அபிராமிஅந்தாதிபாடல்2#

 #அபிராமிஅந்தாதிபாடல்2#

துணையும் 

தொழும் தெய்வமும்

பெற்றதாயும் 

சுருதிகளின்

பணையும் கொழுந்தும் 

பதிகொண்டவேரும் 

பனிமலர்ப்பூங்கணையும் 

கருப்புச் சிலையும்

மென்பாசாங் குசமும்

கையில் அணையும் 

திரிபுர சுந்தரி

ஆவதறிந்தனமே.

தனது உயிருக்கு ஆபத்து என்ற போதிலும் அவருடைய சிந்தனை அம்பாளின் மீது இருந்த அசைக்கமுடியாத பற்றால் வந்து விழுந்த வார்த்தைகள் இவை.

அதன் பொருள்.

அபிராமி அன்னையே எனது துணை, 

பின் வரும் பாடலில்

(விழிக்கு துணை - அபிராமிவல்லி)

நான் தொழும் தெய்வம், 

என்னை பெற்ற தாயும் அவளே.

(அவளே லோகமாதா என்கிறார்)

அவளே வேதம், 

(அவளே வேதமாதவான காயத்ரி)

அதன் கிளை, வேர் அனைத்தும். 

(உபநிடதங்கள் மற்றும் காவியங்கள் அனைத்தும் அவளே என்கிறார்).

தன் நான்கு கரங்களில், 

மலர்களால் ஆன அம்பு, 

கரும்பினால் ஆன வில்,

மென்மையான பாசம் (கயிறு)

 [இதிலும் மென்மை. 

அன்னையின் கருணை. 

சொற்ப விஷயங்களில் பற்று வைக்காதே, என பக்தனை மெல்லிய கயிற்றினால் கட்டுகிறாள்.]

அங்குசம் ஆகியவற்றை கொண்டுள்ள திரிபுரசுந்தரி 

என்ற அன்னை அபிராமியை அறிந்து கொண்டேன்.

லலிதா சஹஸ்ரநாமத்தில்

ராகஸ்வரூப பாஷாட்யா

 (ராகம் -பற்று ,

அம்பாள் மீது  பற்று  வரவேண்டும் என்பதற்காக அந்த பற்று வடிவாய் கயிற்றை வைத்துள்ளாள். 

அதை பக்தன் மீது செலுத்தி கட்டினால், 

அவனுக்கு அம்பாளை தவிர வேறொன்றும் தெரியாது.]

க்ரோதாங்கார அங்குஷோஜ்வலா

 [குரோதம் -கோபம், 

அதனை அறுப்பதற்கு, அங்குசம்.]

மனோரூபேக்ஷு கோதண்டா 

[மனம் எனபது கரும்பு வில் போன்றது.]

பஞ்ச தன்மாத்ர சாயகா

 [சப்த (சத்தம்),

 ஸ்பர்ஷ (தொடு உணர்வு),

 ரூப (பார்வை),

 ரச (ருசி), 

கந்தம்(வாசனை) ஆகிய

5 உணர்வுகள் ] 

என்று வருகிறது.

மன்மதனிடமும் கரும்பு வில், 

மலர் அம்பு  இருக்கிறது. 

அதனால் காமம் (ஆசை) உண்டாகுகிறது. 

ஆனால்  அன்னையிடம் இருக்கும்

 கரும்பு வில்,

 மலர் அம்பு ஆகியவை 

நமக்கு

காம ஜெயம்



 (ஆசையினை அடக்குதல் -


 வைராக்யம்) தருகிறது.


#ஓம்ஶ்ரீஅபிராமிதாயே#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).