#அபிராமிஅந்தாதிபாடல்3#.
#அபிராமிஅந்தாதிபாடல்3#.
அம்பாளிடம் சரணாகதி
குடும்பக் கவலைகள் தீரும்
அறிந்தேன்,
எவரும் அறியா மறையை
அறிந்துகொண்டு,
செறிந்தேன் நினது திருவடிக்கே திருவே,
வெருவிப் பிறிந்தேன்,
நின் அன்பர் பெருமை எண்ணாத
கரும நெஞ்சால்,
மறிந்தே விழும்
நரகுக்கு உறவாய மனிதரையே
அபிராமியே,
இதுநாள் வரை,
எனது பழவினைகள் காரணமாக,
உன் பெருமையை எண்ணி துதிக்கும் உனது அன்பர்களின் சங்கத்தை நாடவில்லை.
அதனால் மீண்டும் மீண்டும் நரகத்தினுள் விழுந்து கொண்டிருந்தேன்.
இங்கு நரகம் என்பது மனித சொந்தம் கலந்த சம்சார கடலை குறிக்கிறது.
திருவள்ளுவரின் அருமையான வரிகள் அதை தான் பட்டர் இங்கு குறிப்பிடுகிறார்.
#பிறவிப்பெருங்கடல்நீந்துவர்நீந்தார்இறைவன்அடிசேராதார்#.
இறைவனுடைய திருவடிகளைப் போற்றி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பிறவி பெரும்கடல் - சம்சாரசாஹரம்.
#பிறவிப்பெருங்கடல்#என்பது பிறவியின் துன்பங்களை ஒரு பெரிய கடலாக உருவகப்படுத்துகிறது.
#நீந்துவர்#என்பது இறைவனை நினைப்பவர்கள் பிறவி கடலை கடந்து மோட்சம் அடைவார்கள் என்று பொருள்.
#நீந்தார்#என்பது இறைவனை நினைக்காதவர்கள் பிறவி கடலில் தத்தளிப்பார்கள் என்று பொருள்.
#இறைவன்அடிசேராதார்# என்பது இறைவனைப் போற்றி நினைக்காதவர்கள் என்று பொருள்.
அதாவது அன்னையை துதிக்காத மனிதர்கள்,
நரகத்திற்கு மிகவும் வேண்டியவர்கள்,
உறவுக்காரர்கள் என்று கொள்ள வேண்டும்.
ஆனால் இப்போது எவரும் அறியாத மறையினை (வேதத்தை) அறிந்து கொண்டு,
அன்னையான உன்னை(அபிராமியை),
வேதத்தின் அன்னையாகிய உன்னை
அவளின் திருவடியை அடைந்தேன். அன்னையே வேதம் என்று கொள்க.
சத்சங்கம் என்பது ஒருவனுக்கு மிகவும் முக்கியம்.
அதுவே முக்தி அளிக்க வல்லது.
இதனை ஆதி சங்கரர் தனது பஜகோவிந்தத்தில்
(மோஹ முத்கரா ஸ்லோகம் என்றுதான் இதற்கு முதலில் பெயர்.
அதாவது, மோஹத்தை தகர்க்கக் கூடியவை),
சத்சங்கத்தை பற்றி
சத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்சல தத்வம்
நிஸ்சல தத்வே ஜீவன் முக்தி
என்று கூறியுள்ளார் .
அதாவது, சத்சங்கம் கிடைத்தால்,
அவனுக்கு வேறு சங்கம் தேவையில்லை.
மோஹம் அறுபடுகிறது.
பின் நிலையான தத்வத்தை நாடுகிறான்.
அதுவே அவனுக்கு முக்தி அளிக்கிறது.
அருட்செல்வம் உடையாய், வேறு யாரும் அறியாத இரகசியத்தை நான் அறிந்தேன்;
அங்ஙனம் அறிந்தமையால் அதுகொண்டு நின் திருவடியினிடத்தே அடைந்தேன்;
#அம்பாளின்பாதாரவிந்தம்#.

Comments
Post a Comment