பேரின்பம் Bliss
பகுதி 99.
பேரின்பம் Bliss
Getting valor,happiness and God's grace
உச்சகட்ட பேரின்பத்தை அடைதல்.
#லலிதாசஹஸ்ரநாமம்#
#பரோமோதா#
பரமேஸ்வரனின் சக்திக்குரிய ஒரு திருநாமம்.
இவள் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் மனதை உடையவள் என்று பொருள்படும்.
இது இவள் எல்லாவற்றையும் மீறிய நன்மைகளைத் தந்திடும் என்று பொருள்படும்.
#பசுபாஸ்விமோசிநீ#
பசு என்றால் ஆன்மா
பாஸ் குடும்ப சூழலில் சுழலும் இந்த ஆவி.
ஆவியாகிய ஆன்மாவை இந்த குடும்ப சகஹாரத்திலிருந்து முக்தியாகிய பேரின்பத்தைக் கொடுப்பவள்.
#சௌந்தயலஹரி#
பெரிய தேவி பிரமேஸ்வரி ஸ்ரீதேவி லலிதா மஹாத்ரிபுர சுந்தரி
(மன அமுத்ததை அனுபவிக்கும் அடியார்).
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்னோ விஹரதே ரதேஹ்
பதிவ்ரித்யம் ஷிதிலயாதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவன்னேவ க்ஷபதி பஷு பாஷ வ்யாதிகர
பரானந்தபிக்யம் ரஸயதி ரசம் த்வத்பஜனவான் ||
அம்மா!.
உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும் விஷ்ணுவும் கூட பொறாமை படக் கூடிய அளவில் கல்வியிலும் செல்வத்தியிலும் இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான்.
உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதிதேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதன் கலங்குகிறான்.
உன்பக்தன் சிரஞ்சீவியாக இருந்துக்கொண்டு பசு,பாச ஸம்பந்தங்கள் இலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸீகத்தை அனுபவிக்கிறான்.
பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணா கடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம்,செல்வம் , சௌந்தர்யம், ஆகிய மூன்றும் தாமகவே கிடைத்து விடுகிறது என்கிறார் பகவத்பாதாள்.
இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சீவியாக இருந்துக்கொண்டே பரலோக சௌக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம்.
பசு என்பது #ஜீவன்#, #பாசம்# என்பது மாயை,
அவித்யை பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது.
தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருது விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் #ஜ்யோதி#ஸ்வரூபத்தில்# மனதை லயிக்கச் செய்து ப்ரம்மா ஆனந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது..
இந்த நிலையே ஜீவன் முக்தி நிலை என்றழைக்கப்படும்.
ஶ்ரீதேவிக்கு மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன:
1. அறிவின் அதிபதியான மகா சரஸ்வதி ( ஞானம் ).
2. மகா லட்சுமி - செல்வம் மற்றும் ஆசைகளுடன் கூடிய பொருள் இன்பத்தின் ( போகம் ) ஆட்சியாளர் .
3. மகா காளி - விடுதலையை ( மோட்சம் ) ஆட்சி செய்பவர்.
இந்த வசனத்தின்படி, மனித வாழ்க்கையின் இலக்குகளை அடைய பக்தர்களுக்கு ஸ்ரீதேவியின் இந்த மூன்று அம்சங்களின் ஆதரவு கிடைக்கிறது
"சிரம் ஜீவன்னேவா" என்ற சொற்றொடரில் கவனம் செலுத்துங்கள்,
அதாவது "நித்தியமாக வாழ்கிறேன்". ஸ்ரீதேவியின் பக்தர் மகத்தான அறிவைப் பெறுகிறார், பொருள் செழிப்பை அனுபவிக்கிறார்,
தனது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுகிறார்,
இறுதியாக ஸ்ரீதேவியாக இருக்கும் இறுதி யதார்த்தத்தின் பேரின்பத்துடன் இணைகிறார். இவை அனைத்தும் பூமியில் வாழும் போது நிகழ்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,
பக்தர் ஜீவன்-முக்த நிலையை அடைகிறார், அதாவது வாழும்போதே விடுதலை பெற்றவர்
.
அழகான உடலைக் கொண்ட ரம்யேன வபுஷா என்ற சொற்றொடர் , பக்தர் ஆரோக்கியமான உடலை அழகுடன் வளப்படுத்துகிறார் என்பதைக் குறிக்கிறது. இந்த அர்த்தத்தின் நிழலை நாம் எவ்வாறு பெறுவது? அதை எதிர்கொள்வோம். ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் எவ்வளவு அழகாக இருந்தாலும் யாரும் அவரை ஈர்க்க முடியாது. சரியா? மேலும், அந்த நபர் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், அவர் நீண்ட காலம் வாழ்ந்து பேரின்பத்தை அனுபவிக்க முடியாது!
#அபிராமிஅந்தாதி#
சுந்தரி எந்தை துணைவி
சுந்தரி எந்தை துணைவி
என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன்
தலைமேல் அந்தரி நீலி அழியாத கன்னிகை
ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
சுந்தரி - அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி - என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி -
என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் -
சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி -
அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி -
நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை -
இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் -
வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே -
உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.
அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே. சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே. அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே. நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே. உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.

Comments
Post a Comment