ஆசார்யாள் பண்ணுகிற அம்பாளின் அவயவ வர்ணனை

இந்த லலிதா சஹஸ்ர நாமத்திற்கு ஏன் இவ்வளவு பெருமை,


அதை ஆசார்யாள் பண்ணுகிற அம்பாளின் அவயவ வர்ணனையில்


ஸஹஸ்ர நாமத்தையே நன்கு  பல இடங்களில் பேசுகிறார்.


#அம்பாளுடையநெற்றி#


திருப்பிவைத்தா அர்த்தசந்திரன் மாதிரி இருக்கிறது (ச்லோ. 46) என்னும்போது


#அஷ்டமீ-சந்த்ர-விப்ராஜ-தலிக-ஸ்தல சோபிதா#


என்ற ஸஹஸ்ரநாம அபிப்ராயத்தைத்தான் மெருகேற்றியிருக்கிறார். 


#அம்பாளுடையகண்#


அம்பாள் கண்களைத் திறந்தாள் ஸ்ருஷ்டி, மூடினால் பிரளயம்


 (ச்லோ. 55) என்கிறபோது


 #உந்மேஷ-நிமிஷோத் பந்ந- விபந்ந- புவநாவளீ#


என்ற நாமா நினைவு வருகிறது. 


#அம்பாளுடையஉதட்டு#


பவளக் கொடியும் (வித்ருமலதாகவும்) ஒப்பாகாது என்று 


இதில் [ச்லோ. 62] வந்தால், 


அதில் [ஸஹஸ்ரநாமத்தில்] 


அதே அர்த்தத்தில் 


#நவவித்ரும-பிம்பஸ்ரீ-ந்யக்காரி-ரதநச்சதா#


என்று இருக்கிறது!


#அம்பாளுடையபேச்சு#


 “ஸரஸ்வதியின் வீணாகானத்தையும் விஞ்சுகிற சாதுர்யம் அம்பாளுடைய பேச்சுக்கே இருக்கிறது:

 #நிஜ-ஸல்லாப-மாதுர்ய-விநிர்பர்த்ஸித-கச்சபீ#


என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிற ‘ஐடியா’வையே


விபஞ்ச்யாகாயந்தீயில்


 [ச்லோ-66] 


ஒரு முழு ச்லோகமாக ஆசார்யாள்  உருவாக்கம் பண்ணியிருக்கிறார்.


ஒவ்வோர் அவயவத்துக்கும் ஏதாவது உவமை சொல்லி விட்டு, 


சில இடங்களில் அந்த உவமையும் போதாது என்கிற ஆசார்யாள் அம்பாளுடைய முகவாய்க்கட்டையை மட்டும்


#அம்பாளுடையமுகவாய்கட்டை#


#கதம்காரம் ப்ரூம: தவ சுபுகம் ஔபம்ய ரஹிதம்#?” 


“உவமையே இல்லாத உன் மோவாயை எப்படி வர்ணிப்பது?” என்கிறார். 


[ச்லோ -67]


ஸஹஸ்ரநாமத்தைப் பார்த்தால் அங்கேயும் மோவாய்க் கட்டைக்கு மாத்திரம் ஓப்பீடு ஏதும் சொல்லாமல்


#அநாகலித-ஸாத்ருச்ய-சுபுகஸ்ரீ-விராஜிதா#


ஒப்புவுமையே ஏற்பட்டிராத மோவாயின் அழகால் பிரகாசிக்கிறவள்


என்று இருக்கிறது! 


#அம்பாளின்முழங்கால்#


பரமேச்வரனை ஜயிப்பதற்காக மன்மதன் அம்புகளை அடைத்து வைத்த அம்பறாத் தூணியாக அம்பாளின் முழங்கால் இருக்கிறது என்று இங்கே 


[ச்லோ. 83] வருவதற்கு மூலம்


#இந்த்ரகோப பரிக்ஷிப்தஸ்மர தூணாப ஜங்கிகா#


என்று ஸஹஸ்ரநாமப்பேரில் இருக்கிறது. 


ச்ருதி சிரஸில்


#அம்பாளுடையசிரசு#


அதாவது வேதமாதாவின் தலையில் 


#அம்பாளுடையபாதம்#


விளங்குகிறது என்று ஆசார்யாள் சொல்கிறார் என்றால் 


[ச்லோ- 84], ஸஹஸ்ரநாமம் ரொம்பவும் அழகாக,


#வேதமாதாவகுடு#


வேதமாதாவின் வகுட்டில் அப்பிய ஸிந்தூரமாக எந்தக் குங்குமம் இருக்கிறதோ அதையே 


தன் பாததூளியாகப் பண்ணிக் கொண்டவள்:

 #ச்ருதி-ஸீமந்த-ஸிந்தூரி-க்ருத-பாதாப்ஜ தூளிகா#


என்று வர்ணிக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில்


#பத-த்வய-ப்ரபாஜால-பராக்ருத-ஸரோருஹா#


இணையடிகளின் காந்தி ஸமூஹத்தால் தாமரையைப் பழிக்கிறவள்” என்று ஒரு 


நாம. ஆசார்யாள்.


இதையே 


அம்பாளுடைய பாதம்


“ஹிமாநீ ஹந்தவ்யம்” என்ற 


[87-வது] ச்லோகத்தில் ‘டெவலப்’ பண்ணி எத்தனை விதங்களில் அம்பாளுடைய பாதம் தாமரையைப் பழிக்கிறது என்று காட்டுகிறார்.


ஒன்று தாமரை பணியில் கருகிவிடும். 


அம்பாளுக்கோ பிறந்த அகமும், புக்க அகமும் இரண்டும் பனி மலையானதால் அவள் பாதத்திற்கு ஸதாவும் அதில் தான் 


ஆனந்த வாஸம்! இரண்டு: 


தாமரை ராத்ரி வேளைதாதோறும் கூம்பிப்போவது. 


அம்பாள் பாதமோ எப்போதும் மலர்ச்சியாக இருப்பது. 


தாமரை லக்ஷ்மியைத் தன்னில் வைத்துக் கொண்டிருக்கிறது. லக்ஷ்மி தாமரைக்குள்ளேதானே உட்கார்ந்திருக்கிறாள்? 


அம்பாள் பாதமோ அதை வழிபடுபவர்களுக்கே 


லக்ஷ்மியை [செல்வத்தை] வாரிக் கொடுக்கிறது.


 “இப்படியாகத் தாமரையை உன் பாதம் ஜயிக்கிறது” என்று முடிக்கிறார்.


#அம்பாளபாதத்தின்மேற்பகுதி#


#கூர்மப்ருஷ்ட-ஜயிஷ்ணு-ப்ரபதான்விதா#


ஆமை முதுகை வெல்லும் புறங்காலை உடையவள்’ என்று ஸஹஸ்ரநாமத்தில் வருகிறதையே ஓரிடத்தில்


 [ச்லோ-88] 


ப்ரபதம் … கடின கமடீ கர்பர துலாம்’ என்கிறார். கமடம் என்றாலும் கூர்மம்தான். கச்சபம் என்றும் ஆமைக்கு இன்னொரு பேர்.


ஒரு ச்லோகத்தில்


 [ச்லோ-91] 


#அம்பாள்கால்சிலம்பு#


அம்பாளுடைய பாதத்தில் மங்களமான ரத்னச் சிலம்புகள் ஒலிக்கிரத்தை


 ‘ஸுபக மணி மஞ்ஜீர ரணித …. 


சரண கமலம்’ என்கிறார். 


இதில் ஐடியா (கருத்து) மட்டுமின்றி வார்த்தைகள்கூட 


ஸஹஸ்ரநாமத்தில் உள்ள


#ஸிஞ்ஜான-மணி மஞ்ஜீர-மண்டித- ஸ்ரீபதாம்புஜா#


என்பதையே  பண்ணுவது நன்றாகத் தெரிகிறது.


ஆழ்ந்து அலசிப் பார்த்தால் இப்படி இன்னம் நிறைய அகப்படலாம்.


ஸஹஸ்ர நாமத்தில் சொன்னதையே இப்படி ஆசார்யாள் எடுத்துக் கையாளலாமா என்றால் ஒரு விதத்தில்.


இதுவும் அவருடைய பெருமையை, விநயத்தைத்தான் காட்டுகிறது. 


ஸ்ரீவித்யோபாஸகர்களுக்கெல்லாம் ரொம்பவும் தெரிந்தது


ரொம்பப் பிரஸித்தி பெற்றது, ரொம்பவும் முக்யமாயிருப்பது ஸஹஸ்ரநாமம் தான். 


அப்படிப்பட்ட புஸ்தகத்திலிருந்து எடுத்துக் கொண்டார் என்றால் அதனிடம் தம் பக்தியைத் தெரிவித்துக் கொள்கிறார், 


அதைவிட அதிகமாகத் தாம் எதுவும் சொல்லிவிட முடியாது என்று விநாயத்தோடு நினைக்கிறார் என்றுதானே அர்த்தம்? 


கல்பனையில் ஆசார்யாளின் ‘ஒரிஜினாலிடி’ 


எவ்வளவு உச்சமானது என்பதற்கும் 


இதே ‘ஸௌந்தர்யலஹரி’ வர்ணனைகளை விட வேறு வேண்டாம்! 


சிவனைப்பற்றி அவர் பண்ணியிருக்கும் பாதாதி கேசாந்த, கேசாதி பாதாந்த ஸ்தோத்ரங்களிலும், ‘விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ர’த்திலும் அப்படியே ஒரிஜினல் கல்பனைகளாகக் கொட்டியிருக்கிறார். 


ஆனபடியால் ‘ஸௌந்தர்ய லஹரி’ என்று அம்பாளை வர்ணிக்கிரபோதும் அவர் மட்டும் மனஸ் வைத்திருந்தால் ஸஹஸ்ர நாமத்திலிருந்து அங்கங்கே எடுத்துக் கொண்டிருக்கிற இடங்களிலும் புது கல்பனையாக வேறு விதத்தில் அத்புத வர்ணனை செய்திருக்கலாம். 


ஆனாலும் அப்படிப் பண்ணாமல் ஸஹஸ்ரநாமத்தைக் கையாண்டார் என்றால் அதனிடம் தம் மதிப்பைக்காட்டி மற்றவர்களும் அதை மதிக்கும்படிப் பண்ணுகிறார் என்றுதான் அர்த்தம்.


இப்படி மநுஷ்யரீதியில் ரொம்ப விநயமாக அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் அல்லது அவருடைய அவதாரத்தை நினைத்து உசத்தியாகவும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். 


ஆசார்யாள் யார்? 


ஸாக்ஷாத் ஈச்வரனும் அம்பாளும் சேர்ந்து பண்ணின அவதாரம். 


அம்பாள் வேறே அவர் வேறே இல்லை. 


‘ஸஹஸ்ரநாம’த்தைப் பண்ணினது யார்? 


வசின்யாதி சக்திகள் என்கிற வாக் தேவதைகள். 


அவர்கள் அதைப் பண்ணும்படியான சக்தியை அநுக்ரஹித்தது அம்பாளேதான். 


வாக்கு முழுதும் அவள் ஸொத்துத்தா னென்றாலும் அவளே அநுக்ரஹித்து வெளியே கொண்டு வந்ததாக ப்ரத்யக்ஷத்தில்காட்டிய வாக்கு நிச்சயமாக அவளுடையதுதான். 


வாக் தேவதைகளிடம், “லோக க்ஷேமார்த்தமாக என் நாமாக்களை ஸ்தோத்ரமாகப் பண்ணுங்கள்” என்று அவள் உத்தரவு போட்டு, உத்தரவு போட்டது மட்டுகில்லாமல் அவர்கள் மேலே தன்னுடைய கடாக்ஷத்தை வீசி அந்த ஸ்தோத்ரம் உண்டகும்படியாகப் பண்ணினால் என்று சொல்லியிருக்கிறது.


அதனால் லலிதா ஸஹஸ்ரநாமம்அவள் ஸொத்துத்தான். 


ஆனபடியால் அவளே ஆசார்யாளாக வந்து ஸ்தோத்ரித்துக் கொண்டபோது அதிலிருந்து சில அபிப்ராயங்களை இதில் சேர்த்ததில் எந்தத் தப்புமில்லை. 


நம்மகத்தில் தோட்டம் போடும்போது நமக்கே ஸொந்தமான தோப்பிலிருந்து பதியன் கொண்டு வந்து வைத்தால் என்ன தப்பு? ஆசார்யாளே ஸ்தோத்ரத்தை முடிக்குமிடத்தில்


 “த்வதீயாபி: வாக்பி:” — ‘உன்னுடைய வாக்காலேயே’ — ஆனது இது என்று சொல்லியிருக்கிறார்.


கீதையில் க்ருஷ்ண பரமாத்மா கடோபநிஷத் முதலான ச்ருதி வாக்யங்களையும், அபிப்ராயங்களையும் அப்படியே எடுத்தாண்டிருக்கிறார். 


ஆதியில் அந்த ச்ருதி மந்த்ரங்கள் அவர் மூச்சிலேயேதான் இருந்து, அப்புறம் அவரேதான் ரிஷிகளுக்கு அவை ஸ்புரிக்கும்படிப் பண்ணினார். அதனால் ஸ்வாதீனத்தோடு இப்போது மறுபடி அதுகளையே கீதையில் அங்கங்கே போட்டார். அந்த மாதிரிதான் இதுவும்.


அடுத்த ச்லோகத்தில் [ச்லோ-21]


 குண்டலிநீ யோக ஸித்தி அடைந்தவர் ப்ரஹ்மானந்த வெள்ளத்தில் ஆழ்ந்து போவதைச் சொல்கிறார். 


ஆனந்த வெள்ளத்தை ‘ஆஹ்லாத லஹரி’ என்கிறார். ஸௌந்தர்ய லஹரி – 


ஆனந்த லஹரி ஸ்தோத்ரத்தில் வரும் அநேக லஹரிகளில் இது ஒன்று.


 அம்பாளின் அழகு லஹரி, ஆசார்யாளின் அநுபவ லஹரி, அருள் லஹரி, கவிதை லஹரி எல்லாம் பன்று சேர்ந்ததில் இப்படிப் பல லஹரிகள் ஸ்தோத்ரத்திற்குள் சொல்லப்பட்டிருக்கின்றன.


 அம்பாளுடைய பக்தன் மனஸின் அழுக்குகளையும், மாயையையும் நசுக்கிப் போட்டவன் — ம்ருதித மல மாயேந மநஸா — என்று இங்கேதான் சொல்கிற

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).