பாதாரவிந்தத்தில் சரணாகதி?

எவ்வாறு அம்பாள் பாதாரவிந்தத்தில் சரணாகதி?


சில விஷயங்கள் காலகடந்து தான் தெரிகிறது. 


அவ்வாறான ஒன்று தான் அம்பாளுடன் எனக்கு ஏற்பட்ட பிணைப்பு.


முன்பு பதிவிட்டது போல் 2004-2005 ஆண்டு குலத்தெய்வம் வழிபாடு . அது எனது 32வயதில் தரிசனம்.


இது முடிந்த பிறகு  அம்பாள் உபசாகர் ஒருவர் மூலம் எங்கள் வீட்டில் பதினாறு விளக்குகளில் அம்பாளை ஆவாஹணம் செய்து துர்கா ஸப்தசதி பாராயணம் நடந்தது.


அந்த காலகட்டத்தில் இதைப்பற்றிய நான் அதிகம் அறியாத காலகட்டம்


சப்தசதி பாராயணம் முடிந்த பிறகு அம்பாள் உபாசகர் பூஜையில் வைத்து வழிபட்ட ஶ்ரீலலிதா திரிபுர சுந்திரியின் திருவுருவ படம்  எங்கள் வீட்டிற்கு வந்து அடைந்தாள்.  


அவரின் உபதேசம் தினமும் ஶ்ரீலலிதாசஹஸ்ர நாம பாராயண செய்யச் சொல்லி அறிவுரைச் செய்தார்.


இது முடிந்து கிட்டத்தட்ட 2014வாக்கில் என மனைவியின் அறிவுறுத்தலின் படி ஸ்வாமிக்கான பூஜைகள் தினம்தோறும் ஆரம்பித்த காலகட்டம்.


தீடீரென்று 2018ல் வாழக்கையில் ஒரு தடுமாற்றம் அப்போது எந்த வழியில் செல்லலாம் என நினைத்தப்போது.


நான் தீர்மானித்தது ஆன்மீக வழியில் செல்லாம் என்ற எண்ணம் எனது மனதில் உதயமானது.


அப்போது தான் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம பாராயணம் ஆரம்பம் ஆன காலக்கட்டம்.


சரி பாராயணம் செய்யலாம் என்ற எண்ணும்போது அதன் அர்த்தம் தெரிந்து செய்யலாம் என எண்ணி.


அதன் அர்த்ததை தேடும்போது அதில் பலவிதமான நுட்பமான விஷயங்கள் என புலம்பட ஆரம்பித்தது.


அது வெறும் திருநாம மற்றும் அல்ல அது நமது வாழ்வியல் முறை பலவற்றை எடுத்து கூறுகிறது என்பதை உணர முடிந்தது.


அப்போது தான் முகநூலில் காமாக்ஷி தாசர் ஸ்வாமிகள்ப் பற்றிய ஒரே பதிவை கணடேன். 


எனவே நானும் மற்றும் எனது நண்பரும் அவரை பார்பதற்கு அவரது இல்லம் நோக்கிய பயணம். அவரது இல்லம் பெருகளத்தூரிலிருந்து கிட்டதட்ட 2கீமி தொலைவில் இருந்தது. எனவே அவரை தரிசிப்பதற்காக அவரது இல்லம் நோக்கி பயணம்.


நல்ல மழை மற்றும் இரவு நேரம் இடத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் அம்பாளின் கிருபையால் அன்று  அவரது ஆசீர்வாதமும் மற்றும் மந்திர உபதேசம் கிடைக்கப் பெற்றது 


இது முடிந்து இரண்டு ஒரு மாதத்தில் அவர் முக்தி அடைந்துவிட்டார்.


சமீபத்தில் எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவரை சந்ததித்த போது நானும் சுவாமிகளைப்பற்றி கேள்விப் பட்டேன். ஆனால் அவரை சந்திக்கும பாக்கியம் கிடைக்கவில்லை என கூறினார்.


எல்லோருக்கும் எல்லாவிதமான ப்ரதம் அமைவது இல்லை என்பதை உணரமுடிந்தது.


அவரை சந்தித்த பிறகு அம்பாளின் மீது ஈடுபாடு மிக அதிகமானது.


ஒரு பக்கம் ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம பாரயணம் மற்றும் அதைப்பற்றிய தமிழ் பொழிப்புரை பதிவு.


இது என்னை மேலும் அம்பாளின் மீது பக்தியை ஏற்படுத்தியது.


மேலும் எவ்வாறு அம்பாளின் மீது ஈர்ப்பு வந்தது என்பதை நாளைய பதிவாகலாம்.


இந்த மாதிரி எனது பதிவை பதிவர்தற்கான காரணம் அம்பாள் எவ்வாறு நம்மளை கொஞ்சம் கொஞ்சமாக பக்குவபடுத்துகிறாள் என்பதை விளக்குவதற்கான எனது அனுபவத்தை பதிக்கிறேன்.


https://mahaperiyavaa.blog/2013/02/14/64000-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-shri-kamaksh/


Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).