அபிராமிஅந்தாதிபாடல்1
#அபிராமிஅந்தாதிபாடல்1#
உதிக்கின்ற செங்கதிர்
உச்சித் திலகம்
உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம்
மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி
மென்கடிக்குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி
என்றன் விழுத்துணையே.
இங்கு தான் யாரை பாடபோகிறேன் அவள் எப்படிப்பட்டவள் என்பதை விளக்குகிறார்.
மேலும் அம்பாளுடைய -அபிராம வல்லியின் விழிகளே அருளைக் காட்டும் அது தனக்கு வழிகாட்டும் என்கிறார்.
உதயமாகின்ற செங்கதிரவனும்.
மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும்,
உச்சி திலகத்தை யார் வைத்து இருப்பார் திருமணம் முடித்து சீமந்த முடித்த பெண்கள்.
சீமந்தசுந்தரி என்கிறார்.
முதல் பாடலில் உமை மைந்தன் கணபதியே என்று கூறிக்கிறார்.
இங்கு கணபதியே அவளின் சீமந்த புத்திரன்.
ஆதலால் அவள் உச்சி திலகம் இட்டுள்ளால் என்பதை மறைமுகமாக கூறுகிறார்.
ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும்,
மாணிக்க கல்லை பற்றி நன்கு அறிந்தவர்கள் அதன் மதிப்பு தெரியும்.
அதனால் அவர் ஞானம் உடையவர்கள் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறார்.
மாதுள மலரும்,
அம்பாளின் நிறத்தை மாதுள பழத்திற்கு ஒப்பிடுகிறார்.
அம்பாள் லலிதாம்பா
அம்பாள் காமாக்ஷி
அம்பாள் இராஜராஜேஸ்வரி
அம்பாள் திரிபுரசுந்தரி
இவர்கள் சிவந்த நிறத்தை உடையவர்கள்.
தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும்,
அம்பாளின் பாதத்தை திருவடி தாமரை என்றும் அவளே செல்வத்தின் அதிபதி லெக்ஷ்மி என்கிறார் பட்டர்.
மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்ற தென்று நூல்கள் கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.
இங்கு அம்பாளின் நிறத்தை குங்குமக் குழம்பாக ஒப்பிடுகிறார்.
உதிக்கின்ற செங்கதிர்-
பால சூரியன்;
கண்கொள்ளும் வடிவினதாதலின் இதனை உவமை கூறினர்;
'உத்யத்பானு ஸஹஸ்ராபா' (6) என்பது அம்பிகைக்குரிய ஆயிரந் திருநாமங்களுள் ஒன்று.
"வந்துதித்த வெயிலாயிருக்கும் விசும்பில்” (99) என்பர் பின்.
உச்சித் திலகம்
"சிந்துர வண்ணப் பெண்ணே" (6), “சிந்துர வண்ணத்தினாள்" (8)
, 'சிந்துர மேனியள்" (43) என்று பின்னும் கூறுதல் காண்க. திலகம்-மஞ்சாடி என்றும் கூறலாம்.
உணர்வு-மணி நூல் ஆய்ந்த அறிவு மெய்ஞ்ஞான மெனலும் ஆம். மாணிக்கம்:
“மணியே மணியின் ஒளியே” (24); "மாணிக்கவல்லி"
(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.1.) மாதுளம் போது: "மாதுளம்
பூநிறத்தாளை" (பயன்);
“தாடிமீ குஸுமப்ரபா" (லலிதா ஸஹஸ்ரநாமம், 560).
மின்கொடி: "மின்னா யிரமொரு மெய்வடிவாக விளங்குகின்ற அன்னாள்” (55);
"மின்போலு நின்றோற்றம்" (61),
விழுத்துணை- விழுப்பமாகிய துணை;
எல்லா விடத்தும் எக்காலத்தும் துணையாக இருத்தலின் விழுத்துணை என்றார்.
#ஓம்அபிராமிதாயே#

Comments
Post a Comment