நாராயணியில் நாராயணன் அடக்கம்.
நாராயணியில் நாராயணன் அடக்கம்.
அவளே
சோட்டாணிகரை பகவதி என்பவள்
நாராயணன் நாராயணணி சொரூபம்.
அங்கு அம்பாளுக்கு மூன்று வித அலங்காரம்.
காலையில் சரஸ்வதி
மதியம் லெக்ஷ்மி
இரவில் பகவதி இதன் தாத்பர்யம் இவை அனைத்தும் நானே என்பதே
அதேபோல அவளே
விஷ்ணு துர்கா
விஷ்ணு மாயா.
ஆதனால் இந்த திருநாமம்.
கராங்குலி-நகோத்பன்ன-நாராயண-தசாக்ருத்யை.
இது எதை குறிக்கிறது.
ஜீவனும் ஈஸ்வரனும் சேர்ந்த வடிவம் நாராயணன்,
தசக்ருத என்பது மனிதனது
ஐந்து நிலைகளான
விழிப்பு,
உறக்கம்,
கனவு,
துரியம்
(முதல் மூன்று நிலைகளிலும் உணர்வுடன் இருத்தல்)
தூரியாதிதம்
(துரியத்திற்கு மேற்பட்ட நிலை,
இந்த நிலையில் இருமை அற்று உணர்வு பிரம்மத்துடன் கலக்கத் தொடங்கும்).
பிரம்மத்தின் ஐந்து தொழிகளன
ஆக்கல்,
காத்தல்,
அழித்தல்,
அருளல்,
மறைத்தல்
ஆகியன சேர்ந்து #தஸக்ருத# எனும் பத்தும் உருவாகின்றன.
இங்கு நாராயண என்பது
மஹாவிஷ்ணுவைக் குறிக்கவில்லை என்றே கருத வேண்டும்.
விஷ்ணு லலிதையின் சகோதரர், ஆகவே வாக்தேவிகள் இங்கு குறிப்பிடப்படும் ,
நாராயணன் வேறு விடயத்தினை குறிப்பதாக அமையவேண்டும்.
ஆகவே இதன் சரியான பொருள் மனிதனது ஐந்து உணர்வு நிலைகளும்,
பிரம்மத்தின் ஐந்து தொழில்களுமாக தனது பத்து நகங்களில் இருந்து உருவாக்கினாள் என்பதாகும்.
ஏற்கனவே தேவியின் பிரகாச
விமர்ச ரூபங்கள் விபரிக்கப் பட்டுள்ளது.
இந்த சகஸ்ர நாமத்தில் உள்ள ஒவ்வொரு நாமமும் இந்த இரண்டு ரூபத்தில் ஏதாவது ஒன்றைப்பற்றியே விவரிக்கின்றது.
துரியம் உணர்வின் நான்காவது நிலை,
இது மற்றைய விழிப்பு, உறக்கம், கனவு
ஆகிய மூன்று நிலைகளையும் ஒன்றாகச் சேர்த்த நிலை,
இந்த துரிய நிலை ஆன்மீக உணர்வு நிலை,
இது உளவியல் குறிப்பிடும் உணர்வு நிலையிலும் மாறுபட்டது.
இது தெய்வத்தினை சாட்சிபாவமாக உணர்ந்த நிலை.
துரியாதீத என்பது மனது துரியத்தினை கடந்த நிலை,
இந்த நிலையில் மனதின் பாகுபடுத்தும் தன்மை இழந்து பிரம்மத்துடன் ஒன்றும் நிலை ஆரம்பிக்கும்.
இந்த நிலையினை அடைந்தவருக்கும் முழுப்பிரபஞ்சமும் ஒன்றான பொருளாகா,அதீத ஆனந்தத்தில் நித்தமும் திளைத்திருப்பர்.
.

Comments
Post a Comment