#அபிராமிஅந்தாதிபாடல் -47#

 #அபிராமிஅந்தாதிபாடல் -47#



வாழும் படி 


ஒன்று கண்டு கொண்டேன்


மனத்தே ஒருவர்


வீழும் படி அன்று 


விள்ளும் படி அன்று 


வேலை நிலம்


ஏழும் பருவரை 


எட்டும் எட்டாமல் இரவு பகல்


சூழும் சுடர்க்கு 


நடுவே கிடந்து சுடர்கின்றதே


பொருள்:-


இரவு பகல் சூழும் சுடர்கள் - 


சந்திர, சூரியர்கள்.


உலகில் இரவும், பகலும் உருவாக காரணமாக இருக்கும் சூரியன், சந்திரன் இவைகளுக்கு நடுவே இருந்து பிரகாசிப்பவள் - அன்னை அபிராமி.


வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும், எட்டாமல் -


அவள், ஏழு நிலங்கள், எட்டு உயர்ந்த மலைகள் ஆகியவைக்கும் எட்டதவள்.


ஆனால், மனத்தினால் ஒருவர் தியானித்தால் அவர்களுக்கு எளிதில் எட்டுபவள். 


அன்னையை வணங்குவதே வாழ்வதற்கு வழி.


வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே - 


என்றும் நிலைத்து வாழும் வகையை என் மனத்தில் கண்டு கொண்டேன்


ஒருவர் வீழும் படி அன்று - 


அந்த வழியைக் கண்டவர் யாரும் அழிவதில்லை


விள்ளும் படி அன்று - 


அந்த வழியைக் கண்டவர்கள் மற்றவர்களுக்கு அதனைச் சொல்லுவதும் எளிதில்லை


வேலை நிலம் ஏழும் - 


கடலால் சூழப்பட்ட ஏழு தீவுகளும்


பருவரை எட்டும் - 


எட்டு உயர்ந்த மலைகளும்


எட்டாமல் -


 எட்டாமல் (அப்பாலுக்கு அப்பாலாய்)


இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே - 


இரவில் வரும் நிலவென்னும் சுடர், பகலில் வரும் பகலவன் என்னும் சுடர் இவ்விரண்டு சுடர்களிலும் ஒளியாக நின்று சுடர்கின்றது அந்தப் பேரொளி.


***


நிலையான பேரின்ப வாழ்வை அடையும் வழியை அன்னையின் அருளால் கண்டு கொண்டவர் அந்தப் பேரொளி உலகங்களுக்கெல்லாம் எட்டாமல் சுடரிரண்டிலும் சுடர்கின்றது என்று மட்டுமே சொல்ல முடிகிறது என்கிறார்.


கண்டவர் விண்டிலர்; 


விண்டவர் கண்டிலர் என்ற முதுமொழியையும் 


அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் என்ற ஆன்றோர் மொழியையும் 


சூரிய சந்திர மண்டலத்தில் வசிப்பவள் என்ற வேதமொழியையும் இந்தப் பாடலில் காணமுடிகின்றது.


***


அருஞ்சொற்பொருள்:


விள்ளுதல் - 


பிரித்துப் பிரித்து விளக்கமாகச் சொல்லுதல்


வேலை - கடல்


பரு வரை - பெரிய (பருத்த) மலை


அந்தாதித் தொடை: 


சென்ற பாடல் வாழ்த்துவனே என்று நிறைந்தது. இந்தப் பாடல் வாழும்படி என்று தொடங்கியது. 


இந்தப் பாடல் சுடர்கின்றதே என்று நிறைந்தது. அடுத்தப் பாடல் சுடரும் என்று தொடங்கும்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).