அபிராமிஅந்தாதி காப்பு

 #அபிராமிஅந்தாதி#

விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வேண்டி விநாயகர்காப்பு என்று காப்பு பாடலை ஆரம்பிக்கிறார்.

காப்பு

தாரமர் கொன்றையும் 

சண்பக மாலையும் 

சாத்தும் தில்லை

ஊரர் தம் பாகத் துமை

மைந்தனே உல கேழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி

எப்போதும் என் சிந்தையுள்ளே

கார் அமர் மேனிக் 

கணபதியே

நிற்கக் கட்டுரையே.

(உரை) 

எச்செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுள் கணபதியை வணங்கி துவங்குவது மரபு. 

இவ்விடத்தும் அபிராமிப் பட்டர்

 "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம் அந்தாதியைத் துவங்குகின்றார்.

மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்து அருளுகின்றதில்லையெம்பெருமானுக்கும்,

அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் 

திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, 

ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது 

எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே

நிலை பெறும்படி திருவாய் 

மொழிந் தருளுவாயாக. 

தார்-மார்பின் மாலை. 

கொன்றை சிவபெருமானுக்கும்,

சண்பகம் அம்பிகைக்கும் 

உரிய மாலைகள்; 

#சாம்பேயகுஸுமப்ரியா# (435) 

என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று.

 உலகேழும் பெற்றது:

#புவியேழையும்பூத்தவளே#(12) என்பர் பின். 

ஊரருக்கும் உமைக்கும் மைந்தனே என்க. 

உமை:  இங்கே, சிவகாமசுந்தரி; 

#சேரும்தலைவிசிவகாமசுந்தரி# (68).

அந்தாதி யென்றது. 

இங்கே அந்தாதிப் பிரபந்தத்திற்குரிய சொற்பொருள் வளத்தை.

கணபதியின் திருநிறம் வெண்மையென்றும் 

சிவப்பென்றும் கூறுவதும் உண்டு. 

அந்தாதி நிற்கக் கட்டுரை என்க. கட்டுரைத்தல் - 

பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; 

என்றது தம் உள்ளத்துள்ளே நின்று

சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி.

என்று கணபதி பிராத்தனை செய்து முதல் காப்பு பாடலை ஆரம்பிக்கிறார்

அபிராமி பட்டர்.

#ஓம்கம்கணபதாயேநமஹ#.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).