#அபிராமிஅந்தாதி53வதுபாடல்

 #அபிராமிஅந்தாதி53வதுபாடல்



சின்னஞ் சிறிய மருங்கினில் 


சாத்திய செய்ய பட்டும்


பென்னம் பெரிய முலையும்,


 முத்தாரமும், 


பிச்சி மொய்த்த


கன்னங்கரிய குழலும், 


கண் மூன்றும், 


கருத்தில் வைத்துத்


தன்னந்தனி இருப்பார்க்கு, 


இது போலும் 


தவம் இல்லையே.


ஏ, அபிராமி! 


மென்மையான இடையில்,


 செம்மையான பட்டணிந்தவளே!


அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! 


வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! 


ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே!


உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.


தன்னந்தனியிருப்பார்க்கு 


இது போலும் தவமில்லையே


சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும் - 


உன் சின்னஞ்சிறிய இடையில் அணிந்திருக்கும் சிவந்த பட்டாடையையும்


பென்னம்பெரிய முலையும் - 


உன் பெரிய முலைகளையும்


முத்தாரமும் - 


அந்த முலையின் மேல் இருக்கும் வெண் முத்து மாலையையும்


பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் - 


பிச்சிப்பூ சூடியிருக்கும் கரிய கூந்தலும்


'சின்னஞ்சிறு பெண் போலே' என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது.


 'சிற்றாடை இடை நிறுத்தி' என்னும் போதும் 


பிச்சிப்பூ சூடி நிற்பாள்' என்னும் போதும்.


கண் மூன்றும் - 


மூன்று கண்களையும் -அவள் முக்கண்ணி


கருத்தில் வைத்துத் - 


மனத்தில் நிறுத்தி


தன்னந்தனியிருப்பார்க்கு - 


மற்ற எந்த நினைவுகளும் இன்றித் தன்னந்தனியாக இருப்பவர்களைப் போல்


இது போலும் தவமில்லையே - தவத்தில் சிறந்தவர்கள் வேறு எவருமில்லை.


***


தாய்ப்பால் உண்ணும் குழந்தையின் கவனமெல்லாம் தாயின் முலை மீதே இருக்கும். 


அபிராமி அன்னையின் தவப்  புதல்வனான அபிராமி பட்டரின் கவனமும் தாயின் பெரிய முலைகள் மீதே இருக்கிறது.


தன்னந்தனியாக மற்ற யாரும் இல்லாமல் இருப்பது தவமாகாது.


பலவிதமான எண்ணக் கூட்டங்களுடன் இருக்கும் வரை தன்னந்தனியாக யாரும் இருப்பதில்லை. 


வேறு வித எண்ணங்கள் எதுவுமின்றி அன்னையின் திருவுருவம் ஒன்றே மனத்தில் நிற்கும் போது தான் தன்னந்தனியாக இருப்பது சாத்தியமாகிறது; 


அப்படி இருப்பவர்களை விட தவத்தில் சிறந்தவர் வேறு எவரும் இல்லை.


'சின்னஞ்சிறு பெண் போலே' என்று தொடங்கும் பாடல் இந்தப் பாடலின் எதிரொலி போல் எனக்குத் தோன்றுகிறது.


 'சிற்றாடை இடை நிறுத்தி' என்னும் போதும் 'பிச்சிப்பூ சூடி நிற்பாள்' என்னும் போதும்.


***

Comments

Popular posts from this blog

துஷ்ட சக்திகள் விலக Deliverance from the hold of evil spirits

தனது பக்தைக்காக ஶ்ரீலலிதா சஹஸ்ர நாம உச்சரிப்பை மாற்றிய அம்பாள்ச

பெண் குழந்தைகளுக்கு வைப்பதால் அதன் சிறப்பு).