மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் இரு வாழ்க்கை வாழ்கிறோம்.

 என்னுள் எழுந்த சிந்தனையை இங்கு பதிவாகியுள்ளது.


இதில் எத்தனை பேருக்கு உடன்பாடுடையோர் என தெரியவில்லை .


எல்லாம் அவன் சித்தம்.


மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் இரு வாழ்க்கை வாழ்கிறோம்.



என்ன இருவாழ்க்கை?.


ஒன்று சம்சார சஹார வாழ்க்கை மற்றொன்று சம்சார சஹார வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவனின் பாதார விந்தை அடைய முயற்சிப்பது.


மஹாபெரியவா அடிக்கடி கோடிட்டு காட்டுகின்ற விஷயம்.


மனித பிறவி எடுத்ததின் பயன் கர்மாவை கழித்து இறைவன் பாதார விந்தத்தை அடைவதே.


இதில் எதை நீ இறுக பற்றுகிறாயோ அதில் நீ பயணிப்பாய்.


இதை நன்கு உணர்ந்த பல மஹான்கள் ஆதிசங்கரர்/தாயுமானவர்/குமரகுருபரர்/காவி காளிதாஸ்/காளமேகம்/அபிராமி பட்டர் போன்ற பலர் தான் பெற்ற இன்பத்தை மற்றவர் பெறவேண்டும் என்பதற்காக பல கிரந்தங்களை/பாடல்களை விற்று சென்றுள்ளனர்.


இல்லையேல் நம் மனது 


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்


என்ற அபிராமி பட்டர் அந்தாதியில் கூறியது போல்.


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி -


தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும்/எனது ஆவி பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.


இதில் சிறுவயதிலேயே துறவறம் பூண்டு சந்நியாசியாக வாழ்வது எளிது.


ஆனால் சம்சார சஹாரத்தில் உழன்ற ஒரு ஆத்மா பந்த பாசத்திலிந்து விடுபடுவது எளிதல்ல.


அந்த குடும்ப பாசம் அவ்வளவு எளிதில் அதிலிருந்து விடுபடுவதற்கு விடாது.


வாழ்க்கை என்பது தாமரை இலை நீர்.


சிறுவயதில் நடப்பத்தற்கு நமக்கு எதுவும் தேவையில்லை.


ஆனால் வயது ஆனால் நடப்பதற்கு ஊன்று கோல் தைவை அது  பகவான் நம்மை காப்பாற்றுவான் என்ற அபரி விதமான நம்பிக்கை தான் நமது ஊன்றுக் கோல்.


ஒன்று இறுக்கப்பற்றி இருக்கும் போதே மற்றொன்றை பற்றுவதற்கான முயற்சி செய்தால் அதை அடைத்தல் எளிது.


இதற்கு தான் மஹான்கள் குரங்கை உதாரணமாக கூறினாராகள்.


குரங்கை மனத்திற்கு ஒப்பிடும் எதிர்மறை சிந்தனை விடுத்து


அதில் நேர்மறை சிந்தனையான


குரங்கானது ஒரு மர கிளையை இறுக்க பற்றும், அப்போதே அடுத்த கிளையை பற்ற முயற்சி செய்யும்.


அடுத்த கிளையை இறுக்க பற்றி விட்டோம் என ஊர்ஜித்தம் செய்த பிறகு முதல் கிளையிலிருந்து கையை விட முயற்சி செய்யும்.


இதை நாம் சம்சார சஹரத்தில் இருக்கும் போது மற்றொரு பக்கம் பகவான் பாதத்தை பற்ற முயற்சிக்க வேண்டும் .


அதை விடுத்து சம்சார சாஹரத்தை கறையேற்றிய பிறகு நாம் கரையேறுவோம் என நினைப்பது பிறகு மிகவும் கடினம்.


அதற்கு நாம் செய்ய வேண்டும் , சதாசர்வ காலம் ஏதோ ஒரு தெய்வத்தை இறுக்க பற்ற வேண்டும்.


அதை தான் நான் தற்போது முயற்சி செய்து வருகிறேன். 


அவ்வாறு இறை சிந்தனையில் தேடுபவனவற்றை, மற்றவர் பயன்பெற வேண்டும் என்பதற்காக தற்போது பதிவுலாக பதிந்து வருகிறேன்.


காரணம் இரும்பானாது மிகவும் கடினமான வஸ்து. 


அதை நாம் நினைக்கும் வடிவத்திற்கு மாற்றுவதற்கு நெருப்பில் இடவேண்டும்.


நமது வாழ்க்கையும் அவ்வாறே பலவிதமான கடினமான சோதனைகளுக்கு பிறகே அவன் நம்மை ஏற்கிறான். 


அதுவரை நம்மில் பொறுமை வேண்டும்.


ஊளி அடிபடுக்கின்ற கருங்கல் சிலை ஆகிறது. 


மற்றவைகள் கோவில் படிகற்களாகிறது.


சிலையானது கர்ப்பகிரஹத்தில் தெய்வமாகிறது.


மற்றவை கால்மிதி அடிபடும் படிகல்லாகிறது.


இதில் நாம் எது ஆக வேண்டும் என்ற தீர்மானிப்பது அவன்,


ஆனால் அதற்கான முயற்சி நாம் தான் எடுக்க வேண்டும் என்ற இறைச்சிந்தையுடன்


உங்கள் அன்பன்


தேடுதல் என்பணி ஹரிதியாகராஜன்

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).