பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா
#பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா
இதற்கு முந்தைய நாமமான,
#நகதீதிதிஸஞ்சன்னநமஜ்ஜனதமோகுணா…’’
என்று நகங்களைப்பற்றி பார்த்தோம்.
இந்த வர்ணனையில்
இந்த பாதத்தை நமஸ்கரிப்பவன் உடைய தமோகுணம் என்கிற இருட்டை,அறியாமையை ஒளிமயமான அம்பிகையின் கால் நகங்கள் எப்படி நீக்குகிறது என்று பார்த்தோம்.
இந்த நாமமான,
#பதத்வயப்ரபாஜாலபராக்ருதஸரோருஹா…’’
என்கிற இந்த நாமமானது,
மொத்தமாக அம்பிகையினுடைய திருவடிகளை சொல்கிறது.
இதற்கு முன்பு அம்பிகையினுடைய கணுக்கால்,
பாதத்தினுடைய மேற்பரப்பு,
நகங்களை தனியாகப் பார்த்தோம்.
இப்படியே ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்துக்
கொண்டே வந்தோம்.
இப்போது,
மொத்தமான திருவடியை இந்த நாமம் வர்ணிக்கின்றது.
இந்த நாமாவினுடைய அர்த்தத்தை பார்ப்பதற்கு முன்பு,
#பதத்வய’’ என்கிற வார்த்தை
அடுத்து வருகிற
#ப்ரபாஜாலா…’’ என்கிற நாமத்தை கொஞ்சம் விட்டுவிடுவோம்.
#பதத்வயபராக்ருதஸரோருஹா…’’
என்கிற பதத்தை எடுத்துக் கொள்வோம்.
இதில் வருகிற #ஸரோருஹம் எனில் #தாமரை என்று பொருள்.
#பராக்ருஹஸரோருஹா என்று சொன்னால்,
#தாமரையைவிட…
அதாவது தாமரையே வெட்கப்படும்படியாகச் செய்யும், தாமரையையே மதிப்பிழக்கச் செய்யும்.
ஸரோருஹம் என்கிற தாமரையை மதிப்பிழக்கச் செய்யும்.
எதுவெனில், #பதத்த்வயம்…
அதாவது இந்த அம்பிகையினுடைய இரண்டு பாதங்கள் இருக்கின்றனவே.
அவை இரண்டும் தாமரையையே வெட்கப்படும்படிச் செய்யும்.
இதற்கு நடுவே
#ப்ரபாஜாலா… என்கிற ஒரு வார்த்தையை போட்டிருக்கிறார்கள்
#ப்ரபை என்றால் ஒளி என்று பொருள்.
அந்த ஒளிக்கு ஒரு ஜாலம் இருக்கிறது.
இப்போது மொத்தமாக இதன் பொருளைப் பார்க்கலாமா!
தாமரையை மதிப்பிழக்கச் செய்யும் திருவடி எதனால் என்று பார்த்தால், தன்னுடைய ஒளியினால் மதிப்பிழக்கச்செய்கிறது.
அது சரி. அதெப்படி முடியும்.
தாமரைக்கும் அம்பிகையின் திருவடிக்கும் என்ன ஒப்புமை
எனில், தாமரை மென்மையானது.
அம்பிகையின் திருவடியும் மென்மையானது.
தாமரை வாசம் மிகுந்தது.
அம்பிகையின் திருவடியும்
வாசம் மிகுந்தது.
தாமரை குளத்தில் பூக்கக் கூடியது.
அம்பிகையினுடைய திருவடி பக்தனுடைய மனம் என்கிற
குளத்தில் பூக்கக் கூடியது.
அதற்குப் பிறகு தாமரையைத் தேடி தேனீக்கள் வரும். வண்டுகள் வரும்.
அம்பிகை என்கிற திருவடியைத் தேடி ஞானி என்கிற வண்டு வரும்.
இப்படியே அம்பிகையினுடைய திருவடி, தாமரை என்று ஒப்புமை இருந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், இங்கு மதிப்பிழக்கச் செய்யும் என்று சொல்லி விட்டார்கள் அல்லவா?
ஆக, தாமரையைவிட அம்பிகையின் திருவடி ஒரு படி மேலே யிருந்தால்தானே மதிப்பிழக்க முடியும்.
அந்த ஒரு படி மேலே இருக்கிறது
என்பதை நாளை பதிவாக காணலாம்.

Comments
Post a Comment