செங்கனூர் மஹாதேவர் மற்றும் பகவதியும்

 கடந்த இரு தினங்களாக செங்கனூர் பகவதி பற்றிய பதிவு.

ஏனென்றால் எத்தனை பேருக்கு இந்த கோவில்  தெரியும் என்று தெரியவில்லை.


ஆனால் சபரிமலை செல்பவர்கள் இங்கு இறங்கி தான் பம்பைக்குச் செல்வர்.


அம்பாள் எங்களுக்கு அடிமை காவு தெய்வம் என்றாலும். 


எனது அப்பாவுக்கு அது பற்றி எதுவும் தெரியவில்லை. 


ஆனால் எனது ஜாகத்தை கணித்த வள்ளுவன்.


அவர்கள் எங்கள் ஊர்ப் பக்கம் மிகவும் பிரசித்திப் பெற்றவர்கள் ஜாதகம் கணிப்பத்தில் கைதேறியவர்கள்.


அவ்வாறு எனது ஜாதகத்தை கணித்த போது, அவர் சொன்னது எனது ஜாதகத்தில் ஒரு பெண்தெய்வம் தெரிக்கிறது என்று. 


எனது அம்மாவின் முயற்சியில் அவர்களுக்கு தெரிந்த ஜோசியரிடம் சோழிப் பிரசன்னம் போட்டுப்பார்த்த போது தெரியவந்தது அம்பாள் சிறிய உருவமாக செங்கனூர் பக்கம் இருக்கிறாள் என்ற தெரிய வந்தது.


எனது முறையாவது அம்பாளை தரிசிக்க வேண்டும் என்று செங்கனூர் நோக்கி பயணம் 2004-2005 வாக்கில்.


செங்கனூர் சென்று அங்கு ஒரு தங்கும் அறை எடுத்து குளித்துவிட்டு செல்லாம் என்ற எண்ணம்.


அம்பாள் கோவில் எங்கு என இருக்கிறது என்று  விசாரித்தால் அது செங்கனூரில் இருந்து 12கிமீ தொலைவில் இருக்கிற என்று கூறிக்கிறார். 


அம்பாளைப்பற்றி விசாரித்த போது அம்பாள் நன்கு உயரமாக இருப்பாள் என பதில் வந்தது. 


எங்களுக்கு ஜோசியர் சொன்னது அம்பாள் சின்ன அம்பாளாக இருப்பாள் என்றார்.


மதியம் நான்கு மணிக்கு திரும்பவும் சென்னை நோக்கி பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகவேண்டும்  இருக்கின்ற நேரம் மிக குறைவு. 12மணியளவில் சந்நிதியின் நடையை சாத்தி விடுவார்கள். 


அம்பாளின் மீது பாராத்தைப் போட்டு எனது தாயாருக்கு தெரிந்த மலையாள நண்பரை விஜாரித்த போது.


அவர்கள் கூறியது ,அம்பாள் சிவனோட தான் இருப்பார். செங்கனூர் மஹாதேவர் கோவில் என விசாரிக்கச் சொன்னார்.


மஹாதேவர் சந்நிதி எங்குள்ளது என விசாரித்தால். என்ன அதிசயம் நாங்கள் தங்கி இருந்த லாட்ஜ்க்கு  பின்புறம் மஹாதேவர் கோவில்.


உடனே கோவிலை நோக்கி பயணம் ஸ்வாமி தரிசனம் முடிந்து அம்பாள் தரிசனம். 


எல்லாம் அம்பாளின் அருளால் நன்கு நடந்தது. அவள் எங்களை அவளது எல்லை தங்க வைத்து அவளது இருப்பிடத்தை காட்டினால் .


அம்பாளை தரிசிக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பம் இருந்தால் அது நடக்கும் இல்லையேல் அன்று அம்பாள் தரிசித்தை பார்க்கலாமே ஊர் திரும்பி இருப்போம்.


இதில் அதிசயமான விஷயம் அப்பா தலைமுறை மற்றும் என் தலைமுறை கடந்து. 


எனது மனைவி எனது சீமந்த புத்திரனை மகப்பேறின் போது அம்பாள் தரிசத்தனத்தை கொடுத்தால்.


எனது ஜாகத்தில் எங்க தேவியைப் பற்றி தெரியவந்தது.


எனது சீமந்த புத்திரனின் ஜனனத்தின் போது தான் அம்பாள் இருப்பிடம் தெரியவந்தது.


எல்லாம் இறைச்செயல் எப்போது தன்னை தரிசிக்க வேண்டும் என்பதை அவள் முடிவுச் செய்கிறாள்.


அதன் பிறகு தான் தாத்தாவிற்கு மற்றும் பேரனுக்கும் ஒன்றாக முடிக்காணிக்கைச் செலுத்தினோம்.


அதன் பிறகு வருடா வருடம் அம்பாளை தரிசிப்பது வழக்கம்.


ஆனால் கிட்டதட்ட 12வருடங்களுக்கு பிறகு தான் அம்பாள் மாதவிடாய் காலத்தில் அம்பாளை தனி அறையில் வைத்து பூஜித்த போது அம்பாளை தரிசிக்கும் பாக்கியம்.


எனவே மஹாபெரியவா சொன்ன மாதிரி நமது அடுத்த தலைமுறைக்கு நமது குடும்ப வழக்கத்தையும் குலத்தெய்வத்தை பற்றி சொல்லுவது நமது தலையாய கடமை.


ஆனால் அதன் பிறகு அவர்கள் செல்வதும் செல்லாததும் அவர்களது விருப்பம்.


இவ்வளவு பெருமைகள் வாய்ந்த கோவிலை மற்றவர்கள் அறியவேண்டும் என்பதற்காக இந்த நீள்பதிவு.


கோவிலைப்பற்றிய பதிவு.


பிரசாதங்கள் & பிரசாதங்கள்


பாயாசம் 1/4 லிட்டர், அரவணை, வெல்ல நிவேதம் 1/4 லிட்டர், அப்பம், பால்பாயாசம் 1/4 லிட்டர், திரிமதுரம்.


போக்குவரத்து


விமானம் மூலம்: 


அருகிலுள்ள விமான நிலையம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம், சுமார் 119 கி.மீ.


ரயில் மூலம்: 


அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கன்னூர், சுமார் ஒரு கி.மீ.;


திருவல்லா, சுமார் 10 கி.மீ. 


மற்றும் செங்கனாச்சேரி, சுமார் 18 கி.மீ.


சாலை வழியாக: 


செங்கனூர் ஆலப்புழா மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.


 இது எம்சி சாலையில் திருவல்லா மற்றும் பந்தளம் இடையேயும், 


ரயில் பாதையில் திருவல்லா மற்றும் மாவேலிக்கரை இடையேயும் அமைந்துள்ளது. 


செங்கனூர் மகாதேவா கோவில் ரயில் நிலையம் மற்றும் KSRTC பேருந்து நிலையம் இரண்டிலிருந்தும் 1 கிமீ தொலைவில் உள்ளது.


தொடர்பு


ஸ்ரீ மகாதேவர் கோவில், செங்கனூர்


தொலைபேசி: 0479 2450555


#ஓம்செங்கனூர்பகவதியேநமஹ#.



Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).