Posts

Showing posts from March, 2025

அபிராமிஅந்தாதிபாடல்2#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்2# துணையும்  தொழும் தெய்வமும் பெற்றதாயும்  சுருதிகளின் பணையும் கொழுந்தும்  பதிகொண்டவேரும்  பனிமலர்ப்பூங்கணையும்  கருப்புச் சிலையும் மென்பாசாங் குசமும் கையில் அணையும்  திரிபுர சுந்தரி ஆவதறிந்தனமே. தனது உயிருக்கு ஆபத்து என்ற போதிலும் அவருடைய சிந்தனை அம்பாளின் மீது இருந்த அசைக்கமுடியாத பற்றால் வந்து விழுந்த வார்த்தைகள் இவை. அதன் பொருள். அபிராமி அன்னையே எனது துணை,  பின் வரும் பாடலில் (விழிக்கு துணை - அபிராமிவல்லி) நான் தொழும் தெய்வம்,  என்னை பெற்ற தாயும் அவளே. (அவளே லோகமாதா என்கிறார்) அவளே வேதம்,  (அவளே வேதமாதவான காயத்ரி) அதன் கிளை, வேர் அனைத்தும்.  (உபநிடதங்கள் மற்றும் காவியங்கள் அனைத்தும் அவளே என்கிறார்). தன் நான்கு கரங்களில்,  மலர்களால் ஆன அம்பு,  கரும்பினால் ஆன வில், மென்மையான பாசம் (கயிறு)  [இதிலும் மென்மை.  அன்னையின் கருணை.  சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.] அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி  என்ற அன்னை அபிராமியை அறிந்து கொண்டே...

பகுதி 2 அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?

Image
பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல் அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :  தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி-2. இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது. #பரமேசுவராவதாரமானஆசார்யாள்# சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார். ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார். அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார். அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது. நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத் “பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது. அப்படிப்பட்டவ...

அபிராமிஅந்தாதிபாடல்1

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்1# உதிக்கின்ற செங்கதிர்  உச்சித் திலகம்  உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்  மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி  மென்கடிக்குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. இங்கு தான் யாரை பாடபோகிறேன் அவள் எப்படிப்பட்டவள் என்பதை விளக்குகிறார். மேலும் அம்பாளுடைய -அபிராம வல்லியின் விழிகளே அருளைக் காட்டும் அது தனக்கு வழிகாட்டும் என்கிறார்.  உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும்,  உச்சி திலகத்தை யார் வைத்து இருப்பார் திருமணம் முடித்து சீமந்த முடித்த பெண்கள். சீமந்தசுந்தரி என்கிறார். முதல் பாடலில் உமை மைந்தன் கணபதியே என்று கூறிக்கிறார்.  இங்கு கணபதியே அவளின் சீமந்த புத்திரன்.  ஆதலால் அவள் உச்சி திலகம் இட்டுள்ளால் என்பதை மறைமுகமாக கூறுகிறார். ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும்,  மாணிக்க கல்லை பற்றி நன்கு அறிந்தவர்கள் அதன் மதிப்பு தெரியும். அதனால் அவர் ஞானம் உடையவர்கள் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார். மாதுள மலரும், அம்பாளின் நிறத்தை மாதுள பழத்திற்கு ஒப்பிடுகிற...

அபிராமிஅந்தாதி காப்பு

Image
 #அபிராமிஅந்தாதி# விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வேண்டி விநாயகர்காப்பு என்று காப்பு பாடலை ஆரம்பிக்கிறார். காப்பு தாரமர் கொன்றையும்  சண்பக மாலையும்  சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத் துமை மைந்தனே உல கேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக்  கணபதியே நிற்கக் கட்டுரையே. (உரை)  எச்செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுள் கணபதியை வணங்கி துவங்குவது மரபு.  இவ்விடத்தும் அபிராமிப் பட்டர்  "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம் அந்தாதியைத் துவங்குகின்றார். மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்து அருளுகின்றதில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும்  திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே,  ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது  எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலை பெறும்படி திருவாய்  மொழிந் தருளுவாயாக.  தார்-மார்பின் மாலை.  க...

சித்தபுருஷர்கள்

Image
 நேற்றைய பதிவில் சித்த புருஷர்களுக்கு அது எவ்வாறு சித்தியாகும் என பதிவிட்டு இருந்தேன். அது எவ்வாறு சித்தியானது. காரணம் அவர்கள் சித்தியில்  அதாவது அவர்களுக்குள் எதை சூக்ஷ்மத்தை காண்கிறார்களோ அதை ஸ்துலத்தில் கொண்டு வர இயலும். அவர்கள் ஏதும் கண்கட்டி வித்தை செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு அஷட்மா சித்தியும் கை கூடும். அவ்வாறே அபிராமி பட்டர் தனது சூக்ஷ்ம உடலில் திதி நித்யா தேவிகளில் பௌர்ணமி திதி தேவதைக்கு மனதார பூஜைச் செய்த போது.  அவர்கள் (1) பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா (2) துவதியை –பகமாலினி நித்யா (3) திரிதியை – நித்யக்லின்னை நித்யா (4) சதுர்த்தி – பேருண்டா நித்யா (5) பஞ்சமி – வந்நிவாசினி நித்யா (6) ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா (7) ஸப்தமி – சிவதூதி நித்யா (8) அஷ்டமி – த்வரிதா நித்யா (9) நவமி – குலசுந்தரி நித்யா (10) தசமி – நித்ய நித்யா (11) ஏகாதசி – நீலபதாகா நித்யா (12) துவாதசி – விஜயா நித்யா (13) திரயோதசி – ஸர்வமங்களா நித்யா (14) சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா (15) பௌர்ணமி – சித்ராதேவி நித்யா சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என கேட்டவுடன். தன் உள்ளே கண்ட அம்பாளின் பூர்ண முகத...

அபிராமி அந்தாதி காப்பு

Image
வரும் நாட்களில் அம்பாளை வர்ணிக்கும் மற்றும் ஒரு தமிழ் பாஷ்யமான அபிராமி அந்தாதி பற்றிய பதிவுகளைக் காணலாம். இதற்கு முன் ஆச்சாரியர் பகவத்பாதாள் சௌந்தயலஹரி சமஸ்கிருத பாஷ்யதை  தனது ஆனந்த மயமான நிலையில் அம்பாளின் அழகை ரசித்து ரசித்து வர்ணித்திருப்பார். ஆனால் இந்த காவியத்தை படைக்கும் போது தனக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் அருமையான பாடலை அம்பாளின் கிருபையால் அந்தாதி முறையில் பாடினார். அந்தாதி என்பது முடியில் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும். எவ்வளவோ அந்தாதி இருந்தாலும் இந்த அந்தாதி சிறப்பு பெருவதற்கு அன்னையின் அருளே காரணம். இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று அம்பாளை பாடுபவர்கள் அனைவரும்  அப்பனை பாடமல் இருப்பதில்லை. அதே மாதிரி அப்பனை பாடிய திருமூலர் அம்மனை பாடமல் இருக்க மாட்டார்கள். சைவ சாக்தத்திற்கும் ரொம்ப வேறுபாடுகள் இல்லை. காரணம் அன்பே சிவம்.  அந்த அன்பிற்கு பாத்திரம் ஆனவள் தாய். எனவே அன்பே சிவம் என்பது தாயையும் தந்தையும் குறிக்கும். அவர்கள் இரண்டும் இணைந்த இணைவே பூரம். பூரம் என்பது பூஜ்ஜியம்.  பூஜ்ஜியம் என்பதே இரண்டின் இணைவே. இதை தான் ஔவையார். ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்...

ஶ்ரீசக்ரம் மஹாமேரு

Image
 இது நாள்வரை அம்பாள் பற்றிய பதிவுகள் உச்சி முதல் பாதம் பகவத் பாதாள் வர்ணணையை சௌந்தயலஹரி ஸ்லோகம் முலமாக. அம்பாளுக்கு மிகவம் பிடித்து வாசம் செய்யுமிடம் இதன் ஶ்ரீசக்ரம் அல்லது மஹாமேரு. காரணம் அம்பாளை பார்த்தால் சுவாமியும் ,சுவாமியைப் பார்த்தால் அம்பாளும் மிகவும் சந்தோஷப் படுவர். அவ்வாறு இவ்வாறு ஒருசேர இருக்கும் இடம் தான். ஶ்ரீசக்கரத்தின் பிந்து ஸ்தானம். அதன் பெருமையை இன்று பதிவாக காணலாம். 🏵️🏵️ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள்  பற்றிய தகவல்கள்🏵️🏵️. எந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீசக்கரம் என்பது ஆன்றோர் வாக்கு. ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்,  மனித குலத்துக்கு சங்கரரின் அருள்கொடை.  காஞ்சி காமாட்சியம்மன் கோயில், திருவானைக்காவல்,திருவொற்றியூர் போன்ற எண்ணற்ற தலங்களில் இந்த ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமே ஸ்ரீசக்கரம்.  உலகை ரட்சிக்கும் நாயகியான ராஜராஜேஸ்வரி மகாமேருவில் உறைபவள்.  மகாமேருவின் உருவையே ஸ்ரீசக்கரத்தில் பொறிக்கிறார்கள். மகாசக்தியை மந்திரம், எந்திரம், தந்திரத்தால் வழிபடு...

ஆசார்யாள் பண்ணுகிற அம்பாளின் அவயவ வர்ணனை

Image
இந்த லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஏன் இவ்வளவு பெருமை, அதை ஆசார்யாள் பண்ணுகிற அம்பாளின் அவயவ வர்ணனையில் ஸஹஸ்ர நாமத்தையே நன்கு  பல இடங்களில் பேசுகிறார். #அம்பாளுடையநெற்றி# திருப்பிவைத்தா அர்த்தசந்திரன் மாதிரி இருக்கிறது (ச்லோ. 46) என்னும்போது #அஷ்டமீ-சந்த்ர-விப்ராஜ-தலிக-ஸ்தல சோபிதா# என்ற ஸஹஸ்ரநாம அபிப்ராயத்தைத்தான் மெருகேற்றியிருக்கிறார்.  #அம்பாளுடையகண்# அம்பாள் கண்களைத் திறந்தாள் ஸ்ருஷ்டி, மூடினால் பிரளயம்  (ச்லோ. 55) என்கிறபோது  #உந்மேஷ-நிமிஷோத் பந்ந- விபந்ந- புவநாவளீ# என்ற நாமா நினைவு வருகிறது.  #அம்பாளுடையஉதட்டு# பவளக் கொடியும் (வித்ருமலதாகவும்) ஒப்பாகாது என்று  இதில் [ச்லோ. 62] வந்தால்,  அதில் [ஸஹஸ்ரநாமத்தில்]  அதே அர்த்தத்தில்  #நவவித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதநச்சதா# என்று இருக்கிறது! #அம்பாளுடையபேச்சு#  “ஸரஸ்வதியின் வீணாகானத்தையும் விஞ்சுகிற சாதுர்யம் அம்பாளுடைய பேச்சுக்கே இருக்கிறது:  #நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்பர்த்ஸித-கச்சபீ# என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிற ‘ஐடியா’வையே விபஞ்ச்யாகாயந்தீயில்  [ச்லோ-66]  ஒரு முழு ச்லோகமாக ஆச...

எனது எண்ணம் செயல் அனைத்திலும் அம்பாள்

Image
 #ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ# எனது எண்ணம் செயல் அனைத்திலும் நீக்கமற நிறைந்தவள் அம்பாள் அதனால் இது சாத்தியமானது. இது நாள் வரை அம்பாளின் கிருபையினால் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு தமிழ் அர்த்தம் எழுத்தும் பாக்கியத்தை அருளினாள். அது கிட்டதட்ட ஒன்றரை வருட பதிவாக முகநூலில் பதிவிட்டு வந்தேன். இது முடிந்த கையுடன் , எல்லாவற்றிற்க்கும் மூலமான விளங்கும் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு சமஸ்கிருத பாஷ்யமான சௌந்தயலஹரி ஸ்லோகத்திற்கு தமிழ் அர்த்த்ததை எழுத வைத்தாள் அம்பாள். கிட்டதட்ட 99ஸ்லோகம் முடிந்த தருவாயில் உள்ளது. 100வது ஸ்லோகத்திற்கான அர்த்தம் ஞாயிறு அல்லது செவ்வாய் அன்று அம்பாளின் கிருபையினால் நன்கு நடைப்பெறும் என எண்ணுகிறேன். அம்பாளுக்கு பல சொரூபங்கள் அந்தந்த சொரூபங்களுக்கு ஏற்ப வர்ணங்கள். இளம்சிவப்பு நிறம் லலிதாம்பிகை/இராஜராஜேஸ்வரி/ஶ்ரீதிரிபுரசுந்தரி/காமாக்ஷி. பச்சை நிறம் கடம்பவன வாசினி மீனாக்ஷி/ஷ்யாமளா கருப்பு நிறம் பார்வதி/காளி ஆனால் இங்கு பட்டர் இளம்சிவப்பு நிறத்தை வர்ணிக்கிறார் பட்டரின் அபிராமி அந்தாதிக்கும் பகவத்பாதாள் சௌந்தயலஹரிக்கும் ஒரு சிறு ஒப்பிடு சிந்தூர வண்ணத்தினாள் அவள் சிவந்த நிறத்தினாள் என்கிறார் ...

பேரின்பம் Bliss

Image
 பகுதி 99. பேரின்பம் Bliss Getting valor,happiness and God's grace  உச்சகட்ட பேரின்பத்தை அடைதல். #லலிதாசஹஸ்ரநாமம்# #பரோமோதா# பரமேஸ்வரனின் சக்திக்குரிய ஒரு திருநாமம். இவள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மனதை உடையவள் என்று பொருள்படும். இது இவள் எல்லாவற்றையும் மீறிய நன்மைகளைத் தந்திடும் என்று பொருள்படும். #பசுபாஸ்விமோசிநீ# பசு என்றால் ஆன்மா பாஸ் குடும்ப சூழலில் சுழலும் இந்த ஆவி. ஆவியாகிய ஆன்மாவை இந்த குடும்ப சகஹாரத்திலிருந்து முக்தியாகிய பேரின்பத்தைக் கொடுப்பவள். #சௌந்தயலஹரி# பெரிய தேவி பிரமேஸ்வரி ஸ்ரீதேவி லலிதா மஹாத்ரிபுர சுந்தரி (மன அமுத்ததை அனுபவிக்கும் அடியார்). ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்னோ விஹரதே ரதேஹ் பதிவ்ரித்யம் ஷிதிலயாதி ரம்யேண வபுஷா | சிரம் ஜீவன்னேவ க்ஷபதி பஷு பாஷ வ்யாதிகர பரானந்தபிக்யம் ரஸயதி ரசம் த்வத்பஜனவான் || அம்மா!. உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும் விஷ்ணுவும் கூட பொறாமை படக் கூடிய அளவில் கல்வியிலும் செல்வத்தியிலும் இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதிதேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதன்...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

Image
 ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அருமையான தமிழாக்கம் =================== ஸிந்தூர மேனியளே  முக்கன்னியே சந்திரன் ஒளி வீசும் மாணிக்கக் கிரீடமும் அணிந்தவளே எழில் நகை முகத்தவளே  அழகிய மார்பினளே ரத்தினக் கலசமும் செங்குவகை மலர் கரங்களும் அழகிய திருவடி தாமரை அம்பிகையை தியானிக்கின்றேன். அன்னையே பொன்னிற மேனியில் கடலெனக் கருணை மழை கண்களில் பாசம் அங்குசம் புஷ்பபாணம் கரும்புவில் கரங்களில் அணிமாதி சக்திகள் ஆள்பவளை பரதேவதையை பவானியை அஹு எனும் தத்துவமாய் பாவிக்கிறேன் தாமரையில் அமர்ந்தவளை  மலர்ந்த திருமுகத்தாளை குமுதக் கண்ணாளை பொன்னாளியாளை பட்டாடை தரித்தவளை பொற்றாமரையைக் கையில் பெற்றாளை ஸர்வாலங்கார பூஷணியை ஆதரிப்பவளை பக்தரைக் காப்பவளை  பவானியை ஸ்ரீ வித்யா ரூபிணியை  சாந்த மூர்த்தியை தேவர்கள் துதிப்பவளை  ஸகல சம்பத்தும் அருள்பவளை எப்பாதும் தியானிக்கின்றேன் குங்கும நிறத்தாளை  வண்டுகள் வட்டமிடும் கஸ்தூரி அணிந்தவளை புன்னகை வதனமும் அம்பு வில் பாசாங்குசம் கரத்தில் உடையவளை. பக்தரை வசீகரிப்பவகை  செந்நிற ஆபரணமும் மேனியும் கொண்டாளை  செம்பருத்தி நிறத்தாளை பூஜை வேளையில் எப்போது...

நாராயணியில் நாராயணன் அடக்கம்.

Image
 நாராயணியில் நாராயணன் அடக்கம். அவளே  சோட்டாணிகரை பகவதி என்பவள் நாராயணன் நாராயணணி சொரூபம். அங்கு அம்பாளுக்கு மூன்று வித அலங்காரம். காலையில் சரஸ்வதி மதியம் லெக்ஷ்மி இரவில் பகவதி இதன் தாத்பர்யம் இவை அனைத்தும் நானே என்பதே அதேபோல அவளே விஷ்ணு துர்கா விஷ்ணு மாயா. ஆதனால் இந்த திருநாமம். கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை. இது எதை குறிக்கிறது. ஜீவனும் ஈஸ்வரனும் சேர்ந்த வடிவம் நாராயணன்,  தசக்ருத என்பது மனிதனது ஐந்து நிலைகளான  விழிப்பு, உறக்கம்,  கனவு,  துரியம்  (முதல் மூன்று நிலைகளிலும் உணர்வுடன் இருத்தல்)  தூரியாதிதம் (துரியத்திற்கு மேற்பட்ட நிலை,  இந்த நிலையில் இருமை அற்று உணர்வு பிரம்மத்துடன் கலக்கத் தொடங்கும்). பிரம்மத்தின் ஐந்து தொழிகளன ஆக்கல்,  காத்தல்,  அழித்தல்,  அருளல், மறைத்தல்  ஆகியன சேர்ந்து #தஸக்ருத# எனும் பத்தும் உருவாகின்றன.  இங்கு நாராயண என்பது  மஹாவிஷ்ணுவைக் குறிக்கவில்லை என்றே கருத வேண்டும்.  விஷ்ணு லலிதையின் சகோதரர், ஆகவே வாக்தேவிகள் இங்கு குறிப்பிடப்படும் , நாராயணன் வேறு விடயத்தினை குறிப்பதாக அ...

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).

Image
 பெண் குழந்தைகளுக்கு அம்பாளின் திருநாமங்கள் சூட்டினால் எவ்வளவு அழகாக இருக்கும். லலிதா சகஸ்ர நாம பெயர்கள்  (பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு). ஸ்ரீமாதா - சிறப்பு மிக்க அன்னை ஸ்ரீமகாராஜ்ஞீ - சிறப்பு மிக்க பேரரசி சிம்ஹாசனஸே்வரி - சிம்மாசனத்தில் அமர்ந்து ஆள்பவள் பானு சகஸ்ராபா - சூரியனுக்கு இணையானவள் லாவண்யா- பேரழகி அருணா - சிவந்தவள் பூஷிதா - ஆபரணம் சூடியவள் சிவா - சிவமாக இருப்பவள் காமாக்ஷீ - அழகான கண்கள் உடையவள் காமதாயிநீ - விரும்பியதை வழங்குபவள் ஹர்ஷிதா - மகிழ்ச்சி கொண்டவள் நந்திதா - மகிழ்ச்சி கொண்டவள் வர்ஷிணீ - பொழிபவள்(அருள்) வைபவா- பெருமை மிக்கவள் பங்கஜா - தாமரை முகம் கொண்டவள் தாரிணீ - தாங்குபவள் ஆத்மிகா - தானாகி நிற்பவள் மந்த்ர ஆத்மிகா - மந்த்ரமே தானாகி நிற்பவள் ரஸிகா - ரசனை மிக்கவள் ஸங்கேத பாலிநீ - ரகசியம் காப்பவள் குலஅங்கநா - குலமகள் கெளலினீ - சிவனும் சக்தியும் சேர்ந்த வடிவினள் லதா - கொடி போன்றவள் ஸமருசி - ஒளியுள்ளவள் ஸம்ஸ்திதா - மேலானவள் மஹ ஆஸக்தி - திருவிழாவில் ஈடுபாடுள்ளவள் குண்டலினி - குண்டலம் போன்ற வடிவமுள்ளவள் பவானி - பவனது பத்தினி பாவனா கம்யா - பாவனை...