் அறிவாய் - உன் அருளால் எனக்குக் கிடைத்த நல்லறிவாய்


நிறைந்த அமுதமுமாய் - அந்த இன்பத்திற்கும் நல்லறிவுக்கும் காரணமாய் என்னுள் நிறைந்த அமுதமுமாய்


வான் அந்தமான வடிவுடையாள் - மண், நீர், நெருப்பு, காற்று, வான் என்று வானைக் கடைசியாய்க் கொண்டுள்ள ஐம்பூதங்களின் வடிவானவளே.


மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் - வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்


தவள நிறக் கானம் - சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட காட்டைத்


தம் ஆடரங்காம் - தன் திருநடனத்திற்கு அரங்கமாய்க் கொண்ட


எம்பிரான் முடிக் கண்ணியதே - என் தலைவனாம் ஈசன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.


அபிராமி அன்னையே! 


நீயே என் ஆனந்தமாய் என் அறிவாய் விளங்கி என்னுள் நிறைந்த அமுதமுமாய் விளங்குபவள்.


மண், 

நீர், 

நெருப்பு, 

காற்று, 

வான் என்னும் ஐம்பூதங்களின் வடிவானவள். 


வேதம் நான்கினுக்கும் முடிவாய் விளங்குவது உன் தாமரைத் தாள்கள்.


அவை சாம்பல் நிரம்பி அதனால் வெண்மை நிறம் கொண்ட சுடுகாட்டைத் தன் திருநடனத்திற்கு உரிய அரங்கமாய்க் கொண்ட என் தலைவனாம் ஈசன் தன் முடிமேல் அணியும் மாலைகளாகும்.

Comments

Popular posts from this blog

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).