இந்த வருட நவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த வருட நவராத்திரி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
காரணம் இது நாள் வரை ஶ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் திருவரு படத்திற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்ய வைத்த அம்பாள்.
இந்த வருடம் ஶ்ரீமஹாமேரு மற்றும்
ஶ்ரீ சக்கர அதாவது தேவிகட்கமாலா ஸ்லோகத்தில் கூறியது போல ஒவ்வொரு ஆவாவரணத்திலும் உரிய தேவதைகள் அடங்கிய திருவுருவ படத்திற்கு ஶ்ரீலலிதா சஹஸ்ர நாமத்தை பாராயணம் செய்யும் பாக்யத்தைக் கொடுத்தாள்.
மேலும் நாம் செய்த பாராயணத்தை ஏற்றுக்கொண்டால் என்பதற்கு உதாரணமாக பல சுமங்கலி பெண்கள் தாம்பூலம் பெற்றுக் கொண்டனர்.
அதில் மிகமுக்யம் ஒரு சுமங்கலி வெள்ளியன்று மாமி தாம்பூலம் கொடுக்கங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்
நம்ம வீட்டிற்கு நீங்கள் கூப்பிட்டா வரவேண்டும்.
எனக்கு வரவேண்டும் என தோன்றியது அதனால் நான் வந்தேன் என்ற பதில் வந்தது.
தினமும் குங்குமத்தால் சஹஸ்ரநாம பாராயணம் செய்ய வைத்தவள்.
நேற்று செவ்வாயன்று மாதுளை மொட்டால் அர்ச்சனை செய்ய வைத்தாள்.
அதை தான் அவள் ஏற்று கொண்டால் என்பதற்கு உதாரணம்.
மாதுளை மொட்டை எனது மனைவியிடம் காட்டிய போது.
அதை அவள் பிரசாதம் எண்ணி வாயில் போட்டுக்கொண்டாள்.
அங்கு அதை எனது மனைவி ஸ்வீகரித்தால் என எண்ணவில்லை.
மாறாக அம்பாளே சுமங்கலி ரூபமாக அதை ஏற்றுக்கொண்டால் ஒரு திருப்தி.
எல்லாம் நமது எண்ணத்தின் பிரதிபலிக்காக அமைக்கிறது.
இதை அனுபவிவத்தற்கு இதன் தாத்பர்யம் புரியும்.
மற்றவர்களுக்கு இது சாதாரண நிகழ்வாகவே தெரியும்.
வருடவருடம் சரஸ்வதி பூஜை அன்று மஹாசண்டி ஹோமம் நடக்கு அதே மாதிரி எண்ணி நேற்று மாலையில் கல்லிக்குப்பம் ஶ்ரீயோகமாஹா புவனேஸ்வரி பீடத்திற்குச் சென்றால், திதி துவயம் என்பதால் நேற்றே மஹாசண்டி ஹோமம் முடிந்தது விட்டு.
ஆனால் சந்நிதியை நோக்கி நுழையும்போது ஶ்ரீபுவனேஸ்வரிக்கு அலங்காரம் ஆகி ஶ்ரீலலிதாசஹஸ்ர நாம பாராயணம் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது.
மேலும் ஶ்ரீபாரத்வாஜ ஸ்வாமிகளின் ஆசீர்வாதம் மற்றும் பிரசாதம்.
எல்லாம் அம்பாளின் செயல் எதற்கு நம்மை கூப்பிடுக்கிறாள் அது அவளுக்கே வெளிச்சம்.
நாம் அம்பாளின் பாதத்தை இறுக்க பற்றிக்கொள்ள வேண்டும்.
மற்றவற்றை அவள் பார்த்துக் கொள்வாள்.
இவை அனைத்தும் எண்ணில் ஏற்பட்ட உணர்வு அதை பதிவாக பகிர்க்கிறேன்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.

Comments
Post a Comment