மஹாப்ரளய சாக்ஷிணீ =
நேற்றைய பதிவில் பட்டரின் அபிராமி அந்தாதி 56பாடலில்.
ஒன்றா அரும்பி பலவாய் விரிந்து.
இங்கு எது ஒன்றாய் அரும்பியது
அதுவே பரபிரம்மம் .
அதுவே சாக்தத்தின் படி சக்தி சொரூபம்.
அதுவே ஆதிபராசக்தி.
பரபிரம்மத்தின் சக்தி வெளிபாடே ஆதிசக்தி.
அது சக்தி சொரூபமே
இதற்கு மூலம்
காமேஸ்வரன் காமேஸ்வரி இணைவே
இது எதற்காக லோக சிருஷ்டிகாக.
சிருஷ்டி இல்லையென்றால் உலகில் எதுவும் இல்லை.
இதைதான் சங்கரபகவத் பாதாள்
அமிர்தம் சாப்பிட பிரம்மன் /விஷ்ணு/தேவேந்திரன் முதலானோர் ப்ரயள காலத்தில் ஒன்றம் இல்லாமல் போனார்கள்.
ஆனால் ஆலகால விஷத்தை சாப்பிட ருத்ரன் மட்டும் எவ்வாறு உன்னோட இருந்தார் என்ற கேள்வியை எழுப்பி இருப்பார்
இதை தான் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமம்
மஹாப்ரளய சாக்ஷிணீ =
பிரபஞ்சத்தின் ஒடுக்கத்தை காணும் சாக்ஷியாக
(ஒரே சாக்ஷியாக) விளங்குபவள் *
ப்ரயளக்காலத்தில் ருத்ரன் ஆடும் ருத்ரதாண்டவத்திற்கு சாக்ஷியாக அம்பாள் விளங்குகிறாள்.
ச்ருஷ்டி போது இருவர் மட்டும் உள்ளனர் .
அதே போல் ப்ரளய காலத்தில் இருவர் மட்டும் உள்ளனர்.
எனவே அதுவே ஆரம்பம் அதுவே முடிவும் கூட.
பிரபஞ்சத்தின் துவக்கமும் ஒடுக்கமும் நியதிப்படி மாறி மாறி நிகழும் நிகழ்வுகள்.
ஒடுக்கத்தின் போது மும்மூர்த்திகள் அந்த பரபிரம்மத்தில் ஒடுங்கிறார்கள்.
இதை தான் பட்டர்
ஒன்றான பரபிரம்மாகிய சக்தி பலவாய் விரிக்கிறது.
எவ்வாறு விரிகிறது
அது ஸ்ருஷ்டி/ஸ்தி/ஸம்ஹார நிகழ்வுகாக.
கடைசியில் எங்கிருந்து விரிந்ததோ அங்கேயே ஒடுங்கிறது .
(பிரம்மா விஷ்ணு மஹேஸ்வரன்) ,
காலம்,கர்மா உட்பட அனைத்தும்,
ஒடுங்கி ப்ரபஞ்சப் பேராற்றலான பரப்பரம்மத்தில் இரண்டற கலந்து விடுகின்றன
#மாயா# எனும் பிரக்ருதியாளவள் மட்டுமே.
இப்பிரளயத்தை காணும் ஒரே சாக்ஷி.
மகா பிரளய அக்கினி:
சாக்க்ஷி அதுவே அக்கினி
இது
"மகா பிரளயம்" (பேரழிவின் காலம்)
மற்றும்
"அக்கினி" (நெருப்பு)
ஆகிய சொற்களின் சேர்க்கை.
ஆக்கமும் அவளே அவளே அழிபாபவளை
இதைத்தான் லலிதாம்பிகையின் தன்மையைக் குறிக்கிறது.

Comments
Post a Comment