நவராத்தியில் வழிபடும் மற்ற ஐந்து துர்கைகள்.

 நவராத்தியில் வழிபடும் மற்ற ஐந்து துர்கைகள்.


05.#ஸ்கந்தமாதா (Skandamata) (சமசுகிருதம்:स्कन्दमाता) 


ஸ்கந்தன் எனும் கார்த்திகேயனின்தாயும், பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் #ஐந்தாமவர்.


நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் பக்தர்களால் ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார்.


06.#காத்யாயனி (Katyayani) 


என்பது இந்து மதத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின் போது #ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் வடிவமாகும். 


காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படலாம். 


இது அமரகோசம் என்ற சமஸ்கிருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் ஆகும். 


இந்த அகராதியில் தேவி பார்வதியின் மற்ற பெயர்களாக 


#உமா#காத்யாயனி#கவுரி#காளி##ஹைமாவதி#ஈஸ்வரி# போன்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


புராணங்களில் சீதா தேவியார் மற்றும் ருக்மணி ஆகியோரால் தங்களின் கணவரின் நலனுக்காக வேண்டப்பட்ட பெண் தெய்வமாக காத்யாயனி இருக்கிறார்.


06.#காளராத்திரி (Kalaratri) (சமசுகிருதம்:कालरात्रि) 


பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் ஒருவர். இத்தாய் தெய்வத்தைப் பற்றி தேவி மகாத்மியம் எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.


 இந்நூல் காளராத்திரி தேவியை மிகவும் பயங்கரத் தோற்றம் கொண்டவள் எனக்கூறுகிறது.


காளியும், காளராத்திரி தேவியும் ஒருவரே என்றும் கருதுவர்.


சில நேர்ங்களில் காளி மற்றும் காளராத்திரி தேவி வேறு வேறானர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது


08.#மகாகௌரி 


என்பவள் துர்க்கையின் எட்டாவது அவதாரம் மற்றும் நவதுர்க்கைகளில் ஒருத்தியாவாள் .


நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி வழிபடப்படுகிறாள். இந்து மதத்தின் படி, மகாகௌரி தேவி தனது பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி கொண்டவர்.


08.#சித்திதாத்ரி 


என்பது இந்து மதத்தில் வழிபடப்படும் துர்கா தேவியின்#ஓன்பதாவது# வடிவம் ஆகும் அவரது பெயரின் பொருள் பின்வருமாறு:


சித்தி என்றால் அமானுஷ்ய சக்தி அல்லது தியானத் திறன், தாத்ரி என்றால் கொடுப்பவர் என்று பொருள். 


நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சித்திதாத்ரி வணங்கப்படுகிறாள்.


அவள் எல்லா தெய்வீக விருப்பங்களையும் பூர்த்தி செய்து, இவ்வுல வாழ்க்கையை நிறைவு செய்கிறாள்.


#ஓம்மாத்ரேநமஹ


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).