அபிராமி அந்தாதி காப்பு
வரும் நாட்களில் அம்பாளை வர்ணிக்கும் மற்றும் ஒரு தமிழ் பாஷ்யமான அபிராமி அந்தாதி பற்றிய பதிவுகளைக் காணலாம்.
இதற்கு முன் ஆச்சாரியர் பகவத்பாதாள் சௌந்தயலஹரி சமஸ்கிருத பாஷ்யதை தனது ஆனந்த மயமான நிலையில் அம்பாளின் அழகை ரசித்து ரசித்து வர்ணித்திருப்பார்.
ஆனால் இந்த காவியத்தை படைக்கும் போது தனக்கு வாழ்வா சாவா என்ற நிலையில் அருமையான பாடலை அம்பாளின் கிருபையால் அந்தாதி முறையில் பாடினார்.
அந்தாதி என்பது முடியில் எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும்.
எவ்வளவோ அந்தாதி இருந்தாலும் இந்த அந்தாதி சிறப்பு பெருவதற்கு அன்னையின் அருளே காரணம்.
இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று அம்பாளை பாடுபவர்கள் அனைவரும் அப்பனை பாடமல் இருப்பதில்லை.
அதே மாதிரி அப்பனை பாடிய திருமூலர் அம்மனை பாடமல் இருக்க மாட்டார்கள்.
சைவ சாக்தத்திற்கும் ரொம்ப வேறுபாடுகள் இல்லை.
காரணம் அன்பே சிவம். அந்த அன்பிற்கு பாத்திரம் ஆனவள் தாய்.
எனவே அன்பே சிவம் என்பது தாயையும் தந்தையும் குறிக்கும்.
அவர்கள் இரண்டும் இணைந்த இணைவே பூரம்.
பூரம் என்பது பூஜ்ஜியம். பூஜ்ஜியம் என்பதே இரண்டின் இணைவே.
இதை தான் ஔவையார்.
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்றார்.
அதை தான் பட்டர் #உமையொருபாகன்#என்கிறார்.
இங்கு முதல் பாடல் காப்பு பாடலில் பிள்ளையார் சுழி போட்டு பாடியிருப்பார்.
மேலும் அவர் யாருடைய பிள்ளை என்பதாக முதல் பாடலாக அமைத்து இருப்பார்.
தாரமர் கொன்றையும்
சண்பக மாலையும்
சாத்தும் தில்லை
ஊரர் தம் பாகத் துமை
மைந்தனே உல கேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி
எப்போதும் என் சிந்தையுள்ளே
கார் அமர் மேனிக்
கணபதியே
நிற்கக் கட்டுரையே.
காரணம் அனைத்திற்கு மூலம் கணபதியே என்பதால்.
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம் அந்தாதியைத் துவங்குகின்றார்.
அதனால் தான் அச்சிறுப்பாக்கம் வரக்காரணம்
திரிபுரம் எரிக்க சிவபெருமான் செல்லும் பொழுது தேர் அச்சு முறிந்தது.
இதற்கு கணபதியிடம் விடை பெறாததே காரணம் என்று கணபதிக்கு ஆசி வழங்கிய தலம் இதுவாகும்.
அச்சு + இறு + பாக்கம் - அச்சிறுபாக்கம் என்பது மருவி அச்சரப்பாக்கம் என தற்போழுது வழங்கப்பெறுகிறது.

Comments
Post a Comment