Posts

Showing posts from September, 2025

அபிராமிஅந்தாதிபாடல்-51

Image
 #அபிராமிஅந்தாதிபாடல்-51 அரணம் பொருள்  என்று அருள் ஒன்றும்  இலாத அசுரர் தங்கள் முரண் அன்று  அழிய முனிந்த  பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம்  என நின்ற நாயகி  தன் அடியார் மரணம் பிறவி  இரண்டும் எய்தார்  இந்த வையகத்தே பொருள் அருள் ஒன்று இல்லாத அசுரர் - க்ரோதமே உருவான,  அன்பு என்பது தங்களிடத்தே ஓரு சிறிதளவும் இல்லாத அரக்கர்கள், தங்களின் திரிபுரமே என்றும் நிலையானது என்று இருந்துவந்தனர்.  அந்த திரிபுரத்தை தனது அம்புகளால் எரித்து அழித்த சிவபெருமானும், முகுந்தனான விஷ்ணுவும்,  தொழும் அன்னையே,   உன் பாதமே துணை என்று எந்நாளும் தொழும் உன் அடியார்களின் பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அறுத்து, அவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறாவத வரத்தை தந்தருள்வாய். பாபநாசம் சிவன் என்னும் மகான், தனது லதாங்கி ராக பாடலில், பிறவா வரம் தாரும் பெம்மானே பிறவா வரம் தாரும் - பிறந்தாலும்  நின் திருவடி மறவா வரம் தாரும் - மாநிலமீதில் பிறவா வரம் தாரும். என்று உருகி பாடியிருப்பார். அப்பர் சுவாமிகள்,  நடராஜ பெருமானின் குனித்த புருவத்தினையும்,  கொவ...
Image
நவராத்திரிகள். அம்பிகையின் ஒம்பது ராத்திரிகள் அவையை நவராத்திரி. இந்த வருட நவராத்திரி மிக விசேஷம். காரணம் அது 9,முழு நவராத்திரி பத்தாம்நாள் விஜயதசமி. அவள் துர்கை/ லெக்ஷ்மி/ சரஸ்வதி மலைமகள்/அலைமகள்/கலைமகள் அல்லது அவளே வடக்கில் ஒம்பது துர்கைகள் காட்சிதருக்கிறாள். நவதுர்காவின் ஒன்பது பெயர்கள்:  ஷைலபுத்ரி,  பிரம்மச்சாரிணி,  சந்திரகாண்டா,  கூஷ்மாண்டா,  ஸ்கந்தமாதா,  காத்யாயினி,  காலராத்திரி,  மகாகௌரி மற்றும்  சித்திதாத்ரி. இந்த வடிவங்கள் துர்கா தேவியின் ஒன்பது தெய்வீக வெளிப்பாடுகள் ஆகும், அவை நவராத்திரி காலத்தில் பூஜிக்கப்படுகின்றன.  நவதுர்கா பெயர்கள்:  1. ஷைலபுத்ரி (Shailaputri) - மலைமகளாகப் பிறந்தவர். 2. பிரம்மச்சாரிணி (Brahmacharini) - தவமிருந்தவர். 3. சந்திரகாண்டா (Chandraghanta) - சந்திரனைத் தலையில் அணிந்தவர். 4. கூஷ்மாண்டா (Kushmanda) - அண்டத்தை உருவாக்கியவர். 5. ஸ்கந்தமாதா (Skandamata) - கார்த்திகேயனின் (ஸ்கந்தன்) அன்னை. 6. காத்யாயினி (Katyayani) - காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்தவர். 7. காலராத்திரி (Kalaratri) - இருளையும் அழிக்கும...

மூன்றுகூடங்கள்

Image
 #பஞ்சதசிமந்திரத்தில் கூறியது போல் #மூன்றுகூடங்கள் #. பஞ்சதசி மந்திரத்திற்கும் மூன்று கூடத்திற்கும் என்ன தொடர்பு. இந்த மூன்றின் இணைவே முக்கோணம்.  அதுவே அம்பாள் வசம் செய்யும் இடம். அதுவே ஶ்ரீசக்ர பிந்து ஸ்தானம். அவை வாக்பவ கூடம். காஞ்சிபுரம் காமாக்ஷி காமராஜ கூடம் - கவுகாத்தி காமாக்யா தேவி சக்தி கூடம் - ஹிமாசலம் ஜ்வாலாமுகி காமாக்ஷி, ஜ்வாலாமுகி மற்றும் காமாக்யா ஆகிய தெய்வங்கள் சக்தி வழிபாட்டில் உள்ள வெவ்வேறு தெய்வரூபங்கள் ஆகும்.  காமாக்ஷி தேவி தமிழ்நாட்டில் காஞ்சியிலும்,  காமாக்யா தேவி அசாமில் கவுகாத்தியிலும் வணங்கப்படுகிறார். ஜ்வாலாமுகி தேவி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜ்வாலாமுகி கோயிலில் வணங்கப்படும் ஒரு சக்தி பீடம் ஆகும்.  காமாக்ஷி (Kamakshi)  காமாக்ஷி தேவி,  காஞ்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வணங்கப்படும் ஒரு வடிவமாக கருதப்படுகிறார். சிவனின் மனைவியாகவும்,  சக்தி வழிபாட்டில் முக்கியமாக கருதப்படும் தெய்வீகமான லலிதா மகாதிரிபுரசுந்தரி என்றும் இவர் வணங்கப்படுகிறார். ஜ்வாலாமுகி (Jwalamukhi) ஜ்வாலாமுகி தேவி,  ஜ்வாலாமுகி கோயில் என்ற புனித தலத்...
Image
 நவராத்திரி-3. நவராத்ரி பரிசு இன்று ஒரு அனுஷ கதை வேண்டாமா? களத்தூர் ஒரு சின்ன கிராமம். ஓஹோ பேரைப் பார்த்ததும் ஒரு சினிமா ஞாபகம் வருகிறதோ? களத்தூர் கண்ணம்மா. இது அந்த சினிமா கதையோ அந்த ஊரோ இல்லை. வேறு களத்தூர். ஒரே பேரில் நிறைய ஊர்கள் நம் தேசத்தில் உண்டே.  நான் சொல்லும் களத்தூர் காவேரிக் கரையின் வாளிப்பான மண் கொண்டது. மக்கள், மாடு, மனை, சகலமும் அமோகமான செழிப்பு கொண்டது. கும்பகோணம், திருச்சி தஞ்சாவூர் பூலோகத்தில் ரம்யமான பிரதேசங்கள், அதில் தான் எத்தனை கிராமங்கள்.. எங்கும் எதிலும் மக்கள் மனத்திலும் பசுமை. அதில் ஒன்று இந்த களத்தூர். களத்தூர் துர்கா பரமேஶ்வரி. அழகி. சின்ன உருவம். அவள் கோவிலில் பூஜைக்கு குறைவில்லை.  கோவில் தர்மகர்த்தா அம்பாள் பக்தர் என்பதால் அவளுக்கு சேவை செய்வதே வாழ்வில் பிரதானமாக கொண்டவர். ”அடாடா, நவராத்ரியில் அம்பாளுக்கு ஒன்பது நாளும் கோலாகலமாக அலங்காரம், நைவேத்யத்துக்கு , நிறைய செலவழிப்பார். அண்டா அண்டாவாக சுண்டல் , சக்கரை பொங்கல் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அண்டை அசல் கிராமங்களில் இருந்தெல்லாம் கூட பசியோடு வருபவர்கள் வயிறு நிறையும். தர்மகர்த்தாவுக்கு ...

நவராத்திரி-2

Image
 நவராத்திரி-2 மஹாபெரியவாளும் கொலு பொம்மையும்! ஒரு நவராத்திரி தொடக்க நாளில், மஹாபெரியவரின் பக்தை ஒருத்தி, தன் புகுந்த வீட்டில் கொலு வைத்துக் கொண்டிருந்தாள்.  சில மாதங்களுக்கு முன்பு தான் அவளுக்குத் திருமணமானது என்பதால், புகுந்த வீட்டில் அவள் கொண்டாடும் முதல் நவராத்திரி இது. அதனால் கூடுதல் சந்தோஷத்தோடு கொலுப் படிகளை அழகாக அமைத்து, அலங்காரங்கள் செய்து பொம்மைகளை அடுக்கத் தொடங்கினாள். கொலு வைப்பதை பாரம்பரியமாகச் செய்யும்போது அதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கடைப் பிடிப்பார்கள்.  அது, கொலுப்படியில் முதல் படியில் அதாவது கீழிருந்து மேலாக ஒன்றாவது படியில் ஓரறிவு உயிர்கள், இரண்டாவது படியில் இரண்டு அறிவு உடையவை இப்படி ஆறாவது படியில் மனிதர்கள்.  ஏழாவது படியில் மகான்கள், எட்டாவது-ஒன்பதாவது படியில் தெய்வங்கள் என்று வைப்பார்கள். இந்தப் பெண்ணுக்கும் அந்தப் பாரம்பரியம் தெரியும் என்றாலும், மஹாபெரியவரின் பரம பக்தை என்பதால்,  மகான்களின் பதுமைகளை வைக்க வேண்டிய ஏழாவது படியில் அவரது பொம்மையை வைக்காமல், தெய்வங்களை வைக்கவேண்டிய எட்டாவது படியில் மகானின் பொம்மையை வைத்தாள். அப்போதுதான் நடந்...

அம்பாளின் லலிதாசஹஸ்ர நாம பாராயணம்.

Image
தற்போதைய அனைத்து அம்பாளைப் பற்றிய பதிவுகளுக்கு மூல காரணமாக இருந்தது, அம்பாளின் லலிதாசஹஸ்ர நாம பாராயணம். காரணம் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு ஏற்ப கண்ணியது உன் புகழ்  கற்பது உன் நாமம் கசிந்து பக்தி பண்ணியது  உன் இரு பாதாம்புயத்தில்  பகல் இரவா என்ற பாடலுக்கு ஏற்ப அம்பாளின் திருநாமத்தை அப்படியே பாராயணம் செய்யாமல் , அதன் அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்ய வேண்டும் என்பதற்காக #எனதுதேடுதல்பணி ஆரம்பித்த போது தான் இந்த பயணம் தொடங்கியது. அவ்வாறு ஒன்றை தேடும் போது அதற்கு தொடர்புடைய மற்றொன்று கிடைக்கும்.  அது என்னவென்று தேடும்போது அதற்கு தொடர்புடைய மற்றொன்று கிடைக்கும். மேலோட்டமாக பார்த்தால் அதன் தொடர்பு தெரியாது.  ஆனால் அதன் அர்த்தத்தை தேடும்போது அதன் ஆழம் புரியும். உதாரணத்திற்கு அம்பாளின் #பஞ்சதசிமந்திரம். அதை மந்திரமாக பார்த்தால் அது வெறும் 15அக்ஷ்ரங்களைக் கொண்ட மந்திரம். ஆனால் அதன் அர்த்ததை தேடும்போது அதற்கும் மூன்று கூடங்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தெரிய வந்தது. மூன்று கூடங்களின் அர்தத்தை தேடும் போது அம்பாளின் உடல் பாகங்களுக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்தது. ...

குருவாரம் குருவைப்பற்றியது

Image
 குருவாரம் குருவைப்பற்றியது ஸ்ரீ மஹா பெரியவா திருவடி சரணம் ! ஒருமுறை ஶ்ரீ மஹா பெரியவாளின்  தகப்பனார்  ஶ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகள் சுவாமிநாதனின் சிநேகிதன் கிருஷ்ண ஸ்வாமியின் அப்பா வெங்கட்ராமனைத் தேடிப் போனார்.  அவர் ஒரு சிறந்த ஜோதிடர்.மேலும் சுப்ரமண்ய ஐயருக்கு நெருங்கிய நண்பர்."வெங்கட்ராமா! சுவாமிநாதன் ஜாதகத்தைக் கொஞ்சம் பாரு. இவனுக்கு ஜாதகம் எப்படி இருக்கு?" என்று காட்டினார். அதைப் பார்த்ததும் ஜோசியருக்குப் பேச்சே வரவில்லை. சுவாமி நாதன் சாட்சாத் ஈஸ்வரன் என்று தெரிந்தது. ஆனால், ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நண்பனுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அதனால், "சுப்ரமண்யா! நீ உன் பிள்ளையைப் பற்றிக் கவலையே படாதே. நம்மைப் போன்றவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தையாகத் தெரியவில்லை.  இவன் ஜாதகத்தில் பெரிய ராஜாக்களுக்கு உண்டான யோகமெல்லாம் இருக்கு. சக்ரவர்த்தியாக உலகமே கொண்டாட வாழப் போகிறான்!" என்று பேசினார். வெறும் ராஜாவாகவா மாறினார்! உலகை உய்விக்க வந்த யதிராஜராக அல்லவா ஒளி வீசினார்!  அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ரேகைகளையும் பார்க்க ஆவல்கொண்டஜோசியர், அங்கிருந்த சுவாமிநாதனிடம...

#அபிராமிஅந்தாதிபாடல் -47#

Image
 #அபிராமிஅந்தாதிபாடல் -47# வாழும் படி  ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் வீழும் படி அன்று  விள்ளும் படி அன்று  வேலை நிலம் ஏழும் பருவரை  எட்டும் எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு  நடுவே கிடந்து சுடர்கின்றதே பொருள்:- இரவு பகல் சூழும் சுடர்கள் -  சந்திர, சூரியர்கள். உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி. வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் - அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள். ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள்.  அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி. வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே -  என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன் ஒருவர் வீழும் படி அன்று -  அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை விள்ளும் படி அன்று -  அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை வேலை நிலம் ஏழும் -  கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும் பருவரை எட்டும் -  எட்டு உயர்ந...

காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ

Image
 #காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ இந்த நாமத்திலிருந்து அடுத்து வருகின்ற சில நாமங்கள் அம்பாளின் ஸ்தனங்களையும் அதாவது திருமார்புகளையும்,இடைப்  பகுதியையும் வர்ணிக்கின்றன.  இதற்கு பிறகு வரும் நாமங்களை பார்க்கும்போது,  ஸ்ரீவித்யா உபாசனையில் காமகலா தியானம் என்கிற முறை இருக்கிறது. இந்த #காமகலா# தியானத்தின் சொரூபமாக இருப்பதே திருவாரூர் கமலாம்பிகைதான்.  ஸ்ரீவித்யாவில் காமகலா தியானத்தைப் பிரதிபலிக்கும் கோயிலெனில் அது #திருவாரூர்கமலாம்பிகை ஆகும்.  அப்படிப்பட்ட இந்த காமகலா தியானத்தின் முதல் நாமம் இங்கிருந்தே தொடங்குகின்றது. இதுநாள் வரையிலும் நாம் சொன்ன நாமங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு அதன் பொருளைப் புரிந்து கொள்வதே ஒரு தியானம் தான்.  இன்னும் பார்த்தால் அதன் பொருளே கூட அப்பேற்பட்ட அம்பிகையின் சொரூபத்தை வாக்கால் காட்டுகின்றது.  அந்த வாக்கு ரூபமாகவும் உள்ளவளும் அவளே.  எனவே, இதற்கு முன்னர் கூறப்பட்ட அனைத்து நாமங்களையும் கேட்டபடி இருங்கள்.  மனதை அந்த நாமத்தில் தோய்த்து எடுங்கள். #காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ காமேஸ்வரர் அம்பிகை மேல் கொள்...

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

Image
தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை #தர்ப்பணம்#என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.  #தர்ப்பயாமி#என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம். ஜப்பான் நாட்டை சேர்ந்த  #இமொட்டோ# என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப் படுத்தப்படுவதை கண்டார். அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது  அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார். இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம். தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.   அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.  நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.   அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன. அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ...

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் இரு வாழ்க்கை வாழ்கிறோம்.

Image
 என்னுள் எழுந்த சிந்தனையை இங்கு பதிவாகியுள்ளது. இதில் எத்தனை பேருக்கு உடன்பாடுடையோர் என தெரியவில்லை . எல்லாம் அவன் சித்தம். மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் இரு வாழ்க்கை வாழ்கிறோம். என்ன இருவாழ்க்கை?. ஒன்று சம்சார சஹார வாழ்க்கை மற்றொன்று சம்சார சஹார வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனின் பாதார விந்தை அடைய முயற்சிப்பது. மஹாபெரியவா அடிக்கடி கோடிட்டு காட்டுகின்ற விஷயம். மனித பிறவி எடுத்ததின் பயன் கர்மாவை கழித்து இறைவன் பாதார விந்தத்தை அடைவதே. இதில் எதை நீ இறுக பற்றுகிறாயோ அதில் நீ பயணிப்பாய். இதை நன்கு உணர்ந்த பல மஹான்கள் ஆதிசங்கரர்/தாயுமானவர்/குமரகுருபரர்/காவி காளிதாஸ்/காளமேகம்/அபிராமி பட்டர் போன்ற பலர் தான் பெற்ற இன்பத்தை மற்றவர் பெறவேண்டும் என்பதற்காக பல கிரந்தங்களை/பாடல்களை விற்று சென்றுள்ளனர். இல்லையேல் நம் மனது  ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர் என்ற அபிராமி பட்டர் அந்தாதியில் கூறியது போல். ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும்/எனது ஆவி பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு ம...

இது வரை காமாக்ஷியை பற்றிய பதிவுகள் பதிந்தன் பலன் இன்று கிடைக்கப் பெற்றேன்.

Image
இது வரை காமாக்ஷியை பற்றிய பதிவுகள் பதிந்தன் பலன் இன்று கிடைக்கப் பெற்றேன். காலையில் எனது குடும்பத்தினர் அவர்கள் நண்பரின் அழைப்பின் பேரில் சைதாப்பேட்டை செட்டித்தெருவில் உள்ள 300வருட பழமையான காமாக்ஷி தற்போது கும்பிஷேகம் ஆன கோவில் என்பதால்,அபிஷேகத்திற்கு கொடுத்து இருந்தனர். காலையில் அபிஷேகம் முடிந்து அம்பாளைப் பற்றி கூறியப்போது நானும் அம்பாளை காணவேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. ஆனால் இன்று கிரஹணம் என்பதால்  அம்பாளை தரிசிப்பது கடினம் என மனம் எண்ணியது. ஆனால் இன்று பௌர்ணமி என்பதால் மாலை பௌர்ணமி பூஜை அம்பாளுக்கு நடக்கும் எனவே மாலை அம்பாளை தரிசினம் செய்யலாம் என்று எனது மனைவியின் குரல். எனவே மாலை அம்பாளை தரிசிக்கலாம் என எண்ணி அதற்காக ஆயுத்தமாகி கோவிலை அடையும் போது அம்பாளுக்கு அலங்காரம் ஆகி நடை திறக்கப்பட்டது. நடை திறந்த  உடன் அடுக்கு ஆராத்தி, மங்கள ஆரார்த்தி முடிந்த பிறகு பிரசாதம் வினியோகம். இதில் ஒன்று திண்ணம் சதாசர்வ கால அம்பாளின் நினைப்பு நம்மில் இருந்தால் அவள் நமக்கு காட்சி கொடுப்பாள் என்பது சத்தியமான உண்மை. காமாக்ஷி அம்பாள் கோவில் இருப்பிடம் ஞாயிறு,7th செப்டம்பர் 2025 ஸ்ரீ காமா...

அம்பாளின் வக்ஷோருஹாம் -2

Image
 அம்பாளின் வக்ஷோருஹாம் -2 அம்பாளின் ஸ்தனங்களைப் பற்றி அபிராமி பட்டரின ##அபிராமிபட்டர் கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற்  பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்"  என்ற வரிகளில், சிவபெருமான் பார்வையில் இருக்கும் மற்றும் திருவுருவில் பொன்மலை போன்ற பருத்த முலைகளைக் கொண்ட அபிராமித் தாயார்,  அழுத ஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கியதாகவும்,  அந்தப் பால் அருளோடு கூடிய பெரும் கருணையைக் காட்டியதாகவும் விளக்கப்படுகிறது.  இது, குழந்தைக்குப் பால் கொடுப்பதன் மூலம் உயிர் கொடுக்கும் அளவிலான பேரருளை அபிராமித் தாய் வழங்கியதைக் குறிக்கிறது.  இதை தான் சங்கரபகவத் பாதாள் அம்பாளைக் குறித்த  கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார்.  அம்பாளின் ஸ்தனத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்யயெளவனமாய் இருக்கின்றனர் எனவும் , அவர்கள் குமாரர்களையோ  நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார்.  இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞ...

அம்பாளின் வக்ஷோருஹாம் -1

Image
 அம்பாளின் வக்ஷோருஹாம் -1 அம்பாளின் ஸ்தனங்கள் என்பவை தெய்வத் தன்மையுடன் கூடிய அவயங்கள்,  அவை ஞானத்தை உணர்த்தும், அமுதம் போன்ற தெய்வீக சக்தி நிறைந்தவை, மற்றும் பக்தர்களுக்கு தெய்வீகத் தாயின் கருணையை உணர்த்துபவையாகும்.  இதை தான் அபிராமி பட்டர் இடங்கொண்டு விம்மி  இணை கொண்டு இறுகி,  இளகி,  முத்து வடங்கொண்ட  கொங்கை  மலை கொண்டு  தனது #அபிராமிஅந்தாதியில் இவ்வாறு குறிப்பிடுகிறார். அவைகள் பரஞானம் மற்றும் அபரஞானம். பரஞானம் மற்றும் அபரஞானத்தை  தனி பதிவாக காணலாம். இதையே லலிதா சஹஸ்ரநாமம் #லலிதாசஹஸ்ரநாமம்# ஸ்தனபாரபந்நனதபட்டவலித்ரயா லலிதா தேவியின் மார்பகங்கள், தாமரை இலைகள் போன்று அலங்காரமான,கனமான நகைகளால் அலங்கரிக்கப் பட்டிருப்பதைக் குறிக்கிறது.  இது அம்பிகையின் பெருமையையும், அழகியையும், தெய்வீகத் தன்மையையும் விவரிக்கிறது.  மேலும் சில நாமாக்கள்  ஸ்தனபாரம் ( « « « ஸ்‌த‌ன‌ப‌ர‌» » » ) - ஸ்தனத்தின் பாரம்,  பத்ரா ( பத்ரா ) - தாமரை இலை போன்றது,  பத்ராவலி ( பத்ராவலி ) -  தாமரை இலைகளால் ஆன அலங்காரம்.  இந்த நாமம், "ஸ்தனபாரபந்ந...

அம்பாளின் நான்கு கரங்கள்

Image
 காமாக்ஷி/இராஜராஜேஸ்வரி/பாலதிரிபுரசுந்தரி/லலிதாம்பாள் இவர்கள் நால்வரும் அம்பாள் பராசக்தியின் சொரூபமே. இதை தான் அபிராமி பட்டரும்/காஞ்சி மஹாபெரியவா/சங்கர பகவத்பாதாள் அழகாக வர்ணிக்கிறார்கள். நான்கு கைகளில் என்ன உள்ளது என்பதற்கான வியாக்கியானம் 01.சதுர் பஹு சமன்விதா  நான்கு கரங்களை உடையவள்  02.ராக ஸ்வரூப பாசாத்யா  கயிறு வடிவில் அனைவரின் மீதும் அன்பு கொண்டவள் -  இடது கைகளில் ஒன்றில் இதை உடையவள்  03.க்ரோதகரங்குசோஜ்வாலா அங்குச வடிவில் மின்னும் கோபமும் கொண்டவள் - பந்த பாசத்தை அறுபாபதற்காக. வலது கைகளில் ஒன்றில்.  04 மனோ ரூபேஷு கோதண்டா  இடது கைகளில் ஒன்றில் மனம் எனும் இனிமையான கரும்பு வில்லை உடையவள்  05.பஞ்ச தன்மாத்ர சாயகா சாயகத்தை விட பஞ்சம்  தொடுதல்,  வாசனை,  கேட்டல்,  சுவை மற்றும் பார்வை ஆகிய ஐந்து வில்களை உடையவள் . ஒரு கையில் மனதாகிய கரும்பு வில்  மற்றொரு கையில் மலர் அம்பு. இதற்கு காரணம் அவளே நமது மனத்தில் ஆசை விதைக்கிறாள். மற்றொரு கைகளில் பாசாங்கும் அதாவது பாசம் மற்றும் அங்குசம். மனத்தில் ஏற்படும் பாசத்தை அங்குசத்தால் அறுது...