பகுதி 2 அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?

பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல்

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?


:

 தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி-2.

இவர்களைப் போலவேதான் நம் ஆதிசங்கர பகவத் பாதாளும். அவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய அவதாரம் இதுவரைக்கும் ஆவிர்பவித்தது உண்டா என்று தோன்றுகிறது.

#பரமேசுவராவதாரமானஆசார்யாள்#

சொற்ப காலமே இந்த பூமியில் வாழ்ந்த போதிலும், லோகம் முழுக்கச் சேர்ந்தாலும், செய்ய முடியாத காரியங்களைச் சாதித்துவிட்டார்.

ஆசேது ஹிமாசலம் சஞ்சாரம் பண்ணித் தனியொரு மநுஷ்யராக இருந்துகொண்டு வைதிக மதத்தைப் புனர் உத்தாரணம் பண்ணினார்.

அத்வைத ஸ்தாபனம், ஷண்மத ஸ்தாபனம் எல்லாம் பண்ணினார். ஞானியாக, பக்தராக, கவியாக, மகாபுத்திமானாக, ஏகப்பட்ட காரியம் சாதிக்கிற சக்திமானாக, பரம கருணாமூர்த்தியாக – இப்படி எல்லாமாகவும் இருந்திருக்கிறார்.

அவருடைய பாதபங்கஜத்தில் சகல ஞானிகளின் சிரசுகளும் வண்டுகள் மாதிரி மொய்த்துக்கொண்டு கிடந்தன என்று கம்போடியா தேசத்தில் உள்ள எண்ணூறு வருஷங்களுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு அழகான ஸம்ஸ்கிருதத்தில் சொல்கிறது.

நிச்சேஷ மூர்த்தாலி மாலா லீடாங்க்ரி பங்கஜாத்

“பகவான்” என்றே அவரை அக்கல்வெட்டு சொல்கிறது.

அப்படிப்பட்டவர் அம்பாளிடம் எத்தனை அடக்கத்துடன் பக்தி செலுத்தினார் என்பது 

#ஸெளந்தர்யலஹரி#யின் கடைசி ஸ்லோகத்திலிருந்து தெரிகிறது.

‘ஸெளந்தர்ய லஹரி’ போல் ஒரு கிரந்தத்தைச் செய்கிறவருக்கு எத்தனை அஹம்பாவம் வேண்டுமானாலும் ஏற்படுவதற்கு நியாயமுண்டு. 

பூலோகம் ஏற்பட்ட நாளாக இதற்கு முந்தியோ, 

பிந்தியோ இவ்வளவு பூரணமான ஸெளந்தர்யம் உள்ள வாக்கு தோன்றியதும் இல்லை.

இனி தோன்றப்போவதுமில்லை என்று சொல்லும்படி, எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அழகு வாய்ந்ததாக இருப்பது#ஸெளந்தர்ய லஹரி#.

இப்படிப்பட்ட கிரந்தத்தைச் செய்த 

நம் ஆசாரியாளுக்கோ தாம் அதை பண்ணினோம் என்ற அகங்காரம் எள்ளளவும் இல்லை.

ஸ்தோத்திரத்தைப் பூர்த்தி செய்து #அம்பாளின்சரணகமல#த்தில் அர்ப்பணம் பண்ணுகிற நூறாவது சுலோகத்தில் மிகவும் விநயமாகச் சொல்கிறார்.

 (ப்ரதீப ஜ்வாலாபி: 

என்று தொடங்கும் ஸ்லோகம்)

அம்மா, வாக்கு ஸ்வரூபிணியான உன்னை வாக்கினால் துதிக்கிறேனே, இது எப்படி இருக்கிறது? 

சூரியனுக்கு கர்ப்பூர ஹாரத்தி காட்டுகிற மாதிரித்தான் இருக்கிறது” என்று ஆரம்பிக்கிறார். 

சூரிய தேஜஸ் எங்கே?

கர்ப்பூரத்தின் அற்ப ஒளி எங்கே! சூரியனால்தான் கர்ப்பூரத்துக்கு எரிகிற சக்தியே உண்டாகிறது. 

நாலு நாள் வெயில் அடிக்காவிட்டால் கர்ப்பூரம் லேசில் பிடித்துக் கொள்வதில்லை.

ஸங்க்ராந்தியன்று சூரிய பூஜை செய்து, 

அந்த தேஜோமயத்துக்குக் கர்ப்பூரம் காட்டுகிறோமே. 

அதனால் சூரியனையா விளக்கிக் காட்டுகிறோம்? 

சூரிய ஒளியில் கர்ப்பூரத்தின் ஸ்வாபமான பிரகாசம்கூடத் தெரியாமல் அது மங்கிப் போவதைத்தான் பார்க்கிறோம். 

அம்பாளைத் தான் வாக்கால் வர்ணிக்கப் பார்த்தது அப்படிப்பட்ட காரியம்தான் என்கிறார் 

ஸ்ரீ ஆசார்யாள்.

இன்னோர் உதாரணம் சொல்கிறார்:

 “சந்திர காந்தக்கல்லானது சந்திரனுக்கு அர்க்கிய ஜலம் விடுகிற மாதிரி உன்னை இந்த வாக்கால் துதிக்கிறேன்” என்கிறார். 

சந்திர காந்தக்கல் என்பது பூர்ணிமை சந்திரன் உதிக்கிற சமயத்தில் அந்த நிலவை உள்ளே வாங்கிக்கொண்டு ஜலமாகக் கக்கும் என்பார்கள்.

வாஸ்தவத்தில் இப்படி ஒன்று உண்டோ இல்லையோ கவிகள் சம்பிரதாயமாக 

(poetic tradition) இதைப் பற்றிச் சொல்லி வருகிறார்கள். 

இப்படிப்பட்ட சந்திரகாந்தக் கல் சந்திரனைப் பூஜை செய்கிறேன் என்று ஆரம்பித்து, பதினாறு உபசாரங்களில் ஒன்றாக ‘அர்க்கியம் சமர்ப்பயாமி’ என்று நீர் வார்க்கிறபோது, நிலவின் சக்தியிலேயே பிறந்த ஜலத்தை அர்க்கியமாக வடித்தால் எப்படி இருக்கும்? 

அம்பாளின் அநுக்கிரகமே தமக்குள் பிரவேசித்து இந்த வாக்கை வடித்திருக்கிறது என்று ஆசார்யாள் இங்கே சொல்லாமல் சொல்கிறார்.

#ஓம்சங்கரபாதாள்பாதரவிந்தசரணம்#.

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).