சித்தபுருஷர்கள்

 நேற்றைய பதிவில் சித்த புருஷர்களுக்கு அது எவ்வாறு சித்தியாகும் என பதிவிட்டு இருந்தேன்.


அது எவ்வாறு சித்தியானது.


காரணம் அவர்கள் சித்தியில் 


அதாவது அவர்களுக்குள் எதை சூக்ஷ்மத்தை காண்கிறார்களோ அதை ஸ்துலத்தில் கொண்டு வர இயலும்.


அவர்கள் ஏதும் கண்கட்டி வித்தை செய்யவில்லை.


மாறாக அவர்களுக்கு அஷட்மா சித்தியும் கை கூடும்.


அவ்வாறே அபிராமி பட்டர் தனது சூக்ஷ்ம உடலில் திதி நித்யா தேவிகளில் பௌர்ணமி திதி தேவதைக்கு மனதார பூஜைச் செய்த போது. 


அவர்கள்


(1) பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா

(2) துவதியை –பகமாலினி நித்யா

(3) திரிதியை – நித்யக்லின்னை நித்யா

(4) சதுர்த்தி – பேருண்டா நித்யா

(5) பஞ்சமி – வந்நிவாசினி நித்யா

(6) ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா

(7) ஸப்தமி – சிவதூதி நித்யா

(8) அஷ்டமி – த்வரிதா நித்யா

(9) நவமி – குலசுந்தரி நித்யா

(10) தசமி – நித்ய நித்யா

(11) ஏகாதசி – நீலபதாகா நித்யா

(12) துவாதசி – விஜயா நித்யா

(13) திரயோதசி – ஸர்வமங்களா நித்யா

(14) சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா

(15) பௌர்ணமி – சித்ராதேவி நித்யா


சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என கேட்டவுடன்.


தன் உள்ளே கண்ட அம்பாளின் பூர்ண முகத்தை பார்த்தால் சரபோஜி மன்னன் கேட்டவுடன் .


இன்று பௌர்ணமி திதி என்றார்.


அது அம்பாளுக்கும் பட்டருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.


நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கண்ணில் தெரிவததை தான் உண்மை என் நம்புவோம்.


அவர்கள் சித்த புருஷர்கள் அவர்கள் வணங்கிற அம்பாளே அவர்கள் அம்பாளே பூர்ணமாக நிறைந்து இருப்பாள்.


இதில் விளையாட்டு உள்ளது தனது பக்தன்/மகனின் பெருமையை உலகறியச் செய்ய இவ்வாறாக ஒரு திருவிளையாட்டை நடத்தினாள் என்பதே உண்மை.


அதனால் தான் வெள்ள பெருக்க எடுத்த நதிப் போல் எந்த இலக்கண பிழையில்லாமல். மடை திறந்த வெள்ளம் போல் பட்டருக்கு வார்த்தை வந்து என்பதே உண்மை.


அந்த பரவச நிலையில் அம்பாள் மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரிந்தாள்.


அவர் சூக்ஷ்மத்தில் கண்டத்தை அம்பாளிலே ஸ்துலத்தில் அனைவரும் காணும் படி தனது தாடங்கத்தில் எறிந்து அமாவாசை நிலவை பௌர்ணமி நிலவாக்கினாள்.


#ஓம்ஶ்ரீஅபிராமிதாயேநமஹ#.


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).