காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ
#காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ
இந்த நாமத்திலிருந்து அடுத்து வருகின்ற சில நாமங்கள் அம்பாளின்
ஸ்தனங்களையும் அதாவது திருமார்புகளையும்,இடைப்
பகுதியையும் வர்ணிக்கின்றன.
இதற்கு பிறகு வரும் நாமங்களை பார்க்கும்போது,
ஸ்ரீவித்யா உபாசனையில் காமகலா தியானம் என்கிற முறை இருக்கிறது.
இந்த #காமகலா# தியானத்தின் சொரூபமாக இருப்பதே திருவாரூர் கமலாம்பிகைதான்.
ஸ்ரீவித்யாவில் காமகலா தியானத்தைப் பிரதிபலிக்கும்
கோயிலெனில் அது #திருவாரூர்கமலாம்பிகை ஆகும்.
அப்படிப்பட்ட இந்த காமகலா தியானத்தின் முதல் நாமம் இங்கிருந்தே தொடங்குகின்றது.
இதுநாள் வரையிலும் நாம் சொன்ன நாமங்கள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு அதன் பொருளைப் புரிந்து கொள்வதே ஒரு தியானம் தான்.
இன்னும் பார்த்தால் அதன் பொருளே கூட அப்பேற்பட்ட அம்பிகையின் சொரூபத்தை வாக்கால் காட்டுகின்றது.
அந்த வாக்கு ரூபமாகவும் உள்ளவளும் அவளே.
எனவே, இதற்கு முன்னர் கூறப்பட்ட அனைத்து நாமங்களையும் கேட்டபடி இருங்கள்.
மனதை அந்த நாமத்தில் தோய்த்து எடுங்கள்.
#காமேஸ்வரப்ரேமரத்னமணிப்ரதிபனஸ்தனீ
காமேஸ்வரர் அம்பிகை மேல் கொள்ளக் கூடிய பிரேமை.
சிவபெருமான் அம்பிகை மேல் கொள்ளக் கூடிய அன்பு.
அதை வார்த்தைகளில் அந்த பிரேமையையும் அன்பையும் கொண்டு வர முடியாது.
அப்படிப்பட்ட பிரேமையை காமேஸ்வரர் அம்பிகையின் மீது வைக்கிறார்.
இப்போது அம்பிகை காமேஸ்வரருக்கு என்ன கொடுக்கிறார்.
அம்பாளும் தன்னுடைய பிரேமையை அளிக்கிறாள்.
காமேஸ்வரர் தன்னுடைய பிரேமையை ஒரு ரத்ன மணி போன்று அம்பிகைக்கு கொடுக்கிறார்.
இந்த இடத்தில் எப்படி கொடுக்கிறாள் எனில், என்னவொரு விசேஷ மெனில்..
அவர் தன் மேல் காண்பிக்கக் கூடிய பிரேமையை விட இரண்டு மடங்கு அம்பிகை காமேஸ்வரர் மேல் காண்பிக்கிறாள்.
காமேஸ்வரர் கொடுத்ததுபோல்
இரு மடங்கு ரத்னமணியை அளிக்கிறாள்.
அந்த இரு மடங்கு பிரேமை மாதிரி இருக்கிறது அம்பிகையினுடைய ஸ்தனங்கள்.
ஏனெனில், ஸ்தனங்கள் என்றாலே இரட்டைதான்.
ஏன் இரட்டை எனில் காமேஸ்வரருடைய பிரேமை இரட்டிப்பாகிவிட்டது,
அங்கு.
அவர் அளித்தது ஒன்று எனில் அம்பிகை இரண்டு பிரேமை ரத்ன மணிகளை காமேஸ்வரருக்கு அளிக்கிறாள்.
அந்த இரண்டு ரத்னமணிகளும் அம்பாளுடைய இரண்டு ஸ்தனங்கள். அவர் கொடுத்தது கண்ணுக்கே கூட தெரியாது.
ஆனால், அம்பாள் அளித்திருப்பது தெரிகின்றது.
மேலே சொல்லப்பட்டது பொதுவான வெளிப்படையான அர்த்தம் காமேஸ்வரர் யாரெனில்,
சுத்த ஞான சொரூபம்.
அதுவே ஸ்வ சொரூபம்.
அதுவே ஆத்ம சொரூபம்.
அங்கு நிலையான ஞானம் மட்டுமே உள்ளது.
வேறு எதற்கும் இடம் கிடையாது.

Comments
Post a Comment