நான்எனும்அகங்காரம்எப்போதுநம்மில்அடங்கும்
#நான்எனும்அகங்காரம்எப்போதுநம்மில்அடங்கும்
.
நான் என்ற எண்ணம் எப்போது
நம் மனதில் எழும்?.
எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம் இருக்கும் போது.
அல்லது
கைநிறைய பணம் இருந்து,
அதை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் இருக்கும் போது.
நம்மில் அகங்காரம் எழும்.
#மஹான்களுக்கு#இருக்கிற# #எண்ணம்#
அவர்களுக்கு #நான்யார்என்கின்ற கேள்வி எழும்?.
இரமணருக்கு எழுந்த கேள்வி இதுவே.
நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் .
அவர்கள் நம்மால் ஒன்றும் நடப்பத்தில்லை .
நமக்கு மேல் உள்ள #சக்தி#நம்மை இயக்கிறது எண்ணம் அவள்களிடம் உள்ளது.
அதனால் அவர்களுக்கு அவ்வாறு கேள்வி எழுக்கிறது.
ஆனால் நாம் நம்மால் தான் எல்லாம் நடக்கிற என்ற எண்ணத்தால், அதனால் நமக்கு அகங்காரம் தலைக்கு ஏறிக்கிறது.
இவை அனைத்தும் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்.
எனக்கு எப்போது தெளிவு வந்தது.
முன்பே குறிப்பிட்டது போல் 2018ல் வாழ்க்கையில் ஒரு சரிவு.
அப்போது ஆன்மீகத்தை நோக்கிய பயணம்.
அந்த ஆன்மீக பயணத்தில் உட்பட்டபோது இந்த தெளிவு வந்தது.
இதை தான் மஹான்கள் உன்னில் ஆன்மீகம் வந்ததால் அதை நீ உணர்ந்தால்.நான் எதற்கும் காரணம் இல்லை,நான் ஒரு கருவி என்னை இயக்குப்பவன் #அவன் என்ற எண்ணம் மேல் எழும்.
அதுவே #ஆன்மீகத்தில்#ஞானத்தைப் #பெறுதல்#.
அப்போது இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் எண்ணம் வரும்.
இந்த எண்ணம் நம்மில் வந்தால் பகவானிடம் எனக்கு துன்பத்தை கொடுக்காதே என்பதற்கு பதிலாக அதை தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடு என்ற எண்ணம் வரும்.
இந்த ஞானம் நம்மில் அவ்வளவு சீக்கிரம் வராது.
பல துன்பங்களை அனுபவிக்கும் போது படிபடியாக நம்மில் பக்குவம் வரும்.
அதுவே ஆன்மீகத்தில் ஞானத்தை பெறுத்தலாகும்.
இந்த ஞானத்தை பெறுவதற்கு கெட்ட கர்மா கழிந்து நல்ல கர்மா ஆரம்பிக்க வேண்டும்.
அதற்கு நாம் எண்ணில்லா துன்பத்தை அனுபவிக்க வேண்டும்.
பழிகள்,அவமானங்கள்,கேட்க கூடாது வார்த்தைகள் போன்றவற்றை நாம் கடந்து வரவேண்டும்.
அதன் பிறகு கடவுள் அனுகிரஹத்தால் இது சாத்தியம்.
#இதுவேவாழ்க்கையின்தாத்பர்யம்.
இது அனுபவித்தவர்களுக்கு இந்த பதிவானது ,
அவர்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை அசைப்போடுவதற்கு
ஒரு சந்தர்ப்பமாக அமையும் என எண்ணுக்கிறேன்.
இவை அனைத்தும் எனது ஜோதிட நண்பர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் மூலமாக அவர்களது அனுபவத்தின் மூலமாக நான் அறிந்தது.
காரணம் அவர்கள் பலதரப்பட்ட மக்களுடன் பயணிக்கும் போது அவர்கள் மூலம் அனுபவம் பெற்றவர்கள் என்பதால் அதை அவர்கள் மூலம் என்னால் உணரமுடிந்தது
அந்த அனுபவங்களே இந்த பதிவு.
எனவே நம்மில் நான் அகங்காரம் அடங்கி.
நம்மால் ஒன்றும் இல்லை.
நாம் ஒரு கருவி, என்ற எண்ணத்திற்கு நமது சிந்தனை நமது மனது மாறவேண்டும்.
அப்போது நாம் என்ற அகங்காரம் நம்மில் அடங்கும்
சகலும் அவளே அதில் நான் ஒரு கருவி என்ற எண்ணம் மேல் எழும்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#.

Comments
Post a Comment