தெய்வ தத்துவம் ; பகுதி 5
தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)
பகுதி -5
தெய்வ தத்துவம் ;
தெய்வங்கள்
அப்போதுதான் தீக்ஷிதர் இந்த 'ஆனந்த ஸாகர ஸ்தவ'த்தைப் பாட ஆரம்பித்தார்.
பரம துக்கமான ஒரு ஸந்தர்ப்பத்தில் லோக ஜனங்களின் ப்ரதிநிதியாக துக்கத்தோடு ப்ரலாபிக்கும்போதே உள்ளூர அம்பாளுடைய அருள் என்கிற ஆனந்த ஸாகரத்தில் மிதந்துகொண்டு பாடினார்.
கர்மம், பக்தி, ஞானம் முதலான எல்லாவற்றுக்கும் மேலாக
'அவள் விட்ட வழி'என்று பிரபத்தி (சரணாகதி) பண்ணுவதையே அதிலே விசேஷமாகச் சொல்லியிருக்கும்.
அம்பாளை எதிரே வைத்துக்கொண்டு பேசுகிற மாதிரி இருக்கும். திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிரு க்கலாம் போல ஒரு இடத்தில், "
சரணம் ப்ரபத்யே மீனாக்ஷி விச்வ ஜநநீம் ; ஜநநீம் மமைவ "என்று வரும் (ஸ்லோ 32)
'ஸகல லோக மாதா எனக்குங்கூட மாதா'என்று விநயமாகச் சொல்கிறார். 'அவளே கதி என்று சரண் அடைகிறேன்'என்கிறார்.
நூறுக்கு மேல் ஸ்லோகமுள்ள இந்த ஸ்துதியில் முதல் பாதியில் இப்படி பிரபத்தி தர்மத்தை விளக்கவிட்டு,
ஸெளந்தர்ய லஹரி'யில்
முதல் பாதியில் சாக்த தத்வங்களைச் சொல்லிவிட்டு
இரண்டாம் பாதியில் தேவியைக் கேசாதிபாதம் வர்ணிக்கிறமாதிரி, தீக்ஷிதரும் இரண்டாம் பாதியில் அம்பாளைப் பாதாதி கேசம் வர்ணிக்கிறார்.
இந்த வர்ணனை ஆரம்பத்தில்தான், 'ஸெளந்தர்ய லஹரி'யில் அதன் தலைப்பு வருகிறது போலவே 'ஆனந்த ஸாகர'என்ற இந்தத் தலைப்பும் வருகிறது.
இதிலே ஒரு இடத்தில்,
" த்ரஷ்டாஸ்மி கேந ததஹம் து விலோசநேந ?"-
" (உன் சரணங்களை எனக்குக் காட்டினாலும் கூட) அதை நான் எந்தக் கண் கொண்டு பார்ப்பேன்?"என்று வருகிறது (ஸ்லோ 61) மேலே சொன்ன விருத்தாந்தம் நிஜம் என்பதற்கு இது internal evidence (உட்சான்று) .
இப்படி பாடி முடித்ததும் அம்பாள் அவருக்குப் பார்வை கொடுத்து விட்டாள்.
திருஷ்டி விசேஷத்தினாலேயே 'மீனாக்ஷி'என்று பெயர் பெற்றிருப்பவள் தீக்ஷிதருக்கு மீளவும் திருஷ்டியை அநுக்ரஹம் பண்ணிவிட்டாள்.
ஆனாலும் அதோடு ராஜ ஸேவகம் போதுமென்று அவர் ராஜிநாமா பண்ணிவிட்டுத் தாம்ரபரணி தீரத்தில் பாலாமடைக்குப் போய்ச் சிறிது காலம் வாஸம் செய்து விட்ட ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸித்தாயாகி விட்டார்.
அதனால் அவ்வூருக்கு 'நீலகண்ட ஸமுத்ரம்'என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது.
அந்த நீலகண்டரே அநுபவித்த ஸமுத்ரம், ஸாகரம், ஆனந்த ஸாகரம் எதுவென்றால் மீனாக்ஷியின் அநுக்ரஹம்தான்.
இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை.
மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல்.
#ஓம்ஶ்ரீமீனாக்ஷியேநமஹ#.

Comments
Post a Comment