அம்பாளின் லலிதாசஹஸ்ர நாம பாராயணம்.
தற்போதைய அனைத்து அம்பாளைப் பற்றிய பதிவுகளுக்கு மூல காரணமாக இருந்தது, அம்பாளின் லலிதாசஹஸ்ர நாம பாராயணம்.
காரணம் அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு ஏற்ப
கண்ணியது உன் புகழ்
கற்பது உன் நாமம்
கசிந்து பக்தி
பண்ணியது
உன் இரு பாதாம்புயத்தில்
பகல் இரவா
என்ற பாடலுக்கு ஏற்ப அம்பாளின்
திருநாமத்தை அப்படியே பாராயணம் செய்யாமல் ,
அதன் அர்த்தம் தெரிந்து பாராயணம் செய்ய வேண்டும் என்பதற்காக #எனதுதேடுதல்பணி ஆரம்பித்த போது தான் இந்த பயணம் தொடங்கியது.
அவ்வாறு ஒன்றை தேடும் போது அதற்கு தொடர்புடைய மற்றொன்று கிடைக்கும்.
அது என்னவென்று தேடும்போது அதற்கு தொடர்புடைய மற்றொன்று கிடைக்கும்.
மேலோட்டமாக பார்த்தால் அதன் தொடர்பு தெரியாது.
ஆனால் அதன் அர்த்தத்தை தேடும்போது அதன் ஆழம் புரியும்.
உதாரணத்திற்கு அம்பாளின் #பஞ்சதசிமந்திரம்.
அதை மந்திரமாக பார்த்தால் அது வெறும் 15அக்ஷ்ரங்களைக் கொண்ட மந்திரம்.
ஆனால் அதன் அர்த்ததை தேடும்போது அதற்கும் மூன்று கூடங்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தெரிய வந்தது.
மூன்று கூடங்களின் அர்தத்தை தேடும் போது அம்பாளின் உடல் பாகங்களுக்கு தொடர்பு உள்ளது என தெரியவந்தது.
மூன்று கூடங்கள் என்னவென்று பார்க்கும் போது
அதற்கு கோயில்களின் அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு தெரியவந்தது.
கோயில்களும் அதன் சந்நிதி அமைப்புக்கும் தொடர்பு உள்ளது.
இவ்வாறாக ஒன்றொன்றுக்கு ஒன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது.
அந்த மந்திரமாக அல்லது திருநாமாக பார்க்கிறபோது அதன் சூக்ஷ்மம் புரியாது.
அதை உற்று நோக்கும் போது இந்த தொடர்பு நமக்கு புரியும்.
ஒவ்வொன்றையும் தேடும்போது அதன் அனுபவம் மிகவும் அலர்பரியதது.
அந்த அனுபவங்களே தற்போதைய பதிவுகள்.
இவை அனைத்தும் என்னுல் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
இதை தான் பட்டர்
நின்றும்
இருந்தும்
கிடந்தும்
நடந்தும்
நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது
உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும்
அரும்பொருளே
அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே
அழியா முத்தி ஆனந்தமே
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை -
நான் நிற்கும் போதும்
அமரும் போதும்
கிடக்கும் போதும்
நடக்கும் போதும்
எந்த நிலையில் இருந்தாலும் நினைப்பது உன்னையே
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் -
நான் என்றும் வணங்குவதும் உன் மலர்த்தாள்களையே
இதை தான் பகவத் பாதாள்
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி
முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண
மஶனாத்யாஹுதி விதி:
ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில
மாத்மார்ப்பம த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே
விலஸிதம்
ஆத்ம ஸமர்ப்பண பாவனையால்
வெறும் பேச்சு ஜபமாகவும்,
கைத்தொழில் அனைத்தும் முத்திரைகளின் விளக்கமாகவும்,
நடை ப்ரதக்ஷிணம் செய்வதாகவும்,
உண்டி முதலியன ஹோமமாகவும்,
படுத்துக்கொள்ளுதல்நமஸ்காரமாகவும்,
இன்னும் சுகமாக முயற்சியின்றி எனது செயல் எது உண்டோ
அது எல்லாம் உன்னுடைய பூஜை முறையாகவும் ஆகட்டும்.
எனவே அம்பாள் வழிபாடு வேறு நாம் தினமும் செய்யும் செயல் அனைத்தும் அம்பாளுக்குரிய பூஜை என்று எண்ணும் போது.
நாம் அம்பாளுடன் நாம் ஒன்றிவிடுகிறோம்.
காரணம் பரம்பொருளிருந்து வெளிப்பட்ட ஒரு துணுக்கு நாம் என்பதை உணர முடியும்.
இதனால் நாம் வேறு அவள் வேறு என்ற எண்ணம் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.
அவளே அனைத்தும் ஆவாள் என்ற உணர்வு நம்மில் மேலோங்கும்.
சகலும் அவளே அதில் நாம் ஒரு துணுக்கு.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments
Post a Comment