ஆசார்யாள் காட்டும் அம்பாள் : பகுதி 2
ஆச்சாரியர் பகவத்பாதாள் பார்வையில் அம்பாள். ஆசார்யாள் காட்டும் அம்பாள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி 2 தமக்கும்கூட அவளது அநுக்கிரஹம் வேணும் என்று சொல்வதிலிருந்தே, நியாயப்படி பார்த்தால் நமக்கு அதைப் பெற தகுதி இல்லை என்று நினைப்பது ஸ்பஷ்டமாகத் தெரிகிறது. எந்த யோக்கியதையும் இல்லாமலே உன் அருளைக் கேட்கிறேனம்மா’ என்று சொல்லாமல் சொல்கிறார். ஞானத்திலாகட்டும், பக்தியிலாகட்டும், புத்தியிலாகட்டும், வாக்கு வன்மையிலாகட்டும், காரிய சக்தியிலாகட்டும், கருணையிலாகட்டும், நம் ஆச்சாரியாளைப் போல பூரண யோக்கியதை உள்ளவர்கள் அவருக்கு முந்தியும் இல்லை, பிந்தியும் இல்லை. அப்படியிருந்தாலும் நமக்கெல்லாம் வழிகாட்டியாக, நாம் அடக்கத்துடன் எப்படி அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும் என்று, நமக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி மாமபி, மமாபி (என்னையும்கூட கடாக்ஷி! எனக்கும்கூட திருவடியைத் தா என்கிறார்). யோக்கியதை இல்லாமல் கேட்கலாமா என்றால் நியாயப்படி அது சரியில்லைதான். ஆனால், நிறைய அநியாயங்களைப் பார்க்காமல், நல்லதையே செய்துகொண்டிருக்கிற அன்பு மயமான வஸ்துக்களும்...