அனைத்தும்அம்மையும்அப்பனுமே#
#அனைத்தும்அம்மையும்அப்பனுமே#.
இங்கு உலகு என்பது அம்மையும் அப்பனையும் குறிக்கும்.
காரணம் உடல் அப்பன் ஆனால் உயிர் அம்மையாவள்.
இவர்கள் இருவரும் இணைந்த இணைவே இந்த உலகு.
அம்மை அப்பனுடன் இணைந்து இருந்தால் தான் இந்த உலக இயக்கம் நடக்கும்.
அம்பாள் தாக்க்ஷாயணியாக அவரித்த போது தக்க்ஷன் செய்த யாகத்தில் சிவப்பெருமானுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுக்காதாதல்.
அந்த யாக குண்டத்தில் தனது உயிரை மாயித்துக்கொள்கிறாள்.
இதை அறிந்த சிவப்பெருமான் எரித்த அம்பாளின் உடலை சுமந்து பைத்தியம் பிடித்தார் போல் உலகை சுற்றி வருகிறார்.
இதனால் உலக ஸ்தம்பித்து விடுகிறது.
இதை அறிந்த மஹாவிஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் அம்பாளின் 51 உடல் பாகங்கள் துண்டிக்கபாபட்டு அவை 51இடங்களில் விழுந்தது.
அதுவே தற்போது 51சக்தி பீடம் என அழைக்கபடுகிறது.
இதன் பிறகு சிவபெருமான் மலைக்குயில் தவத்தில் அமர்கிறார்.
சிவப்பெருமான் ஹிமவான் மகள் பார்வதியை மணப்பதற்காக.
காமன் மூலம் தவத்தை கலைக்கிறார்கள் தேவர்கள்.
சிவனின் மூக்கண்ணால் எரிந்த சாம்பலாகிறான் மன்மதன்.
பிறகு சிவன் மற்றும் பார்வதி திருமணம் நன்கு நடக்கிறது.
அம்பாளின் பக்தன் ஆன மன்மதனை ரதி தேவிக்கு கண்ணுக்கு மட்டும் தெரிகிற மாதிரி சாப விமோசனம் தருகிறாள் அம்பாள்.
அவனது அம்பாள் தனது கையில் வில் மற்றும் மலர் அம்பகளாக தாங்கி இருக்கிறாள்.
அதனால் அவன் அனங்கன் ஆகிறான்.
இவ்வாறாக இணைந்த இணைவே இந்த உலகு ஆனதால்.
அப்பன் அம்பாளுக்கு தனது இடது பாகத்தை கொடுத்து அவன் உமையொருபாகன் ஆகிறான்.
அவனே அர்த்தநாரீஸ்வரர் ஆவார்.
இவ்வாறாக இருவரும் இணைந்த இணைவை.
சிவபக்தனான திருமூலர் அப்பனை பாடும்போது அம்மையை சேர்த்து பாடுகிறார்.
அம்மையை பாடிய பட்டர் அப்பனையும் சேர்ந்து தான் பாடினார்.
காரணம் அவர்கள் அறிவார்கள் சிவன் இல்லையேல் சக்தி இல்லை.
சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பதை அறிவார்கள்.
இந்த உயரிய தத்துவத்தை நாம் உணர்ந்தால் நமக்குள் நீ பெரியவனா இல்லை நான் பெரியவளா என்கிற ஆணவம் தலைக்கு ஏறாது.
அதை உணர்ந்தவே ஆணும் பெண்ணும் சமம் என்ற அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்.
#ஓம்அர்த்தநாதீஸ்வராயநமஹ#

Comments
Post a Comment