பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..?
இந்தமஹாகவிஞனை,
#தெய்வீகசிந்தனையாளனை…
பெரியவா எப்படி தடுத்து ஆட்கொண்டார்..?
என்பதை நாளைய பதிவாக காணலாம்.
பரம முருக பக்தரான, ஸாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாஸனும், ஒரு படப்பிடிப்பு ஸம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது பயங்கரமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாஸனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்து, ரொம்ப ஸீரியஸ்ஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
பெரியவாளிடம் மிகுந்த பக்தியும் மர்யாதையும் கொண்ட தேவர்,
ஶிவாஸ்தானம் எனப்படும் ப்ரஹ்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த பெரியவாளை தர்ஶனம் செய்தார்…
” ஸாமி….! ஷூட்டிங் முடிஞ்சு வரப்போ…. பெரிய ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு….” என்று சொன்னவுடனேயே,
பெரியவா கேட்ட கேள்வி……..
” கண்ணதாஸன் எப்டியிருக்கான்?’
அதிர்ந்து போனார் தேவர்!
கண்கள் கலங்க, வியப்பும் வருத்தமுமாய்…நா தழுதழுக்கக் கூறினார்.
“அவர் ஏகப்பட்ட காயத்தோட.. ஆஸ்பத்ரில இருக்காரு.
இன்னும் நெனைவு வரல”
தேவரைக் கனிவோடு பார்த்தார் பெரியவா…
‘ஸெரி …கவலைப்படாத!
இந்தா… இந்த விபூதிய…. எடுத்துண்டுபோயி..
அவன் நெத்தில இட்டுட்டு, வாய்லயும் கொஞ்சம் போடு! மிச்சம் இருக்கறதை,
அப்டியே பொட்லமா… அவனோட தலகாணிக்கு கீழ.. வெச்சுடு”
ஊமையாக பிறந்த ஶ்ரீமூக கவிக்கு, தன் கனிவாயில் சுவைத்துக் கொண்டிருந்த தாம்பூலத்தை அனுக்ரஹித்து, அவர் நாவிலிருந்து,
அருமையான
“ஆர்யா ஶதகத்தை” வர்ஷிக்க வைத்தவளாயிற்றே, நம் அம்பிகை!
‘ஹிந்துமத தர்மத்தை அழகாகச் சொல்ல, கண்ணதாஸன்…
இனிதான் வாஸ்தவத்தில் பேசப் போகிறான்!’…என்று சொல்லாமல் சொல்லி, காப்பாற்ற மட்டுமே தெரிந்த தன் திருக்கரங்களால் “உச்சிஷ்ட தாம்பூலமாக” விபூதியை அள்ளி ஒரு தட்டில் போட்டு, அதை..தேவர் பக்கம் நகர்த்தினார்.
ஆம்! ஸத்யம், தர்மம், இனிய சொல்….இவற்றைத் தவிர, நாம் வேறு எத்தனைதான் வார்த்தை ஜாலங்கள் செய்து, பேசு பேசென்று வாய் கிழியப் பேசினாலும், நாமெல்லாருமே ஊமைகள்தான்!
தேவர் உண்மையில் ஆடிப்போய் விட்டார்!
“விபூதியா?…’பகுத்தறிவு’ பேசும் கண்ணதாஸனுக்கா?..”
தன் பயத்தை வெளியில் சொல்லவும் முடியாமல், பெரியவாளை மறுத்துப் பேசவும் துணிவில்லாமல், தயங்கினார்.
விட்டுவிடுவாரா? ஆட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதே!
பெரியவா மறுபடி தட்டை பார்த்ததும், ரொம்பத் தயக்கத்தோடு விபூதியை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொண்டார்.
பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, மனஸுக்குள் உதறலெடுக்க, ப்ரார்த்தனை செய்து கொண்டார்.
அவருடைய பயத்துக்கு காரணம்… அப்போது கண்ணதாஸன், நாஸ்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு,
த்ராவிடக் கட்சிகளின் ஸார்பாக, ப்ராஹ்மணர்களையும், நம்முடைய ஸனாதன தர்மத்தையும்,
ஏன்? கருணைக்கடலான பெரியவாளைப் பற்றியுமே….
நாக்கில் நரம்பில்லாமல், கீழ்த்தரமாக விமர்ஸனம் செய்து, மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது!
அரசியலை முன் வைத்து, உள்ளிருக்கும் சாக்கடையை மடை திறந்த வெள்ளமாக ஓட விட்ட, த்ராவிடப் போர்வை போர்த்திய கட்சிகள்,
“ஸங்கத்தமிழ், செம்மொழியின் நாகரிக”த்துக்கு ஒரு மோசமான, அவமானகரமான எடுத்துக்காட்டாக விளங்க ஆரம்பித்த நேரம் அது.
இன்றும் அவர்கள் மாறவில்லை! தமிழின் மானத்தை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாஸனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்து, ரொம்ப ஸீரியஸ்ஸான நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.
பெரியவா மறுபடி தட்டை பார்த்ததும், ரொம்பத் தயக்கத்தோடு விபூதியை எடுத்துப் பொட்டலம் கட்டிக் கொண்டார்.
பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு, மனஸுக்குள் உதறலெடுக்க, ப்ரார்த்தனை செய்து கொண்டார்.
இந்த பயங்கரமான விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான்,
கண்ணதாஸன் காஞ்சியில், அதுவும் நம் ஶங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில்,
நம் பெரியவாளையும், ஆதி ஆச்சார்யாளையும் இழிவுபடுத்தி படுபயங்கரமாகவும், மஹா மட்டமாகவும்பேசியிருந்தார்!
எனவே அவரிடம் போய், இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது? என்பதுதான் தேவரின் பெரிய தயக்கமாயிருந்தது.
ஆனால் பெரியவாளுக்கு தெரியாததா?
தேவரின் தயக்கத்தை கண்டு, சிரித்துக் கொண்டே,
“ஸூர்யனை செலப்போ மேகம் மறைக்கறாப்ல,
கண்ணதாஸனை….
நாஸ்திகம்-ங்கற மேகம் மறைச்சிருந்துது!
இனிமே…
அவன் ஸூர்யனா ஜொலிப்பான்! …”
“பெரியவங்க சொன்னா….ஸரிங்க!…”
“அவன்.. எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேந்தவன் தெரியுமோ?
கோவில் திருப்பணி செய்யறதுக்குன்னே பொறந்தவாதான்…
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில்ல… கோபுரத் திருப்பணியைச் செஞ்சவர் யாருன்னு நெனைக்கற?…”
“பெரியவங்கதான் சொல்லணும்..”
“கண்ணதாஸனோட கொள்ளுத் தாத்தா!
அப்றம்…. நம்ம ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செஞ்சவர்,
கண்ணதாஸனோட தாத்தா!
காமாக்ஷி கோவில் திருப்பணியை செஞ்சவர்,
அவனோட தகப்பனார்.!
இப்ப புரியறதா?”
தேவர் ஸந்தோஷமாக பெரியவாளை நமஸ்கரித்து,
நேராக ஆஸ்பத்ரிக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாஸனின் நெற்றியில் விபூதியைப் பூசி,
கொஞ்சம் விபூதியை வாயிலும் போட்டு விட்டு, மீதியை,
தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
ஆனாலும், அவர் கவலைப்பட்டார்! கண்ணதாஸன் நினைவு திரும்பி, நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ… என்று…!
மறுநாள், தேவர்…. மருத்துவமனை சென்று கண்ணதாஸனின் அறைக்குள் லேஸாக படபடக்கும் நெஞ்சோடு நுழைந்த போது,
கண்ணதாஸனுக்கு நினைவு திரும்பியிருந்தது.!
நேற்று மாலை வரை,
கிழிந்த நார் போலக் கிடந்தவர், தேவரைப் பார்த்தவுடன்,
உற்சாகமாக வரவேற்றார்!….
‘வாங்க! வாங்க!
ஆமா… எத்தன நாளா…. இப்பிடி படுக்கையில… கெடக்கேன்? ”
தேவருக்கு ஆஶ்சர்யம் தாங்க முடியவில்லை!
“கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் குடுங்களேன்….
நா… எப்டி இருக்கேன்னு.. பார்க்கணும்’
“ஒனக்கென்னையா? ஶிவப்பழமா…. என் தண்டபாணி மாதிரி இருக்கே!..” ன்னு தேவரால் சொல்ல முடியுமா?
தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில், தன்னைக் கண்ட கண்ணதாஸன்,
இனிமேல்தான், உண்மையில் ‘தன்னை’ காணப் போகிறார்!
நேற்று, பெரியவா அனுக்ரஹித்த விபூதி, இன்னமும் நெற்றியில் பளிச்சென்று இருக்க,
ஆஶ்சர்யத்தோடு,
‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க,
வேறு வழியின்றி வருவது வரட்டுமென்று தேவர்,
நிஜத்தை சொல்லிவிட்டார்.
“ஆமா…. ஒங்களுக்கு நல்லா ஆகணுன்னு….காஞ்சிபுரம் போயி….
பெரியவங்ககிட்ட வேண்டிக்கிட்டேன்!
ஒங்க அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா…
இவுகல்லாம்… பண்ணின திருப்பணி எல்லாத்தயும் சொல்லி…
ரொம்ப பாராட்டினாரு!
அவரு தந்த விபூதினாலதான்…. இன்னிக்கி, நீங்க.. நல்லா…ஆய்ட்டீங்க!….”
தேவர் சொல்லச் சொல்ல….
அவர் பயந்ததற்கு மாறாக, கண்ணதாஸனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர்!
திகைத்து நின்ற தேவரின் செவிகளில்,
தேனாகப் பாய்ந்தது கண்ணதாஸனின் வார்த்தைகள்…
‘என்னது?….
பெரியவரா! எனக்கா?
எம்மேலயா இவ்வளவு கருணை?
எப்பேர்ப்பட்ட பாவி நான்?
போனவாரந்தானே… அவரை…. வாய்ல வரக்கூடாத வார்தைகளால…… ஐயோ !…
எனக்கே என்னை பாக்க அசிங்கமா இருக்கே… தேவரே!”
வாய்விட்டுப் புலம்பி அழுதபோது, அத்தனை நாள் உள்ளே மறைந்திருந்த
"முன்னோர் செய்த தவப்பயன், தர்மம்”
கண்ணதாஸனின் உதவிக்கு ஓடோடி வந்தன!
‘தேவரே!… எனக்கு ஒடம்பு ஸரியாகி, ஆஸ்பத்ரியிலேருந்து டிஸ்சார்ஜ் ஆனதும், நா…. நேரா வீட்டுக்கு போக மாட்டேன்.
இந்தப் பாவி மேலேயும் கூட, கருணை காட்டினஅந்த தெய்வத்துக்கிட்ட மொதல்ல என்னை தயவு செஞ்சு அழைச்சுகிட்டு போங்க’…
நாஸ்திகம் பேசிப் பேசி நாறிக் கொண்டிருந்த மனம்,
ஸத்யமான துறவின், க்ஷணமாத்ர கருணையால் மாறியது!
நன்றியில் ஊறியது !
உடன் வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
உடல்நிலை தேறியதும், நேராக முதலில் பெரியவாளை நேரில் தர்ஶனம் செய்தபோது,
கண்ணீர் பெருகியது!
அந்தக் கவிதையை ஸமர்ப்பித்தார்.
“பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற தீர்த்தப் பெருக்கு,
திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்டதெய்வம்
எம்மதத்தோரும் ஸம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!…”
கவிதை வரிகளைக் கேட்ட பெரியவா, கண்ணதாஸனைக் கனிவோடு நோக்கினார்…
“அனந்தகோடி அற்புத லீலா
ஸாகித்ய மாயமானுஷாயநமோ நமஹ;
அர்த்தநாரி…..
இது…. திருவண்ணாமலேல… ஶேஷாத்ரி ஸ்வாமிகளுக்குன்னா பொருந்தும்!”
அழகாகச் சிரித்தார். அதோடு பாரதக்கண்ணனாகி,
தன்னுடைய தாஸனுக்கு இந்துமதமே பாராட்டும்படியான ஒரு அற்புதமான தொண்டினை கொடுத்தார்…..
“அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானஸூர்யனான, ஸனாதன மதத்தின் பெருமையை எழுது’
தெய்வமே திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாஸனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.
நாம்,
நம்முடைய நல்ல எண்ணங்களால் தோன்றும், நல்ல கார்யங்களை,
புண்ய கர்மாக்களைப் பண்ணிக் கொண்டே இருந்தால், விதி வஸத்தால்,
நாம் பாதை மாறினாலும்,
பகவான் ஏதோ வகையில் நம்மை நம் போக்கில் விடாமல் தடுத்து,
நம் ஸந்ததியையே, ஸுந்தரமூர்த்தி நாயனாரை ஆட்கொண்டது போல் தனக்கே தனக்கென ஆட்கொண்டு விடுவான் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.
ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Comments
Post a Comment