தெய்வ தத்துவம் ; பகுதி 3

 தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)


பகுதி - 3.


தெய்வ தத்துவம் ; 



தெய்வங்கள்


காஞ்சீ மண்டலத்தில் ஈஸ்வரன் கோவில்கள் எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லாமல் இருக்கிறது.


அதற்கு எதிர்வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்!அதனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்பதில் ஆச்சரியமில்லை.


 சைவாகமங்களின்படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் 'மீனாக்ஷியம்மன் கோவில்'என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்!


ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டச்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும், 


ஊருக்கே 'ஜம்புகேச்வரம்'என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டி ருக்கிறது!


மீனாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்களும் கவிகளும் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்கள்.


#ச்யாமளாதண்டகம்# என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளர்தான் மீனாக்ஷி. 


ச்யாமளா, 

மாதங்கி, 

மந்த்ரிணி 


என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷ அம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.


குறிப்பாக "ச்யாமளா தண்டக"த்தில்


மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி


குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ என்று வருவது,


மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீனாக்ஷியைச் சொல்வதாகவே இருக்கிறது.


 'கதம்ப வனம்'என்பதுதான் மதுரை.


 'கடப்ப வனம்'என்று தமிழில் சொல்வார்கள்.


" ஓங்கார பஞ்ஜர சுகீம் "என்று ஆரம்பிக்கிற 'நவரத்ன மாலிகை'யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதையாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான்.


ஓங்காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி"என்று அம்பிகையை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். 


மதுராபுரியில் மீனாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல்,


கிளியைத்தான் கையில் வைத்துக்கொண்டிருக்கிறாள்!


#மீனாக்ஷிபஞ்சரத்னம்#என்று ஆசார்யாளும் பண்ணியிருக்கிறார்.


பாதி மாதுட னாய பரமனே


ஞால நின்புக ழேமிக வேண்டும் - தென்


ஆல வாயில் உறையும் எம் ஆதியே


என்ற ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிறபோது கூட 'பாதிமாது'என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்கனாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.


இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள்.


குமரகுருபரர் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்'என்று, 


ஸாக்ஷத் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். 


அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது.


குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, 


திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்துமாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம். 


இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?'என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்!


அப்போதுதான் எல்லோருக்கும் மீனாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹமானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.


தமிழில் 'அங்கயற் கண்ணி'என்று அம்பாளைச் சொல்வார்கள்.


 #அம்#என்றால் அழகிய, #கயல்#என்றால் மீன். 


மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள்#மீனாக்ஷி#என்று அர்த்த்ம். 


'அங்கச்சி, அங்கச்சி'என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதானால்தான்.


இதே திருமலை நாயகரிடத்தில் பிரதம மந்திரியாக இருந்த நீலகண்ட தீக்ஷிதர் என்ற பெரியவரும் அம்பாளைப் பற்றி 'ஆனந்த ஸாகர ஸ்தவம்'என்று செய்திருக்கிறார்.


பரமசிவ அம்ச பூதரான அப்பைய தீக்ஷிதரின் தம்பி பேரர் இந்த நீலகண்ட தீக்ஷிதர். 


பக்தி, பாண்டித்யம், குணம், சீலம் எல்லாவற்றிலும் பெரியவர். அவர் இந்த ஸ்தோத்திரம் பண்ணினதைப் பற்றி ஒரு விருத்தாந்தம் உண்டு.


பாண்டிய ராஜாக்களின் காலாத்திலிருந்து மீனாக்ஷி கோவிலுக்குத் திருப்பணிகளும், ஏராளமான திருவாபரண ஸமர்ப்பணங்களும் நடந்து வந்திருப்பதைப் போலவே திருமலை நாயகரும் நிறையச் செய்தார்.


 நீலகண்ட தீக்ஷிதரின் மேற்பார்வையில் அப்போது 'புதுமண்டப'நிர்மாணம் நடந்து வந்தது. 


அதில் வைப்பதற்காக ஸுமந்திர மூர்த்தி ஆசாரி என்ற சில்பி, பத்னிகள் ஸமேதமாக நாயகருடைய சிலையையும் பண்ணினார். 


பட்டத்து ராணியின் சிற்பத்தைப் பண்ணும்போது வலது முழங்காலுக்கு மேலே ஒரு சில்லு தெறித்துப்போய்விட்டது.


என்ன பண்ணினாலும் அந்த மூளி தெரியாமல் மறைக்க முடியாத தினுஸில் இது நடந்துவிட்டது. ரொம்பவும் அழகாக உருவான சிற்பத்தில் இப்படி ஏற்பட்டுவிட்டதே என்று துக்கப்பட்டுக்கொண்டு ஆசாரி (நீலகண்ட) தீக்ஷிதரிடம் போய் அழுதார்.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).