சந்திரமண்டல வாஸினி.
கடந்த இரு தினங்களாக அம்பாளின் இருப்பிடம் பற்றிய மஹாபெரியவா அழகாக விளக்கி இருந்தார்
ஒன்று ஶ்ரீவித்யா உபசாகர் எண்ணும் மணிதீபம் அதில் சிந்தாமணி கிரஹம்.
மற்றொன்று சந்திரமண்டல வாஸினி.
ஆச்சாரியரின் வர்ணணையில் முதலாவது அண்டத்தில் அம்பாளை காண்பது.
காரணம் இந்த மனசானது ஒன்றை பார்த்தால் தான் அது இருக்கும் என எண்ணும்.
உண்மையில் பரம்பிரம்மத்திற்கு உருவம் கிடையாது. அதிலிருந்து வெளிப்பட்ட ஒரு துணுக்கு அம்பாள்
அசையாத பரபிரம்மத்தை மனசஞ்சலப்படுத்தி அசையவைத்து இந்த லோகவியாபாரத்துக்கு தூண்டுபவள்.
அவளுக்கு பல திருநாமங்கள் பல வடிவங்கள் என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.
அவ்வாறு அண்டத்தில் பல உருவத்தை பிண்டத்தில் உள்ள மனசில் காண்பது மற்றொரு முறை.
காரணம் அவள் நம்மில் உள்ளால் என்பதை உணர்ந்து உள்முகமாக அவளை குருவாக ஏற்று தியானம் செய்வது. இந்த முறையை பல மஹான்கள் உள்முகமாக தியானம் செய்து வந்தனர்.
அவ்வாறு உள்முக அம்பாளை தியானம் செய்த போது தான் சரபோஜி மன்னன் இன்று என்று என்ன திதி என கேட்டவுடன்.
உள்ளே தான் பார்த்த பூர்ணநிலாவால் அம்பாளின் ஆக்ஞையால் பௌர்ணமி திதி என்றார்.
இது நடந்திராவிட்டால் அபிராமி அந்தாதி என்ற தமிழ் கிரந்தம் நமக்கு கிடைத்து இருக்கிறது.
இதன் சராம்மசம் முதல் நிலையில் வெளிப்பார்த்த அம்பாளை உள்முகமாக அம்பாளை நோக்குவது இரண்டாவது நிலை.
பல மஹான்களுக்கு பாக்கியமான இரண்டாம் நிலை நமக்கும் கிடைபத்தற்கு அம்பாளின் அருள் வேண்டும்.
ஒரு சிறு உதாரணம் சிலபேர் கோவில் அருகில் குடி இருப்பர். ஆனால் அவர்களுக்கு கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.
அதற்கு அம்பாள் அவர்களது மனதில் அந்த எண்ணத்தை தோன்று வைக்கவேண்டும்.
அதற்கு அவள் அருள் வேண்டும். அவளே சகலம் என்பதை ஆச்சாரியர் முன்றைய பதிவில் கண்டோம்.
இன்று நாம் ஆன்மீகத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால் அதற்கு உந்து இருப்பது குரு அருள் வேண்டும் என்பதே நிதர்சமான உண்மை.

Comments
Post a Comment