எனது எண்ணம் செயல் அனைத்திலும் அம்பாள்

 #ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#


எனது எண்ணம் செயல் அனைத்திலும்


நீக்கமற நிறைந்தவள் அம்பாள் அதனால் இது சாத்தியமானது.


இது நாள் வரை அம்பாளின் கிருபையினால் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு தமிழ் அர்த்தம் எழுத்தும் பாக்கியத்தை அருளினாள்.


அது கிட்டதட்ட ஒன்றரை வருட பதிவாக முகநூலில் பதிவிட்டு வந்தேன்.


இது முடிந்த கையுடன் , எல்லாவற்றிற்க்கும் மூலமான விளங்கும் லலிதா சஹஸ்ர நாமத்திற்கு சமஸ்கிருத பாஷ்யமான சௌந்தயலஹரி ஸ்லோகத்திற்கு தமிழ் அர்த்த்ததை எழுத வைத்தாள் அம்பாள்.


கிட்டதட்ட 99ஸ்லோகம் முடிந்த தருவாயில் உள்ளது.


100வது ஸ்லோகத்திற்கான அர்த்தம் ஞாயிறு அல்லது செவ்வாய் அன்று அம்பாளின் கிருபையினால் நன்கு நடைப்பெறும் என எண்ணுகிறேன்.


அம்பாளுக்கு பல சொரூபங்கள் அந்தந்த சொரூபங்களுக்கு ஏற்ப வர்ணங்கள்.


இளம்சிவப்பு நிறம்


லலிதாம்பிகை/இராஜராஜேஸ்வரி/ஶ்ரீதிரிபுரசுந்தரி/காமாக்ஷி.


பச்சை நிறம்


கடம்பவன வாசினி மீனாக்ஷி/ஷ்யாமளா


கருப்பு நிறம்


பார்வதி/காளி


ஆனால் இங்கு பட்டர் இளம்சிவப்பு நிறத்தை வர்ணிக்கிறார்


பட்டரின் அபிராமி அந்தாதிக்கும் பகவத்பாதாள் சௌந்தயலஹரிக்கும்

ஒரு சிறு ஒப்பிடு


சிந்தூர வண்ணத்தினாள்


அவள் சிவந்த நிறத்தினாள் என்கிறார் பட்டர்.


அவரே உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம் இட்டு என்கிறார்.


அதிகாலை எழுகின்ற இளம்சிவப்பு நிறத்தில் இருக்கும்.


அதை தனது உச்சி வகிட்டு இட்டு இருக்கிறாள் என்கிறார்


இதையே தான் பகவத்பாதாள்


44வது ஸ்லோகத்தில்


தநோது க்ஷேமம் நஸ்தவ வதனஸௌந்தர்யலஹரி-

பரிவாஹஸ்ரோத: சரணிரிவ சிமந்தசரணி: |


#வஹந்திஸிந்தூரம்#


ப்ரபாலகபரிபாரதிமிரா-

த்விஷாம் ப்ருந்தைர்பந்திக்ருதமிவ நவினார்ககிரணம் ||


தனோது க்ஷீமம் - 


விடுதலையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்;


 ந: - 


எங்களுடையது; 


தவ -


 உங்களுடையது; 


வதன சவுந்தர்ய லஹரி -


உங்கள் முகத்தின் அழகு அலைகள்; 


பரி வாஹ ஸ்ரோத: சரணிரிவ - 


ஒரு நீரோடை போல நிரம்பி வழிகிறது; 


#சீமந்தசரணிஹ்#


பிரிக்கப்பட்ட கூந்தல்; 


#வஹந்தி சிந்துரம்# 


#குங்குமம் அணிந்தவர்#


பிரபல கபரி பார திமிர த்விஷாம் பிருந்தைஹ் -


 அடர்த்தியான கூந்தலின் இருள்; 


பந்தி கிருதம் இவ - 


சிறைவாசம் போன்றது; 


நவீன அர்க கிரணம் -


விடியற்காலையில் சூரியன்.


"உன்னுடைய அடர்த்தியான மற்றும் கருமையான பிரிந்த கூந்தல் சிறைபிடிக்கப்பட்ட எதிரிகளைப் போலத் தோன்றுகிறது; 


#உன்பிரிந்த கூந்தலில் அலங்கரிக்கப்பட்ட குங்குமம் விடியற்காலையில் சூரியனைப் போலத் தெரிகிறது#.


பிரிந்த பகுதியின் மையம், உன் முகத்தின் அழகின் அலைகளுடன், நிரம்பி வழியும் நீரோடை போலத் தோன்றுகிறது."


இந்தப் பதத்தில் பராசக்தியின் கூந்தல் விவரிக்கப்படுகிறது.


இதை தனது 100ஸ்லோகத்தில் அம்பாள் கொடுத்ததை அம்பாளுக்கே சௌந்தயலஹரி என்ற ஸ்லோக மாலையாக சமர்பித்தேன் என அம்பாளின் சரணாகதி அடையூம் விதமாக ஸ்லோகத்தை அமைத்து இருப்பார்.


அப்பேர்ப்பட்ட மஹானே அப்படி என்றால் நாம் எம்மாத்திரம்.


நான் ஒரு சிறு துரும்பு என்பதை இங்கு பதிவுச் செய்வதில் பெருமைக் கொள்கிறேன்.


#ஓம்லலிதாம்பிகையேநமஹ#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).