அம்பாளின் வக்ஷோருஹாம் -2

 அம்பாளின் வக்ஷோருஹாம் -2


அம்பாளின் ஸ்தனங்களைப் பற்றி அபிராமி பட்டரின

##அபிராமிபட்டர்

கருத்தன எந்தைதன் கண்ணன வண்ணக் கனகவெற்பிற் 

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்" 


என்ற வரிகளில்,


சிவபெருமான் பார்வையில் இருக்கும் மற்றும் திருவுருவில் பொன்மலை போன்ற பருத்த முலைகளைக் கொண்ட அபிராமித் தாயார், 


அழுத ஞானசம்பந்தப் பிள்ளையாருக்குப் பாலை வழங்கியதாகவும், 


அந்தப் பால் அருளோடு கூடிய பெரும் கருணையைக் காட்டியதாகவும் விளக்கப்படுகிறது. 


இது, குழந்தைக்குப் பால் கொடுப்பதன் மூலம் உயிர் கொடுக்கும் அளவிலான பேரருளை அபிராமித் தாய் வழங்கியதைக் குறிக்கிறது. 


இதை தான் சங்கரபகவத் பாதாள்


அம்பாளைக் குறித்த 


கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். 


அம்பாளின் ஸ்தனத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்யயெளவனமாய் இருக்கின்றனர் எனவும் ,


அவர்கள் குமாரர்களையோ 

நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார். 


இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார்.


இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். 


அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து


ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார்.


இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். 


இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் 


ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.


ஸ்லோக எண்.75:-


"தவ ஸ்தான்யம் மன்யே


 தரணிதரகன்யே ஹ்ருதயதாஹ


பயஹபாராவாரஹ பரிவஹதி ஸரஸ்வதாமிவ!


தயாவத்யா தத்தம்


த்ராவிடஷிஷுராஸ்வாத்யா தவ யத்


கவீநாம் ப்ரௌதாநாமஜனி கமநீயாஹ கவாயிதா!"


இறைவர் வலிய நெஞ்சை

ஞானத்தையும் கருணையையும் உணர்த்துபவை ஸ்தனங்கள் ஞானத்தின் சின்னமாகும், 


அவை தெய்வத்தின் ஞானத்தை உணர்த்துபவை. 


அவை தெய்வீக அமுதம் நிறைந்தவை, 


இது பக்தர்களுக்கு ஆன்மீக ஊட்டத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது. 


அம்பாளின் ஸ்தனங்கள் தாயின் கருணையை எடுத்துக் காட்டுகின்றன, 


ஏனெனில் அவை குழந்தைப் பேறு மற்றும் nourishment போன்ற செயல்களுடன் தொடர்புடையவை. 

ஆன்மீக மற்றும் குறியீட்டு முக்கியத்துவம் 


«அம்பாளின் ஸ்தனங்கள்» என்பது


தாயின் அன்பின், போஷணையின், மற்றும் தெய்வீக ஊட்டத்தின் குறியீடாகும்.


மேலும், அவை அண்டத்தின் ஸ்தாபக சக்தியின் ஒரு பகுதியாகும், 


மேலும் இவை படைப்பு மற்றும் அழிவின் சுழற்சியுடன் தொடர்புடையவை.


#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).