#அபிராமிஅந்தாதி56வதுபாடல்
#அபிராமிஅந்தாதி56வதுபாடல்
ஒன்றாய் அரும்பி
பலவாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய்
நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள்
என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது
நின்று புரிகின்றவாறிப்
பொருள் அறிவார்
அன்று ஆலிலையில்
துயின்ற பெம்மானும்
எம் ஐயனுமே.
அபிராமி என்பது யார்?
அந்த மாபொருள் என்ன?
இதை யாரேனும் விளக்க முடியுமா?
விளக்க முற்படுகிறாற் பட்டர் இங்கே.
அவள் ஒன்றாய் இருக்கிறாள்.
எதில் ஒன்றாய் இருக்கிறாள்
#அவளேஆதிபராசக்தி.
#அவளேலோகரக்க்ஷி
#அவளேஜகத் ஜனனி
எங்கு காணப்படும் பொருளும் அவளே.
பின்னர்,
அவளே,
உலகில் உள்ள அனைத்து பொருள்களாகவும் விரிந்து
பரந்து காணப்படுகிறாள்.
#அவளேமுப்பெருந்தேவி#
லெக்ஷ்மி சரஸ்வதி பார்வதி
#அவளேமுப்பிரம்மாக்கள்
பிரம்மா விஷ்ணு சிவன்
இதை தான் ஶ்ரீலலிதா சஹஸ்ரநாமம்
#பஞ்சப்ரேதசனா என்கிறது.
#பஞ்சப்ரேதங்கள்:
பிரம்மா, விஷ்ணு, ஈஸ்வரன்,
அடுத்த நிலை
மறைத்தல் மற்றும் அருளுதல்
ருத்ரா மற்றும் சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களைக் குறிக்கிறது.
'ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து' என்ற தொடர்,
நமக்கு,
ஒரு சிறு விதை மிகப்பெரும் ஆலமரமாக விரிவதைப் போன்ற காட்சியை நம் மனதில் எழுப்பு கின்றது.
அப்படி, இந்த உலகு முழுவதுமாக நிற்பவள்,
இந்த அனைத்திலுமிருந்து இணையாமல்,
தள்ளியும் நிற்கிறாள்.
ஒட்டியும் ஒட்டாமல்,
தாமரை இலைத் தண்ணீர் போல நின்றும் காட்சி தருகிறாள்.
இப்படி, இருந்தும் இல்லாமலும் ஒட்டியும் ஒட்டாமலும்,
அவள் செய்யும் லீலைகளை,
யார்தான் அறிய முடியும்?
அப்படிப்பட்ட பரம்பொருள்,
எனது நெஞ்சினுள்ளே நின்று பொலிகின்றதே இது என்ன அதிசயம்!
இதனை அறியக் கூடியவர்கள்,
அந்த சிவபெருமானும்,
அன்றொருனாள் ஆலிலையில் துயின்ற அந்த கண்ண பரமாத்மாவும்தான் என்று
பேசி முடிக்கிறார் பட்டர்.
இந்தப் பாடலில் மிகச் சுவையான விஷயங்கள் நிறைய உள்ளன.
பாடலைப் படிக்கும்போது,
அருணகிரினாதரின், "உருவாய், அருவாய், உளதாய், இலதாய்"
என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.
அந்தப் பாடலிலே, அருணகிரினாதரும் கூட,
முருகப் பெருமானின் தன்மையைப் பற்றிப் பேச வரும்போது,
'இருப்பவன்,
எனினும்,
இல்லாதவன்;
உருவம் உள்ளவன்
ஆனாலும்,
உருவம் இல்லாதவன்'
என்றுதான் ஆரம்பித்துப் பேசுகிறார்.
இப்படிப்பட்ட தத்துவத்தை அறிந்தவர்கள்,
எனது ஐயனான
சிவ பெருமானும், அந்தத் திருமாலும்தான் என்று சொல்ல வந்த பட்டர்,
திருமாலைக் குறிப்பதற்கு,
அன்று ஆலிலையில் துயின்ற பரமன்' என்று சுட்டுகிறார்.
திருமாலைக் குறிக்க ஆயிரம் திருநாமங்கள் இருக்க,
'ஆலிலையில் துயின்ற' பரமனைச் சொன்னது ஏன்?
யோசித்துப் பார்த்தால், அன்று ஆலிலையில் துயின்றவனும் இந்த உலகில் இருந்தும் இல்லாமல் இருந்தான்.
ஒட்டியும் ஒட்டாமல் இருந்தான்.
சிறு பிள்ளை போல் தோற்றம் அளித்தாலும்,
இந்தப் பெரும் உலகினையே மூடிய அந்த மகா பிரளயம் கூட அந்தப் பரமனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
அத்தனை உலகினையும் தனக்குள் அடக்கிக் கொண்டும்கூட, அந்தச் சிறுபிள்ளை, இந்த உலகின் மேலேயே படுத்துக் கிடந்தது.
இங்கு பட்டர் அபிராமி அன்னையின் குணங்களாக என்னவெல்லாம் சொன்னாரோ,
அத்தனையையும், ஆலிலையில் துயின்ற அந்தச் சிறுபிள்ளை செய்திருக்கிறது.
காரணம் அவளே நாராயணி அவளே நாராயணன் சொரூபம்.
அவளே சோட்டாணிகரையில் வீற்றிருக்கிறாள்.
அதனால் தான் பட்டர் இவ்வாறு கூறினார்.
இதன் மற்றொரு அர்த்தம்.
எட்டாவது குழந்தையான கிருஷணரை கோகுலத்தில் விட்டுவிட்டு யசோதை பிறந்த குழந்தையை எடுத்து வந்து துவாரகை சிறையை
அடைந்தவுடன், அந்த குழந்தை அழ ஆரம்பித்தது அழ ஆரம்பித்தது.
அது அழ ஆரம்பித்தவுடன் அதை கம்சன் வெட்ட முற்படும்போது ,அந்த குழந்தை கம்சனின் கையை விட்டு மேலேச் சென்று.
உன்னை கொல்வதற்கு சிறுபாலகனாக குழந்தையாக கோலத்தில் வளர்க்கிறான் என சொல்லி மறைந்தது.
மறைந்தது காளி சொரூபம் கோலத்தில் வளர்வது கருநிறமான கிருஷ்ணன்.
அதனால், அந்தப் பரமனை இவ்வாறு சுட்டியதும் பொருத்தமாகவே தோன்றுகிறது!
ஒன்றாய் அரும்பி - ஒரே பொருளாய் முதலில் அரும்பி
பலவாய் விரிந்து - பல பொருட்களாய் விரிந்து
இவ்வுலகு எங்குமாய் நின்றாள் -
இவ்வுலகம் எங்கும் இருக்கும் பொருட்கள் எல்லாமும் ஆகி நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள் -
அவை எல்லாவற்றையும் தாண்டியும் நிற்பாள் (அப்பாலுக்கு அப்பாலாய்)
என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு -
(அப்படிப்பட்டவள் சிறியேனான)
என் நெஞ்சினுள்ளே எப்போதும் நீங்காது நின்று எல்லாவற்றையும் நடத்துகின்றாள்.
இப்பொருள் அறிவார் -
(அவ்வளவு பெரியவள் இந்தச் சிறியவனின் நெஞ்சில் நின்று, அணுவிற்கு அணுவாய் இருந்து, எல்லாவற்றையும் நடத்தும்) இதன் மாயம் அறிவார்கள்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே -
பிரபஞ்சங்கள் தோன்றும் முன் அவற்றைத் தன் வயிற்றில் வைத்துக் கொண்டு சிறு பாலகனாய் ஆலிலையில் துயின்ற மாயவனும்
என் ஐயனான சிவபெருமானுமே.
***
அந்தாதித் தொடை:
சென்ற பாடல் ஒன்றில்லையே என்று நிறைய இந்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கியது.
இந்தப் பாடல் ஐயனுமே என்று நிறைய அடுத்தப் பாடல் ஐயன் அளந்தபடி என்று தொடங்கும்.
இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

Comments
Post a Comment