தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்) பாகம் 7
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
பகுதி -7
அத்தனை உசந்தவள் பேரை மண்டையிலடித்த மாதிரி சொல்லக்கூடாதென்றுதான் பாகவத்தில் ஒரு இடத்தில் மட்டும் மறைமுகமாகச் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்கிறார்கள்.
இம்மாதிரி மீனாக்ஷியை ஸஹஸ்ரநாமம், ஸெளந்தரியலஹரி இரண்டிலும் நேராகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்லியிருப்ப தாலேயே அவளுக்கு ஏற்றம் கொடுப்பதாகத்தான் ஏற்படுகிறது
சரி, 'லலிதா ஸஹஸ்ரநாமம்' மீனாக்ஷியை எங்கே சொல்கிறது?என்ன சொல்கிறது?
ஆரம்பத்தில் அம்பாளை வர்ணித்துக் கொண்டு வரும்போது வக்த்ர லக்ஷ்மீ பரீவாஹ சலன் மீநாபலோசநா என்று ஒரு நாமாவைச் சொல்கிறது.
" வக்த்ர லக்ஷ்மீ " என்றால் (அம்பாளுடைய) முககாந்தி.
அது ஒரு பெரிய பிஹவாஹமாக இருக்கிறது, 'பரீவாஹம்'என்றால் பிரவாஹம். இப்படி முக தேஜஸ் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றால் நீர்பெருக்கில் மீன் இருக்க வேண்டுமே!
இந்த காந்தி ஸமுத்திரத்தில் எங்கே மீன்?
நீண்டு நீண்டு விளங்கும் அம்பாளுடைய நேத்திரம் இருக்கிறதே அதுதான் மீன். லோசனம் என்றால் கண்.
(லோகனம் என்றால் பார்ப்பது. பார்க்கப்படுவதால் தான் 'லோகம்'என்றே பேர். தமிழிலும் 'பார்'என்றால் நோக்குவது, உலகம் என்ற இரண்டு அர்த்தமும் ஏற்படுகிறது. இங்கிலீஷ் look என்பதும் 'லோக' ஸம்பந்தமுள்ளதுதான்.) மீன் மாதிரி வடிவத்தில் இருக்கிற லோசனம் - மீநாப லோசநம் .
ரூபத்தில் மீன் மாதிரி இருப்பது மட்டுமின்றி, பிரவாஹத்தில் மீன் இருக்க வேண்டும் என்ற நியாயத்தின்படியும் ஸெளந்தர்ய ப்ரவாஹமான அம்பாள் இப்படிப்பட்ட கண்ணை உடையவளாயிருக்கிறாள். 'மீனாக்ஷி'என்று அப்பட்டமாகச் சொல்லாமல் 'மீநாப லோசநா'என்று சொல்லியிருக்கிறது.
#வக்த்ரலெக்ஷ்மிபரிவாஹ#.
'

Comments
Post a Comment